இம்பால் :மணிப்பூரில் பா.ஜ., அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவது என நாகா மக்கள் முன்னணி முடிவு செய்துள்ளது.

நாகலாந்து மாநிலம் கோஹிமாவில் நடைபெற்ற நாகா மக்கள் முன்னணி கூட்டம் நடைபெற்றது. இதில் மணிப்பூர் மாநிலத்தில் பா.ஜ., அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ்பெறுவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மணிப்பூர் மாநிலத்தில் மொத்தம் 60 சட்டசபை இடங்கள் உள்ளன. கடந்த 2017-ல் நடந்த தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் 28 இடங்களை பெற்றது. இருப்பினும் 21 இடங்களை பெற்ற பா.ஜ., கட்சிக்கு 4 இடங்களை பிடித்த நாகா மக்கள்முன்னணி, மற்றும் தலா ஒரு இடங்களை வென்ற எல்.ஜே.பி., சுயேட்சை , ஏ.ஐ.டிசி உள்ளிட்ட பிற கட்சிகள் ஆதரவு அளித்து வந்தது. முதல்வராக பா.ஜ.வை சேர்ந்த என்.பிரேன்சிங் முதல்வாராக பதவி வகித்து வருகிறார்.
வாக்குறுதி நிறைவேற்றவில்லை
ஆதரவு வாபஸ் பெற்றது குறித்து என்.பி.எப். மாநில தலைவரான அவான்கோபுநெவிமாய் கூறுகையில் கடந்த 2017 ம் ஆண்டுஆட்சி அமைத்தது முதல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனவும்,தங்கள் கட்சிக்கு உரிய மரியாதையை அளிக்க வில்லை எனவும் கூறி இருந்தார்.
பா.ஜ., மறுப்பு
இதற்கு பதில் அளித்துள்ள பா.ஜ., செய்தி தொடர்பாளர் கூறுகையில் ஆட்சி அமைக்கும் போது எந்த பதவியையும் விரும்ப வில்லை என கூறிய அவர்கள் தற்போது பலகோரிக்கைகளை கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் கூட்டணிகட்சிகளுக்கு அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. என கூறினார்.