பொது செய்தி

தமிழ்நாடு

தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்க திட்டம் இழுபறி வருவாய் ஈட்டுவதில் மட்டும் அதிகாரிகள் குறி

Added : மே 18, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்க திட்டம் இழுபறி  வருவாய் ஈட்டுவதில் மட்டும் அதிகாரிகள் குறி

தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்க பணிகள் தாமதமாகி வருவதால், நடப்பாண்டிலும், சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் நீடித்து வருகிறது.திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தேர்வாய் கண்டிகை மற்றும் கண்ணன்கோட்டை ஆகிய ஏரிகளை இணைத்து, புதிய நீர்த்தேக்கம் அமைக்க, அரசு முடிவெடுத்துள்ளது.இதில், தேக்கப்படும் நீர், சென்னையின் குடிநீர் தேவைக்கு பயன்படுத்தப் படவுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த, 2011ல், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 330 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தார்.இந்த நிதியை பயன்படுத்தி, நீர்த்தேக்கம் அமைக்கும் பணிகள் துவங்கின. இரண்டு ஆண்டுகளில், இத்திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டது.விவசாய பட்டா நிலங்களை கையகப்படுத்துவது, இழப்பீடு வழங்குவது, வனத்துறை நிலங்களை கையகப்படுத்துவது உள்ளிட்ட காரணங்களால், திட்ட பணிகள் தாமதமாகி வந்தன.ஒரு வழியாக, அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்பட்டது. ஆனால், இன்னும், 20 சதவீத பணிகள் எஞ்சிஉள்ளன.பணிகளை வேகப்படுத்தி முடிப்பதற்கு, பொதுப்பணித் துறையினர் ஆர்வம் காட்டவில்லை. இதனால், நடப்பாண்டில், வட கிழக்கு பருவமழையில் கிடைக்கும் நீரை தேக்கி வைத்து, சென்னையின் குடிநீர் தேவைக்கு வினியோகம் செய்வதில், சிக்கல் நீடித்து வருகிறது.இது குறித்து, சென்னை குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
புழல், சோழவரம், பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகளின் ஒட்டுமொத்த கொள்ளளவு, 11.2 டி.எம்.சி.,யாக உள்ளது. ஆந்திராவின் சாய்கங்கை திட்டம் வாயிலாக, 12 டி.எம்.சி., நீர் கிடைக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது.வட கிழக்கு பருவமழை இயல்பாக பெய்தாலே, நான்கு ஏரிகளும் நிரம்பிவிடுகிறது. எனவே, ஆந்திராவில் இருந்து கிடைக்கும் நீரை, முழுமையாக பெற முடியவில்லை.இதற்காகவே, இத்திட்டத்தை ஜெயலலிதா செயல்படுத்த விரும்பினார். பொதுப்பணித் துறையினர், உரிய ஆர்வம் காட்டாததால், எட்டு ஆண்டுகளாக, பணிகள் இழுபறியாக உள்ளன.கடும் வறட்சியால், சென்னை மக்கள் தண்ணீருக்கு திண்டாடுகின்றனர். புதிய நீர்த்தேக்க திட்டம் பயன்பாட்டிற்கு வந்தால், வறட்சி காலங்களில் கூட, குடிநீர் தேவையை சமாளிக்க முடியும். அக்., மாதம் வட கிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன், பணிகளை முடித்தால் நல்லது.ஆனால், பொதுப்பணித் துறை அதிகாரிகள், ஆறுகளில் மணல் திருட்டுக்கும், ஏரிகளில் வண்டல் மண், செம்மண் எடுத்து விற்பனை செய்வதற்கும் மட்டுமே, ஆர்வம் காட்டுகின்றனர்.இவ்வாறு, அவர் கூறினார்.- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
19-மே-201906:42:52 IST Report Abuse
Bhaskaran தினமும் பணிக்கு வரும்போதே இன்று எவ்வளவு லஞ்சம் சம்பாதிக்கலாம் என்னும் எண்ணத்தில் அதிகாரிகள் இருக்கும்வரை மக்களுக்கு விடிமோட்சமேது, இன்னும் ஆட்சிமாறினால் கேட்கவே வேண்டாம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X