கேதார்நாத் குகையில் மோடி தியானம்

Updated : மே 18, 2019 | Added : மே 18, 2019 | கருத்துகள் (85)
Advertisement

புதுடில்லி : கடந்த 2 மாதங்களாக நடந்து வந்த லோக்சபா தேர்தல் பிரசாரங்கள் நேற்று (மே 17) மாலையுடன் முடிவடைந்த நிலையில் பிரதமர் மோடி இன்று (மே 18) காலை உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத் கோயிலுக்கு சென்று வழிபட்டார். பின் அங்கிருந்த குகையில் தனிமையில் அமர்ந்து தியானம் செய்தார்.
திடீரென மோடி, கேதார்நாத் கோயிலுக்கு சென்றதன் காரணம் என்ன ? என அரசியல் வட்டாரத்தில் கேள்வி எழுந்துள்ளது.





மகாபாரத போருக்கு பிறகு சிவபெருமானை தரிசிக்க பாண்டவர்கள் புனித யாத்திரை மேற்கொண்டனர். அப்போது சிவபெருமான் கைலாயம் சென்று விட்டதால் அங்கேயே சென்று சிவனை தரிசிக்க நினைத்து பாண்டவர்கள் இமயமலையை அடைந்த போது, தொலைவில் சிவபெருமானை கண்டுள்ளனர். சிறிது நேரத்தில் சிவபெருமான் மறைந்து விட்டதால், அவரை தரிசிக்காமல் திரும்ப கூடாது என்ற முடிவில் பாண்டவர்கள் அங்கேயே தவம் செய்துள்ளனர்.
அவர்களுக்கு காட்டெருமை வடிவில் சிவன் காட்சி கொடுத்ததுடன், ஜோதிர்லிங்கமாகவும் அருள்பாலித்தாக கேதார்நாத் கோயில் வரலாறு கூறுகிறது. இமயமலையில் அமைந்துள்ள இக்கோயில் ஏப்ரல் முதல் தீபாவளி வரையிலான காலங்களில் மட்டுமே திறந்திருக்கும்.




போருக்கு பிறகு பாண்டவர்கள் கேதார்நாத் வந்து சிவனை வழிபட்டது போல், தற்போது நடந்து வந்த தேர்தல் எனும் போர் முடிந்து விட்டதால் பிரதமர் மோடியும் அங்கு சென்று வழிபாடு நடத்தி இருக்கலாம் என பா.ஜ., கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மழையில் நனைந்தபடி கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்திய மோடி, பின்னர் பாண்டவர்கள் தவம் செய்ததாக கூறப்படும் நதிக்கரையில் உள்ள சிறிய குகைக்குள் சென்று, காவி ஆடை அணிந்து தியானம் செய்தார். தொடர்ந்து இங்கு அவர் 20 மணி நேரம் இருப்பார் என்று கூறப்படுகிறது. கேதார்நாத்தில் நடக்கும் ஆரத்தி நிகழ்ச்சியிலும் மோடி கலந்துகொள்வார்.







Advertisement




வாசகர் கருத்து (85)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kumar periyaar - Chennai,இந்தியா
20-மே-201913:49:08 IST Report Abuse
Kumar periyaar இந்த நூற்றாண்டின் சிறந்த நடிகர்
Rate this:
Share this comment
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
22-மே-201914:34:41 IST Report Abuse
Chowkidar NandaIndiaபிறவி நடிகன் பப்பு தான் சூப்பர். எவ்வளவு பெட்?...
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
20-மே-201913:20:17 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> ஜஸ்ட் தமிழ்நாட்டுல சுத்திட்டுகத்திட்டு ரெஸ்ட்க்கு சுடாலின் கோடைகானல்லே போயி ரெஸ்ட் எடுக்கலாம் கிழக்குமுதல் மேற்குவரை வடக்கிலேந்து தென்முனை வரை சுத்தி இருக்காரே மோடிஜி அவர் ரெஸ்ட் எடுத்தால் என்னங்க தப்பு குடும்பமாவா போனாரு ஜஸ்ட் 18 மணிநேரம் மெடிடேஷன் செய்துட்டுவரவும் அவருக்கு உரிமை இல்லியா தினம் ஒரு பிரதமராகா அவர் வேலை செய்யும் நேரம் எவ்ளோ தெரியுமா இரவில் உறங்கும் நேரம் ஜஸ்ட் நாலுமணிநேரம் வாழ்க்கையே அவ்ளோ டிசிப்ளின் ஆஹா இருக்காரே ராகுல் எவ்ளோமுறை அவரை திருடன் என்று சொல்லினே இருந்தான் இறுதியிலேதான் பதிலுக்கு அவனை பேசினார் , எல்லா நலன்களையும் அனுபவிச்சுண்டு அவரையே ஏசினால் மகா கேவலம்
Rate this:
Share this comment
Cancel
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
19-மே-201921:47:38 IST Report Abuse
Swaminathan Chandramouli ஏன் பிரியங்கா காந்தி உஜ்ஜைன் மகா காளேஸ்வரர் கோயிலுக்கு பொய் கும்பிடவில்லையா > ஒரு மசூதிக்கு சென்று தொழுகை நடத்தவில்லையா? அதை ஏன் சர்ச்சைக்கு உரியதாக மம்தா ஆன்டி ஆக்கவில்லை ? பிரியங்கா செய்தால் அது சரி என்று ஒப்புக்கொள்ள முடியுமா ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X