காங்.வேட்பாளருக்கு சுவிஸ் வங்கியில் ரூ.7 கோடி

Updated : மே 18, 2019 | Added : மே 18, 2019 | கருத்துகள் (10)
Share
Advertisement
புதுடில்லி: தன் மனைவி பெயரில் சுவிஸ் வங்கியில் வைப்பு நிதி இருப்பதாக காங்., வேட்பாளர் தேர்தல் கமிஷனிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 19 லோக்சபா தொகுதிகளுக்கும் நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இம்மாநிலத்தில் உள்ள குர்தாஸ் பூர் தொகுதியில் காங். வேட்பாளராக சுனில் குமார் ஜாக்கர் போட்டியிடுகிறார். இவர் முன்னாள்

புதுடில்லி: தன் மனைவி பெயரில் சுவிஸ் வங்கியில் வைப்பு நிதி இருப்பதாக காங்., வேட்பாளர் தேர்தல் கமிஷனிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.



latest tamil news


பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 19 லோக்சபா தொகுதிகளுக்கும் நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இம்மாநிலத்தில் உள்ள குர்தாஸ் பூர் தொகுதியில் காங். வேட்பாளராக சுனில் குமார் ஜாக்கர் போட்டியிடுகிறார். இவர் முன்னாள் லோக்சபா சபாநாயகராக இருந்த பல்ராம் ஜாக்கர் மகன் ஆவார்.


latest tamil news



தேர்தல் கமிஷனில் அளித்துள்ள சொத்து விபரப் பட்டியலில் தனக்கு ரூ.2 கோடியே 88 லட்சம் மதிப்புள்ள அசையா சொத்துக்களும், ரூ.ஒரு கோடியே 53 லட்சம் மதிப்புள்ள அசையும் சொத்துக்களும் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய மனைவி சில்வியா ஜாக்கர் பெயரில் சுவிட்சர்லாந்து நாட்டில் ஜூரிச் நகரில் உள்ள நான்காவது மிகப்பெரிய வங்கியான ஜூஜெர் கன்டோனல் வங்கியில் ரூ.7 கோடியே 37 லட்சம் ரூபாய் வைப்பு நிதியாக வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


இவரை எதிர்த்து பா.ஜ., வேட்பாளராக பிரபல நடிகர் சன்னிதியோல் போட்டியிடுகிறார். இவர் தன்னுடைய சொத்து மதிப்பாக ரூ.60.46 கோடி வங்கி கணக்கு மற்றும் அசையும் சொத்தாகவும், மனைவி லிண்டா தியோல் பெயரில் ரூ.5.72 கோடி சொத்துக்களும், கையிருப்பாக 26 லட்சம் ரூபாயும் மனைவியிடம் 16 லட்சம் ரூபாயும் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்
வெளிநாட்டில் கறுப்பு பணத்தை மீட்க பா.ஜ. நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் காங். வேட்பாளர் ஒருவர் சுவிஸ் வங்கியில் பணம் பதுக்கியுள்ளதை தேர்தல் ஆணையத்திடம் வெளிப்படையாக அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
19-மே-201914:54:22 IST Report Abuse
pradeesh parthasarathy அட ட டே .. அவரிடம் இருக்குன்னு அவர் தானே கூறியுள்ளார் ... அவர் அதை மறைத்தால் தானே குற்றம் ... சுவிஸ் வங்கியில் அக்கௌன்ட் வைத்திருக்கும் எல்லா பெயர் பட்டியலும் மத்திய அரசிடம் உள்ளதே ... மத்திய அரசு வெளியிடட்டும் பார்ப்போமே ...........
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
19-மே-201904:54:28 IST Report Abuse
J.V. Iyer மக்கள் பணத்தை கொள்ளை அடிப்பதற்காகவே காங்கிரஸ், திமுகவில் சேருகிறார்கள். ஆனால் மக்கள் மனதை கொள்ளை அடிப்பவர்கள் பாஜக
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
19-மே-201901:01:31 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் கான்-கிராஸ், கருப்புப்பணம், பிராடு, ராகுல் பப்பு ஒயிக..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X