பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
காவிரி ஆணைய கூட்டம் நடக்குமா?
டெல்டா விவசாயிகள் எதிர்பார்ப்பு

தஞ்சாவூர்,: 'கடந்த, ஐந்து மாதங்களாக நடக்காத காவிரி ஆணைய கூட்டம், தேர்தல் முடிவுக்கு பிறகாவது நடந்து, குறுவை சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்குமா' என, டெல்டா விவசாயிகள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துஉள்ளது.காவிரி டெல்டா மாவட்டங்கள் முழுவதும் வறட்சி யில் சிக்கியுள்ளன.

காவிரி,ஆணைய,கூட்டம்,நடக்குமா?,டெல்டா,விவசாயிகள்,எதிர்பார்ப்பு


இந்த சூழலில், காவிரி ஆணையத்தின் கூட்டம், கடந்த ஆண்டு, டிச., 3ம் தேதியும், அதேபோல, ஒழுங்காற்று குழுவின் கூட்டம் ஆகஸ்ட், 9ம் தேதியும் கடைசியாக நடந்தது. நடப்பாண்டிற் கான காவிரி ஆணைய மற்றும் ஒழுங்காற்றுக் குழு கூட்டம், இன்னும் ஒருமுறை கூட நடத்தப்பட வில்லை. இதனால், உச்ச நீதிமன்ற

உத்தரவின் அடிப்படையில், காவிரி ஆணையம் சரியாக செயல் படுகிறதா என்ற சந்தேகம், விவசாயிகளிடம் எழுந்துள்ளது.


2011ம் ஆண்டுக்கு பின்,தொடர்ந்து டெல்டா விவசாயிகள்,குறுவை சாகுபடியை இழந்து உள்ளனர். ஒருபோக சம்பா சாகுபடியும், பல ஆண்டு கள் தண்ணீர் பற்றாக்குறையால், பெரும் மகசூல் இழப்பை சந்தித்துள்ளது.இந்நிலையில், கர்நாடகாவில், அனைத்து அணைகளிலும் போதிய அளவு தண்ணீர் இருப்பதாக, தமிழக விவசாயிகள் கூறுகின்றனர்.

கர்நாடக அரசோ இதை மறுத்து வருகிறது. காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்,ஐந்து மாதங்களை கடந்தும் இன்னும்கூட்டபடாதது, விவசாயிகள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அத் துடன் குறுவை சாகுபடிக்காக, ஜூன், 12ம் தேதி, காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும்.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து வரும்

Advertisement

நிலையில், கர்நாடகாவிடம் தண்ணீர் பெற்று தருவதற்கானஎவ்வித நடவடிக்கையையும், ஆணையம் எடுக்கவில்லை.இதனால், குறுவை சாகுபடிக்கு, நடப்பாண்டாவது உரிய நேரத்தில் தண்ணீர் கிடைக்குமா என்ற கேள்வி, விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.


ஓட்டு எண்ணிக்கை முடிந்து, புதிய அரசு பதவியேற்ற பிறகாவது, காவிரி ஆணைய கூட்டம் நடந்து, தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு, டெல்டா விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
svs - yaadum oore,இந்தியா
19-மே-201908:18:49 IST Report Abuse

svs...காவிரி தண்ணீர் இல்லாமல் போனால் என்ன ??....ஆற்று மணல் கொள்ளை தொடர்கிறது... தமிழ் நாடு ஆற்று மணல் காவிரி தண்ணீர் தராத பெங்களூருக்கு ஏற்றுமதி ......அதனால் அரசியல்வாதிகளுக்கு வருமானம் வருமானம் நின்றுவிடுமோ என்ற கவலை இல்லை ...

Rate this:
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
19-மே-201908:06:18 IST Report Abuse

VENKATASUBRAMANIANDMK is responsible for all these problems fromnthe ning. First they allowed to contruct dams, secondly they never concentrated on our internal storage of water. Followrrs are also in the same way. Even now our people are not bothered about our internal storage instead they are doing politics.

Rate this:
அன்பு - தஞ்சை,இந்தியா
19-மே-201906:19:56 IST Report Abuse

அன்பு

Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X