குடும்பத்தையே கொன்று நாடகம் :கணவன் மனைவி கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குடும்பத்தையே கொன்று நாடகம் :கணவன் மனைவி கைது

Updated : மே 18, 2019 | Added : மே 18, 2019 | கருத்துகள் (35)
Share
விழுப்புரம் : திண்டிவனத்தில் 'ஏசி' வெடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் இறந்த வழக்கில் நாடகமாடிய மற்றொரு மகனை போலீசார் கைது செய்தனர்.திண்டிவனம், காவேரிப்பாக்கத்தைச் சேர்ந்த ராஜ் 60; இவரது மனைவி கலைச்செல்வி 55; இவர்களது மகன்கள் கோவர்த்தனன் 35; கவுதம் 26. கடந்த 14ம் தேதி ராஜ், கலைச்செல்வி, கவுதம் ஆகிய மூவரும் 'ஏசி' அறையில் துாங்கினர். கோவர்த்தனன் அவரது மனைவி

விழுப்புரம் : திண்டிவனத்தில் 'ஏசி' வெடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் இறந்த வழக்கில் நாடகமாடிய மற்றொரு மகனை போலீசார் கைது செய்தனர்.
திண்டிவனம், காவேரிப்பாக்கத்தைச் சேர்ந்த ராஜ் 60; இவரது மனைவி கலைச்செல்வி 55; இவர்களது மகன்கள் கோவர்த்தனன் 35; கவுதம் 26. கடந்த 14ம் தேதி ராஜ், கலைச்செல்வி, கவுதம் ஆகிய மூவரும் 'ஏசி' அறையில் துாங்கினர். கோவர்த்தனன் அவரது மனைவி காயத்ரி 24 மற்றொரு அறையில் துாங்கினர். நள்ளிரவில் 'ஸ்பிளிட் ஏசி' வெடித்து சிதறியதில் ராஜ், கலைச்செல்வி, கவுதம் ஆகியோர் உடல் கருகி இறந்ததாக கூறப்பட்டது. மற்றொரு அறையில் இருந்த கோவர்த்தனன், காயத்ரி உயிர் தப்பினர். திண்டிவனம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்
latest tamil news
கோவர்தன் :


இதுகுறித்து விழுப்புரம் எஸ்.பி., ஜெயக்குமார் கூறுகையில், ''காவேரிப்பாக்கத்தை சேர்ந்த ராஜூ, 65, அவரது மனைவி கலைச்செல்வி 58, மகன் கவுதம், 26. இவர்கள் பைனான்ஸ் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தனர். இவர்களது மூத்தமகன் கோவர்தன், 30. இவரது மனைவி தீபகாயத்திரி, 26. இவர்களுக்கு கடந்த 8 மாதங்கள் முன்பு தான் திருமணம் நடந்துள்ளது.

கோவர்தன் தம்பியான கவுதமே வீட்டில் செல்லப்பிள்ளை என்று தெரிகிறது. ஏற்கனவே கோவர்தன் ஆசிரியர் பயிற்சி முடித்து, டியூசன் சென்டர் நடத்தி வந்தார்.


மனக்குறை :


அதில் நஷ்டம் ஏற்பட்டு 2 கார்களை வாங்கி டிராவல்ஸ் நடத்தி வந்துள்ளார், அரசியல் ஈடுபாடு என்று பல ஈடுபாடுகளால் பெற்றோர் நம்மை கண்டுகொள்ளவில்லை என்ற மனக்குறை கோவர்தனுக்கு இருந்துள்ளது.


latest tamil news
பெட்ரோல் குண்டு :


இதனால், கடந்த மே 15 அன்று நள்ளிரவு 3 மணி அளவில், ஒரே அறையில் தந்தை, தாய் மற்றும் தம்பி துாங்குவதை அறிந்த கோவர்தன், தான் 3 பீர்பாட்டில்களில் தயாரித்து வைத்திருந்த பெட்ரோல் குண்டுகளை அறைக்குள் வீசி கதவை தாளிட்டு விட்டு வெளியே வந்து ஏ.சி.,மின் கசிவால் இறந்ததாக நாடகமாடியுள்ளார்.

ஆனால், பின் வாசல் வழியாக தந்தை ராஜூ சத்தமிடுவது தெரிந்து மீண்டும் அரிவாளால் வெட்டிக்கொன்றுள்ளார். ஆனால், வீட்டின் அறையில் ரத்தக் கசிவு, எரிந்த தடயங்கள் மற்றும் பீர்பாட்டில்கள் காட்டிக்கொடுத்ததால், போலீசாரிடம் வசமாக சிக்கியுள்ளார் கோவர்தன்.


மனைவியும் உடந்தை :


அவரது மனைவி தீபகாயத்ரியும் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்து கொலையை மறைக்கப் பார்த்தார் என்று இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்தனர். இதில், கணவனும் மனைவியும் உண்மையை ஒத்துக்கொண்டனர்,'' இவ்வாறு கூறினார்.


பாராட்டு :


இந்த வழக்கை திறமையாக விசாரித்த டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட தனிப்படையினரையும் எஸ்.பி.,பாராட்டினார்.


Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X