பொது செய்தி

தமிழ்நாடு

விஸ்வரூபம் எடுக்கிறது மின் தடை அரசு, தனியார் உடன் ஆலோசனை

Updated : மே 19, 2019 | Added : மே 18, 2019
Advertisement
விஸ்வரூபம் எடுக்கிறது மின் தடை அரசு, தனியார் உடன் ஆலோசனை



மின் சாதன பழுது காரணமாக ஏற்படும், மின் தடை பிரச்னை, விஸ்வரூபம் எடுத்து வருவதால், மாநகராட்சி மற்றும் தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்த, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.சென்னையில், சில இடங்களில், தரைக்கு அடியில், 'கேபிள்' வாயிலாகவும்; மற்ற இடங்களில், மின் கம்பங்கள் உதவியுடனும், மின் வாரியம், மின் வினியோகம் செய்கிறது.

16 ஆயிரம் மெகா வாட்

கோடைக் காலம் என்பதால், தற்போது, மின் தேவை, 16 ஆயிரம் மெகா வாட்டை தாண்டியுள்ளது. அதை, பூர்த்தி செய்யும் அளவுக்கு, மின் உற்பத்தி மற்றும் மின் கொள்முதல் உள்ளது.இருப்பினும், மின் சாதன பழுது காரணமாக, மின் தடை ஏற்படுவது, தொடர் கதையாகி வருகிறது. இதனால், மீண்டும், பல மணி நேர மின் தடை ஏற்படுமோ என்ற அச்சம், பொது மக்கள் மத்தியில்
எழுந்துள்ளது.இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:சாலை மற்றும் சுகாதார பணிகளுக்காக, மாநகராட்சிசார்பில், பள்ளம் தோண்டப்படுகிறது.அப்போது, அந்த பணியில் ஈடுபடும் ஊழியர்கள், தரைக்கு அடியில் மின்சாரம் செல்லும், கேபிளை குத்தி, பழுதாக்கிவிடுகின்றனர்.



சிறப்பு கூட்டம்



இதே போல, அரசு மற்றும் தனியார் தொலைதொடர்பு சேவை நிறுவனங்களும், தங்கள்பணிகளை மேற்கொள்ளும் போது, மின் சாதனங்களை பழுதாக்குகின்றன. இந்த காரணங்களால் தான், தற்போது, மின் தடைஏற்படுகிறது.இதனால், அந்த நிறுவனங்களை ஒருங்கிணைத்து, ஒரு சிறப்பு கூட்டம் நடத்தப்பட உள்ளது.

இதன் வாயிலாக, எந்த இடத்தில் பணிகள் செய்யப்பட உள்ளதோ, அதன் விபரத்தை, சம்பந்தப்பட்ட அரசு அல்லது தனியார் நிறுவனம், முன்கூட்டியே, மின் வாரியத்திடம் தெரிவித்து, ஒப்புதல் பெற வேண்டும்.இந்த நடைமுறையை பின்பற்றாமல், சொந்த பணிகளை செய்ய முயற்சித்து,மின் சாதனங்களை பழுதாக்கினால், சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்.இவ்வாறு, அவர்கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X