எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
கைகோர்ப்பு
தமிழகத்தில் அதிகரித்து வரும் மணல் கடத்தல்:
'மாபியா' கும்பலுடன் அதிகாரிகள் கைகோர்ப்பு

திருச்சி, கரூர், நாமக்கல் காவிரி ஆற்றில், தொடர்ந்து மணல் கொள்ளை அரங்கேறி வருகிறது. இங்கு திருட்டுத்தனமாக அள்ளப்படும் மணலை, வெளிமாநிலங்களில், ஒரு லோடு, 1.50 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்து, மணல் மாபியா கும்பல், கொள்ளை லாபம் சம்பாதித்து வருகிறது. நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு துறை அதிகாரிகள், 'கவனிப்பு' காரணமாக, கமுக்கமாக உள்ளனர்.

தமிழகம், மணல் கடத்தல், மாபியா, கும்பல், அதிகாரிகள், கைகோர்ப்புதமிழகத்தில், அரசு மற்றும் தனியார் கட்டுமானப் பணிகளுக்கு, காவிரி கரையோரங்களில், மணல் அள்ளும் பணி, டெண்டர் மூலம் தனியாரிடம் வழங்கப்பட்டது. இதில் பல்வேறு முறைகேடுகள் அரங்கேறியதால், 2003ல் இருந்து, அரசே நேரடியாக, பொதுப்பணித்துறை மூலம், மணல் விற்பனையில் இறங்கியது.

விதிமுறைகள் மீறல்இதற்காக, விதிமுறைகள் உருவாக்கப்பட்டன. ஆனால், இந்த விதிமுறைகளை எந்த குவாரியிலும் பின்பற்றவில்லை. விதிமுறை மீறி மணல் அள்ளியதால், மணல் குவாரிகளுக்கு, உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்தது.தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததால், மதுரை கிளை உத்தரவுக்கு, நீதிபதிகள் தடை விதித்தனர். தொடர்ந்து, மணல் குவாரிகளை அரசு இயக்கியது.


இந்நிலையில், குறைந்த எண்ணிக்கையிலான குவாரிகளே செயல்படுவதால், காவிரி கரையோரங்களில், மணல் கொள்ளை, அதிகளவில் அரங்கேறிவருகிறது. காவிரி கரையோரமுள்ள தஞ்சை, திருச்சி, கரூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில், அதிக அளவில் மணல் கொள்ளை அடிக்கப்படுகிறது. இவ்வாறு எடுத்துச் செல்லும் மணலை, ஒரு இடத்தில் மொத்தமாக குவித்து, சரக்கு ஆட்டோவில் ஏற்றி, விற்பனை செய்கின்றனர். லாரிகளில் ஏற்றி, வெளி மாநிலங்களுக்கும் இரவு நேரத்தில் கடத்திச் செல்லப்படுகிறது.


எட்டு குவாரிகள்தமிழகத்தில், அரியலுார் மாவட்டம், சாத்தமங்கலம், கடலுார் மாவட்டம், அங்குசெட்டிபாளையம், புதுக்கோட்டை மாவட்டம், கோவில்வயல், முல்லையூர், நாகை மாவட்டம், ராதாநல்லுார், நாமக்கல் மாவட்டம், குன்னிபாளையம், கரூர் மாவட்டம், குளித்தலை என, எட்டு குவாரிகள் அனுமதிக்கப்பட்டுள்ளன.கரூர் மாவட்டம், குளித்தலை குவாரி, தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மற்ற குவாரிகளில், 'ஆன்லைன்' மூலம் பதிவு செய்யப்பட்டு, லாரிகளில் மணல் ஏற்றப்படுகிறது.


ஒரு நாளைக்கு, 15 ஆயிரம் லோடு தேவைப்படும் நிலையில், 100 முதல், 150 லோடுகள் மட்டுமே ஏற்றப்படுகின்றன. 3 யூனிட் மணல், 3,990 ரூபாய், 30 நாள் காத்திருப்பு, வாடகை, டிரைவர் படி என, குறைந்த பட்சம், 8,000 முதல், 10 ஆயிரம் ரூபாயும், அதிகபட்சம், 24 ஆயிரம் முதல், 30 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.ஒரு லோடு மணல், இடம், துாரத்தை பொறுத்து, 40 ஆயிரம் முதல், 50 ஆயிரம் ரூபாய் வரை, வெளியில் விற்பனையாகிறது.அரசு குவாரிகள் குறைவாக இருப்பதாலும், நாளுக்கு நாள் மணல் தேவை அதிகரித்து வருவதாலும், மணல் கொள்ளை இரவு, பகலாக அரங்கேறி வருகிறது. குறிப்பாக, காவிரி கரை யோரங்களில், இரு சக்கர வாகனம், மாட்டு வண்டிகளில், மணல் கொள்ளை அடிக்கப்படு கிறது. நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் அடுத்த கொந்தளம் பகுதியிலும், இரவு நேரங்களில், காவிரி ஆற்றில் மணல் கொள்ளை அரங்கேறு கிறது. கனிமம்,பொதுபணி, வருவாய் , போலீஸ் துறை அதிகாரிகளிடம், ஒருங்கிணைப்பு

இல்லாததே, மணல் கொள்ளை அடிக்கப்பட்டு, வெளிமாவட்டம், மாநிலத்துக்கு கடத்தி செல்வதற்கு காரணமாக அமைந்துள்ளது.

மாற்றுப்பாதைகரூர் மாவட்டம், லாலாபேட்டை, குளித்தலை, திருச்சி மாவட்டம், முசிறி ஆகிய பகுதிகளில், இரு சக்கர வாகனம், மாட்டு வண்டிகளில், பட்டப்பகலில், மணல் திருட்டு அரங்கேறுகிறது. திருச்சி, கரூர், நாமக்கல் மாவட்டங்களில் இருந்து, 7 முதல், 8 யூனிட் மணல், நேஷனல் பர்மிட் பெற்ற லாரிகளில், கடத்தி செல்லப்படுகிறது. ஒரு நாளைக்கு, 100 முதல், 200 லோடு மணல், வெளிமாநிலங்களுக்கு கடத்திச் செல்லப்படுகிறது.


கடத்தி செல்லப்படும் மணல், 1.25 லட்சம் முதல், 1.50 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப் படுகிறது. மணல் கடத்திச் செல்லும் லாரிகள், எளிதில் சிக்காத வகையில், பாதுகாப்பாக மாற்றுப் பாதையில் ஓட்டி செல்கின்றனர். போலீஸ், வருவாய் துறையினர் ரோந்து செல்லும் பகுதி, முன்கூட்டியே, மணல் மாபியா கும்பலுக்கு தெரியப்படுத்தப்படுவதால், இவர்கள் யாரும் சிக்குவதில்லை. அதற்கேற்ப மாற்றுப்பாதையை தேர்ந்தெடுத்து, மணல் கடத்தலில் கனஜோராக ஈடுபட்டு வருகின்றனர்.


நாமக்கல் மாவட்டம், மோகனுார், ஒருவந்துார், மணப்பள்ளி, எல்லைமேடு, நன்செய் இடையாறு, கொந்தளம் போன்ற பகுதிகளில், மணல் கொள்ளை அதிக அளவில் அரங்கேறுகிறது.கொல்லிமலை, போதமலையில் உருவான ஆறு, புதுச்சத்திரம் ஒன்றியம், கதிராநல்லுார் பகுதிகளில் பாய்ந்து ஓடியதாக கூறப்படுகிறது. காலப்போக்கில், வரத்து வாய்க்கால் ஆக்கிரமிப்பு காரணமாக, நீர்வழித் தடங்கள் மறைந்தன.


அங்கு, அதிகளவில் மணல் பரவிக்கிடப்பதை அறிந்த கொள்ளையர்கள், பொக்லைன் இயந்திரம் உதவியுடன், மணலை கொள்ளை அடித்து வருகின்றனர். 4 அடியில் இருந்து, 60 அடி ஆழம் வரை மணல் குவிந்து கிடக்கிறது. அவற்றை அள்ளி, கடத்தி பல கோடி ரூபாய் அளவுக்கு சம்பாதித்து வருகின்றனர்.


மேலும், நாமக்கல் மாவட்டம், காக்காவேரி அருகே உள்ள அன்னமார் ஏரியிலும், மணல் கொள்ளை அடிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு கொள்ளை அடிக்கப்பட்ட மணலை, அப்பகுதியில், குவியல் குவியலாக கொட்டி குவித்து வைத்துள்ளனர். அவற்றை இரவு நேரங்களில், லாரிகள் மூலம், வெளிமாவட்டம், வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்புகின்றனர்.இதற்கு போலீஸ், வருவாய் துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகளும் உடந்தையாக செயல்படுகின்றனர். இதன் மூலம், சம்பந்தப்பட்ட கடத்தல்காரர்கள், பல கோடி ரூபாய் வருமானம் ஈட்டி வருகின்றனர். அதில் குறிப்பிட்ட பகுதி, அதிகாரிகளுக்கு அன்பளிப்பாக வழங்கப்படுகிறது.


ஏரியில் கொள்ளை
கடந்த, 50 ஆண்டுகளுக்கு முன், சேலம் மாவட்டம், கஞ்சமலையில் உருவான பொன்னி ஆறு, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா, மல்லசமுத்திரம் பகுதியில் முடிந்தது. நாளடைவில், ஆக்கிரமிப்பு காரணமாக, 350 ஏக்கரிலான பெரிய ஏரியாக மாறியது. அங்கு, தரமான மணல் இருப்பதை அறிந்த அரசியல் பிரமுகர்கள், கொஞ்சம் கொஞ்சமாக கொள்ளை அடித்து வருகின்றனர்.


தினமும் இரவு நேரங்களில், 25 அடி ஆழம் வரை சுரண்டி, மணலை எடுத்து விற்பனை செய்கின்றனர்; அரசுக்கும் பல கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தி வருகின்றனர். இது தொடர்பாக, அவ்வப்போது, சம்பந்தப்பட்ட துறையினர் பெயரளவுக்கு ரெய்டுக்கு சென்று, ஏமாற்றத்துடன திரும்புகின்றனர். விற்கும்அவலம்தமிழகத்தில், மணல் எடுத்துச் செல்வதற்கு என்றே வடிவமைக்கப்பட்ட டிப்பர் லாரிகள் இயங்குகின்றன.அரசு குவாரிகளில், மணல் எடுப்பதற்கு, 15 நாட்களுக்கு ஒரு முறை, 'ஆன்லைன் புக்கிங்' செய்யப்படுகிறது. தமிழகத்தில், ஒரு நாளைக்கு, 15 ஆயிரம் முதல், 17 ஆயிரம் லோடுகள் தேவை உள்ள நிலையில், 400 முதல், 500 லோடுகள்

Advertisement

மட்டுமே வழங்கப்படுகின்றன. இதனால், வேலைவாய்ப்பு இல்லாமல், பல லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.


மேலும், கடனை செலுத்த முடியாததாலும், வருவாய் ஈட்ட வழியின்றியும், லாரிகள் விற்பனை செய்த பல உரிமையாளர்கள், டிரைவராக பணியாற்றும் நிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர்.அதேபோல், லாரி தொழிலை நம்பி இருக்கும், ஒரு லட்சம் குடும்பத்தினர், வேலைவாய்ப்பு இழந்து, கூலி வேலைக்கு சென்று, வாழ்க்கையை நடத்தும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

கட்டுமான பணிகட்டுமான பணிக்கு, 'எம் சாண்ட்' மணல் பயன்படுத்தினாலும், பூச்சு வேலைக்கு மணல் அவசியம் தேவைப்படுகிறது. ஆனால், மணல் தட்டுப்பாடு காரணமாக, கட்டுமானப் பணிகள் முடங்கவில்லை. மிகப்பெரிய அடுக்குமாடிக் குடியிருப்புகளின் கட்டுமானப் பணிகள், பெங்களூரு, சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம் உள்ளிட்ட பகுதியில் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இவர்களுக்கு தேவையான மணல், தட்டுப்பாடின்றி தாரளமாக கிடைக்கிறது.ஆனால், சொந்த வீடு கட்டுபவர்களுக்கு, மணல் கிடைப்பது குதிரை கொம்பாக உள்ளது. அரசு கட்டட ஒப்பந்ததாரர்களும், மணல் தட்டுப் பாட்டை காரணம் காட்டி, பணிகளை நிறுத்தி வைத்துள்ளனர். அரசும் வேறு வழியின்றி, ஒப்பந்த காலத்தை நீட்டித்து வருகிறது. இந்நிலையில், இயற்கை வளங் களை பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளே, மணல் மாபியா கும்பலுடன் கூட்டு சேர்ந்து, மணல் கொள்ளைக்கு துணை போவது,பொதுமக்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் மத்தியில், கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


'தமிழகத்தில், மணல் கொள்ளையை தடுக்கவும், கட்டுமான பணிகள் தொடர்ந்து நடக்கவும், அதிக எண்ணிக்கையில் மணல் குவாரிகளை திறப்பதுடன், லாரிகளுக்கு லோடு வழங்குவதை முறைப்படுத்த வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது.

9,000 லாரிகளை நீக்க கோரிக்கைதமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் செல்ல ராஜாமணி, பொருளாளர் பொன்னுசாமி ஆகியோர் கூறியதாவது:அரசு மணல் குவாரிகளில், 70 ஆயிரம் லாரிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 15 நாட்களுக்கு ஒரு முறை, 'ஆன்லைனில்' பதிவு செய்வதால், அதிக லாரிகள், மணல் லோடு கிடைக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.


அதிக அளவில் குவாரிகளை திறந்து, வாரந்தோறும், 'புக்கிங்' செய்து, 50 ஆயிரம் முதல், 60 ஆயிரம் லோடு வழங்கி, லாரிகள் தொடர்ந்து இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதன் மூலம், மணல் திருட்டு தடுக்கப்படுவதுடன், தட்டுப்பாடு இன்றி மணல் கிடைக்கவும் வழி ஏற்படும். மணல் தட்டுப்பாடு காரணமாக, ஈரோடு, ஊட்டி, சென்னை, மதுரை மாவட்டங்களில், நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி பகுதிகளில், கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.


தேசிய பர்மிட் பெற்ற, 9,000 லாரிகளை, பதிவில் இருந்து நீக்க வேண்டும். அவை, வெளிமாநிலங் களுக்கு மணல் கடத்தி செல்வதற்கு வாய்ப்பு உள்ளது. அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் மணல் கொள்ளை அரங்கேறி வருகிறது. நேர்மையான அதிகாரிகளை நியமனம் செய்து, இந்த மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது சிறப்பு நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
19-மே-201920:03:34 IST Report Abuse

RajanRajanலஞ்சம் ஊழல் குற்றங்களுக்கு தூக்கு தண்டனை என சட்டம் போட்டு முச்சந்தியில் தொங்கவிடுங்கள். இனி கடும் தண்டனை தான் இங்கு தீர்வு.

Rate this:
ஊழல் விஞ்ஞானி - இந்திய தேசம்,இந்தியா
19-மே-201917:00:34 IST Report Abuse

ஊழல் விஞ்ஞானி 9000 லாரிகளை பெர்மிட் ரத்த செய்தால் திமுகவின் ஜப்பான் துணை முதல்வர் கொதித்து நீதிமன்றம் சென்று தனது உறவினரான நீதிபதி மூலம் தடை பெற்று விடுவார்....

Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
19-மே-201916:04:26 IST Report Abuse

தமிழ்வேல் இவ்வளவு பகிரங்க குற்றச்சாட்டிற்கு யாரும் பதில் கூறுவதில்லை. தட்டிக்கேட்பதற்கும் யாரும் இல்லையா ?

Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X