மக்கள் மனநிலை: பா.ஜ., ‛எக்ஸ்-ரே'

Updated : மே 18, 2019 | Added : மே 18, 2019 | கருத்துகள் (33)
Advertisement

புதுடில்லி: ஏறத்தாழ 1.05 லட்சம் கி.மீ., துாரம்... 160 பொதுக்கூட்டங்கள்... என இந்த தேர்தலில் பிரதமரின் பிரசாரம் நாட்டின் அனைத்து திசைகளையும் உள்ளடக்கியதாக அமைந்தது.

மோடியை விட 312 லோக்சபா தொகுதிகளில் பிரசாரம் செய்தார் அமித்ஷா. உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் 135 கூட்டங்களிலும், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 129 கூட்டங்களிலும், நிதின் கட்கரி 56 கூட்டங்களிலும் ,சுஷ்மா சுவராஜ் 23 கூட்டங்களிலும் பேசினர். நாளை (மே 19) கடைசிக் கட்ட ஓட்டுப்பதிவு நடப்பதற்கு முன்பாக இத்தனையும் நடந்து முடிந்துவிட்டது.


பெரும்பாலான பிரசாரம் எங்கே:


மார்ச் 28ம் தேதி உ.பி.,யில் மீரட்டில் தான் முதல் கூட்டத்தில் பேசினார் மோடி. கடைசிக் கூட்டம் ம.பி.,யில் கார்கோன் என்ற இடத்தில் மே 17ம் தேதி நடந்தது. ஒரே நாளில் நாலைந்து கூட்டங்களில் கூடமோடி பேசினார்.
ஏப்.18 ம் தேதி ஒரு நாளில் மட்டும் 4 ஆயிரத்து 500 கி.மீ., துாரம், அதாவது குஜராத்தில் உள்ள அம்ரோலியில் இருந்து கர்நாடகாவில் உள்ள பக்லகோட், சிகோடி மற்றும் கேரளாவில் திருவனந்தபுரம் ஆகிய இடங்களுக்கு பறந்து சென்றார்.
மோடி பிரசாரத்தில் 40 சதவீதம் உ.பி., மே.வங்கம் மற்றும் ஒடிஷாவில் மட்டும் அமைந்தன. இந்த மாநிலங்களில் மட்டும் 143 லோக்சபா தொகுதிகள் அமைந்துள்ளன. இந்த தொகுதிகள் பா.ஜ.,வுக்கு முக்கியமானவை.


எங்கு கூட்டம் அதிகம்:


மோடியின் பேச்சைக் கேட்க அதிக கூட்டம் வந்தது கோல்கட்டாவில் தான். இங்கு மம்தாவின் திரிணாமுல் கட்சி ஆட்சியில் இருந்தாலும், இம்முறை பா.ஜ., நிறைய ஓட்டுகளை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மோடி அரசின் பயனாளர்கள் 24.81 கோடி பேரை பா.ஜ.,வின் விளம்பர குழுக்கள் தொடர்பு கொண்டன. நமோ ஆப் மூலம் 115 தொகுதிகளை சேர்ந்த பா.ஜ., பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் மோடி பேசினார்.


பிரசாரத்தின் மூலம் பா.ஜ., கண்டுபிடித்தது என்ன:


1.கட்சியில் தன்னை வலுவான, தீர்மானமான தலைவராக மோடி காட்டிக்கொள்ள முடிந்தது
2.மோடிக்காக தற்போதுள்ள பா.ஜ., எம்.பி.,க்கள் மீதான கோபத்தை மக்கள் ஓரம் கட்டி வைத்தனர்.
3.நாட்டில் உள்ள 18 - 19 வயதுக்குட்பட்டவர்கள் மோடியை ஆதரிக்கிறார்கள்.
4.மோடிக்கு அதிக பெண்கள் ஆதரவு இருக்கிறது.
5.மேலே சொன்ன காரணங்களை ஒப்புக்கொள்ளாதவர்களுக்கும் மோடியை விட தேர்வு செய்ய வேறு ஆளும் இல்லை.இவையே பா.ஜ.,வின் கணிப்புகள்.
இதையெல்லாம் மனதில் வைத்து தான் 300 தொகுதிகளை பா.ஜ., பிடிக்கும் என்று மோடியும் அமித்ஷாவும் நம்புகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sundarsvpr - chennai,இந்தியா
19-மே-201916:16:58 IST Report Abuse
sundarsvpr எல்லா கட்சி தலைவர்கள் தோற்றால் என்ன அறிக்கை வெற்றி பெற்றால் என்ன கூறுவது என்பதை தயார் செய்து வைத்திருப்பார்கள். ஆனால் மக்கள் முடிவு வரும்வரை எந்த நினைப்பும் இருக்காது. சஞ்சலமும் இருக்காது. கண்ணன் கீதோபதேசம் " என்கடன் பணிசெய்வதே பலனை எதிர்பாராதே " அதுபோல் மக்கள் கீதை என் கடன் வாக்குஅளிப்பதே பலனை அறுவடைசெய்வது ஆள்பவர்களே
Rate this:
Share this comment
Cancel
Srivatsava -  ( Posted via: Dinamalar Android App )
19-மே-201906:12:14 IST Report Abuse
Srivatsava
Rate this:
Share this comment
Cancel
Anandan - chennai,இந்தியா
19-மே-201903:28:46 IST Report Abuse
Anandan பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ஒரு கேள்விக்கும் பதில் சொல்ல தெரியாம திருவிழாவில் காணாமல் போன குழந்தை முழித்தவர் தலீவர் அவரை உலகம் இன்னும் நம்புறமாதிரி ஏமாத்துது கூட்டம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X