பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
நெருக்கடி!
மத்தியில் அமையவுள்ள புதிய அரசுக்கு...
பணப் புழக்கம் இல்லாததால் வங்கிகள் திணறல்

புதுடில்லி: சமீப காலமாக, அரசு திட்டங் களுக்கான செலவுகள் குறைந்தது மற்றும் தேர்தல் செலவுகள் அதிகரித்து உள்ளதால், பணப் புழக்கத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, வங்கி துறை திணறி வருகிறது. அதை மீட்டெடுக்க, இந்தத் துறையில் அதிக முதலீடு செய்ய வேண்டிய நிலை, மத்தியில் அமைய உள்ள புதிய அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

புதிய அரசு,நெருக்கடி, பணப்புழக்கம், வங்கிகள், திணறல்லோக்சபாவுக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டு, இன்று கடைசி கட்ட ஓட்டுப் பதிவு நடக்க உள்ளது. வரும், 23ல், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. லோக்சபா வுக்கு தேர்தல் அறிவிப்பு வெளியானதில் இருந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால், புதிய திட்டங்கள் ஏதும் அறிவிக்கப்படவில்லை.ஏற்கனவே அறிவிக்கப் பட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும், அதிக அளவு, அதற்கு செலவிடப்படவில்லை.அதே நேரத்தில், தேர்தல் செலவு அதிகரித்துள்ளது. தற்போது உள்ள, பா.ஜ., அரசு தொடருமா அல்லது புதிய அரசு அமையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது போன்ற காரணங்களால், கடந்த சில மாதங்களாகவே, பெரிய அளவில் கடன் அளிப்பதை, வங்கிகளும் நிறுத்தியுள்ளன.


இது போன்ற நேரங்களில், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் தான், தொழில் துறைக்கு கை கொடுக்கும். ஆனால், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் பல,ஏற்கனவே சிக்கலில் உள்ளன. கடந்தாண்டு, செப்., கணக்கின்படி, நாடு முழுவதும் உள்ள,10 ஆயிரத்து, 190 வங்கி சாரா

நிதி நிறுவனங்கள், வசூலிக்க வேண்டிய கடன் மட்டும், 20 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.ஐ.எல்.எப்.எஸ்., நிறுவனத்தின் வீழ்ச்சியால், வங்கி சாரா நிதி நிறுவனங்களும் கடன் கொடுப்பதில் சுணக்கம் காட்டத் துவங்கியுள்ளன. இதனால், தொழில் துறையிலும், வங்கி துறையிலும், பணப் புழக்கத்துக்கு தட்டுப்பாடுஏற்பட்டுள்ளது.

பொருளாதார நிபுணர்கள் கூறியதாவது: வழக்கமாக, தேர்தல் நடக்கும் நேரத்தில், வங்கிகளிலும், தொழில் துறையிலும் பணப் புழக்கம் சற்று குறைவாகவே இருக்கும். அரசியல் கட்சிகளுக்கு பயந்து, பெரும்பாலான நிறுவனங்கள், தங்கள் செலவை குறைத்துக் கொள்ளும். அதே நேரத்தில், அரசியல் கட்சிகளிடம் பணப் புழக்கம் இருக்கும்.


ஆனால், நாட்டின் பொருளாதாரத்துக்கு எந்த உதவியும் கிடைக்காது.மேலும், தற்போதுள்ள அரசு தொடருமா; புதிய அரசு வந்தால், அதன் கொள்கைகள் எப்படி இருக்கும் என்பதால், தொழில் துறைகளுக்கு கடன் அளிப்பதிலும், வங்கிகள் சற்றுபின்வாங்கும்.

தொழில் துறையினருக்கு, வங்கிகள் கடன் அளிக்காத நிலையில், அதற்கு உதவும், வாடகைத் தாயாக விளங்கும், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் தற்போது சிக்கலில் உள்ளன. அதனால், அவையும், கடனுதவி அளிக்க முடியாத நிலையில், தொழில் துறையினர் தத்தளிக்கின்றனர். தேர்தல் முடிவுகள் வெளியானதும், இந்த நிலை மாறும்.
இருப்பினும், கடந்த சிலமாதங்களாக பிரச்னை இருந்து வந்துள்ளதால், புதியஅரசுக்கு மிகப் பெரிய சவால் காத்திருக்கிறது. வங்கி துறையில் அதிக அளவு முதலீடுகள் செய்ய வேண்டிய கட்டாயம், அரசுக்கு உள்ளது. புதிய அரசின் நடவடிக்கைகள் மற்றும் கொள்கைகளே, வங்கிதுறையையும்,

Advertisement

தொழில் துறையையும் காப்பாற்றும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


பங்குச் சந்தை எதிர்பார்ப்பு


'தேர்தல் முடிவுகள், பங்குச் சந்தையில் எந்த தாக்கத்தை ஏற்படுத்தும்' என, ஐரோப்பிய நாடான, சுவிட்சர்லாந்தை தலைமையிடமாக வைத்து செயல்படும், நிதி ஆலோசனை வழங்கும், யு.பி.எஸ்., நிறுவனத்தின் இந்தியப் பிரிவு கணித்துள்ளது.

அது வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பல்வேறு சர்வதேச காரணங்களாலும், இந்திய அரசியலில் மாற்றம் ஏற்படும் என்பதாலும், கடந்த சில நாட்களாகவே, பங்குச் சந்தையில் நிலையற்ற தன்மை உள்ளது.பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, தே.ஜ., கூட்டணி, மீண்டும் ஆட்சி அமைக்காவிட்டால், 'நிப்டி' எனப்படும், தேசிய பங்குச் சந்தையில், 10 - 15 சதவீதம் வரை சரிவு ஏற்படும். கடந்த, 2004 மற்றும் 2009 தேர்தல்களின் அடிப்படையில், இது கணிக்கப்பட்டுள்ளது.


பா.ஜ., தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தால், பங்குச் சந்தையில், 5 - 10 சதவீதம் உயர்வு ஏற்படும். ஒருவேளை இந்தக் கூட்டணி, 250க்கும் குறைந்த இடங்களில் வென்றால், தற்காலிகமாக பங்குச் சந்தையில் ஏற்றம் இறக்கம் ஏற்பட்டு,புதிய அரசு அமை வதை பொறுத்து, அதுமாறுபடும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
22-மே-201918:18:50 IST Report Abuse

J.V. Iyerப.சி. செய்த ஊழல்களால் பொருளாதாரம் சீரழிக்கப்பட்டிருக்கிறது.

Rate this:
Viswanathan Subramanian - coimbatore ,இந்தியா
20-மே-201904:24:55 IST Report Abuse

Viswanathan Subramanianதினமலர் வாசகர்களின் கருத்துக்களை அப்படியே பிரசுரம் செய்கிறது.

Rate this:
Viswanathan Subramanian - coimbatore ,இந்தியா
20-மே-201904:23:10 IST Report Abuse

Viswanathan Subramanianஇங்கே பதிவான கருத்துக்கள் முற்றிலும் முரணானவை. இந்தியா வின் நிலையை அறியாமல் எழுதுகிறார்கள். மக்கள் அவை தேர்தல் முடிவுகள் மோடி அரசு அமைவதை நோக்கி செல்கிறது.

Rate this:
Manian - Chennai,இந்தியா
20-மே-201909:34:04 IST Report Abuse

Manianபொருளாதாரத்தை (Economics) , விஞ்ஞானமாக மாக மாற்ற பாடுபடுகிறார்கள். ஆனால், சமீபத்திய ஆராச்சிகளில் படி பௌதிகம், ரஸாயனம், போல இயற்கை விதிகளுக்கு கட்டுபட்ட துறையாக பொருளாதரம் இல்லை. பல மாற்றங்கள் அதை தாக்குகின்றன. மைக்குரோ- Micro Economics ஒரு கிளை/பிராஞ்சு சார்ந்தது, மேக்ரோ - Macro Economics ஒட்டு மொத்த கம்பனி சார்ந்தது என்ற இரண்டு பிரிவுகளில் கற்பிக்கப்படும்.. இதில் பல் முனை தாக்கங்கள் இருக்கும். உதாரணமாக, நுகர்வோர் - உற்பத்தியாளர்கள், இணைப்பு சார்பு முறை என்று சொல்லும் ஒரு விதி உள்ளது Consumer-Producer equation. ஆனால் பிறநாடுகளின் உற்பத்தி, மின்வலைதளம் மூலம் நுகர்வோரை அடைதல் Internet based business, போலி சாமான்களை குறைந்த விலைக்கு மின்வலைதளம் மூலம் விற்றல் (Selling bogus goods substitution), எரிபொருள் விலைவாசி ஏற்றம், சந்தைப்படுத்துதல், போர்கள், மூலதனம், பதுக்குதல், அதிக விளைவு /உற்பத்தி போன்ற பல காரணங்களால் எந்த தொழிலும் நுகர்வோர்- உற்பத்தியாளர்கள் பகுதிகள் ஒரே மாறாத விதிப்படி நடக்காது என்று புரிந்து கொண்டார்கள் (புவி ஈர்ப்பு விதி இப்படி மாறாது). அமெரிக்காவிற்கு சைனாவிற்கும் நடக்கும் பனிப்போர், நம் பொருளாதாரம், வேலை இன்மை, முதலீடு குறைவு, நுகர்வோர் குறைவு,... பாதிக்கிறது. ஆகவே, எவர் ஆட்சிக்கு வந்தாலும், நம்மால் கட்டுப்படுத்த முடியாத பகுதிகள் நம்மை முன்னேறவிடாமல் தடுக்கும், முதலீடு குறையும், வாங்குவோர் திறமை குறையும்.. மோடியால் மட்டுமே எல்லா உலக மாற்றங்களையும் செய்ய முடியாது. ஆனால் இதை புரிந்து கொள்ளும் பன்முகத்தன்மை, இன்டாக்டிவ் லாஜிக்(இது கல்வியில் கற்பிக்க படுவதில்லை, ஆராய்ச்சியாளர்களே கற்க வேண்டும் ) 0.0001% இந்தியர்களுக்கு கூட இருக்காது. அவர்களே கிணற்று தவளைகளாக சப்தம் இடுகிறார்கள் . ...

Rate this:
மேலும் 20 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X