பொது செய்தி

இந்தியா

அடுத்த ஆண்டு வெயில் கொளுத்தும்

Updated : மே 18, 2019 | Added : மே 18, 2019 | கருத்துகள் (11)
Share
Advertisement
புனே : 2020 ம் ஆண்டு துவக்கம் முதல் இந்தியாவில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என இந்திய வெப்ப மண்டல ஆய்வு மையம் (IITM - Indian Institue of Tropical Meteorology) எச்சரித்துள்ளது.ஐஐடிஎம் நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது, எல் நினே மொடோகி (El Nino Modoki), இது எல் நினேவில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. இந்தியாவில் வெப்பம் அதிகரிக்க எல் நினே மொடோகியே காரணம். இது மண்ணில் உள்ள ஈரப்பதத்தை குறையச்

புனே : 2020 ம் ஆண்டு துவக்கம் முதல் இந்தியாவில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என இந்திய வெப்ப மண்டல ஆய்வு மையம் (IITM - Indian Institue of Tropical Meteorology) எச்சரித்துள்ளது.latest tamil news


ஐஐடிஎம் நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது, எல் நினே மொடோகி (El Nino Modoki), இது எல் நினேவில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. இந்தியாவில் வெப்பம் அதிகரிக்க எல் நினே மொடோகியே காரணம். இது மண்ணில் உள்ள ஈரப்பதத்தை குறையச் செய்வதுடன், பூமியில் இருந்து வளிமண்டலத்திற்கு வெப்பத்தை கடத்தும். 2020 முதல் 2064 வரை இந்த நிகழ்வு நடைபெறும் என்பதால் தென்னிந்திய பகுதிகள் மற்றும் கடலோர பகுதிகள் கடுமையாக பாதிக்கப்படும். வெப்பத்தில் இருந்து தப்பிக்க பலர் இடம்பெயரும் நிலையும் ஏற்படலாம்.


latest tamil news


இந்தியாவின் பல பகுதிகளிலும் வெப்பத்தின் தாக்கம், வெப்பத்தின் அளவு ஆகியன மாறுபடலாம். படிப்படியாக இந்தியா முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால் உடல்நிலை பாதிப்புக்களும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news


54 அனல் காற்று விகித மாறுபாடுகளை 1961 ம் ஆண்டு முதல் 2005 ம் ஆண்டு வரை ஆய்வு செய்ததில் இது தெரிய வந்துள்ளது. எல் நினே மொடோகியின் தாக்கம் காரணமாக மத்திய மற்றும் பசிபிக் கடலில் வெப்பம் வெகுவாக அதிகரிக்கும். வடமேற்கு மாநிலங்களை பொறுத்தவரை மண்ணின் ஈரப்பதம் முற்றிலும் உலர்ந்து போகும் நிலை ஏற்படும். மண்ணின் ஈரப்பதம் குறைய குறைய வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்கும்.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
19-மே-201914:02:34 IST Report Abuse
அம்பி ஐயர் இந்த வருஷமே தாங்க முடியல.... இன்னமும் முடிந்த பாடில்லை.... அதுக்குள்ள அடுத்தவருடம் கோடை பற்றியா....??? பயமா இருக்கே....
Rate this:
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
19-மே-201901:45:48 IST Report Abuse
 nicolethomson வெப்பம் அதிகரிக்கும் என்றால் மழையின் அளவு குறையுமா? அல்லது போனவருடம் கேரளா கருநாடகாவின் பகுதிகளை உலுக்கிய மழையின் பிறகு பூமி அதிக அளவில் வறண்டது போன்று காணப்பட்டதே அது போல நடக்குமா?
Rate this:
Cancel
Raj - Chennai,இந்தியா
18-மே-201923:30:21 IST Report Abuse
Raj இதுக்கு ஐஐடி தேவை இல்லை எல்லாம் தெரிந்த விஷயம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X