சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

தூக்கம் போச்சே!

Added : மே 18, 2019 | கருத்துகள் (1)
Advertisement
  தூக்கம் போச்சே!

துாக்கம் போச்சே!

'நல்லாத்தானே போயிட்டிருந்துச்சு... இப்படி, திடீரென கவிழ்த்து விட்டு போய் விட்டாரே' என, தெலுங்கானா முதல்வரும், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி தலைவருமான, சந்திரசேகர ராவை நினைத்து புலம்புகிறார், கேரள முதல்வர், பினராயி விஜயன்.மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர், பினராயி விஜயன். லோக்சபா தேர்தல்களில், மற்ற மாநிலங்களில், காங்கிரசுடன் கூட்டணி அமைத்தாலும், கேரளாவில், இரு கட்சிகளும் நேருக்கு நேர் மோதுகின்றன.ஆனாலும், இவர்களுக்குள், 'ஜென்டில்மேன் அக்ரிமென்ட்' என்ற எழுதப்படாத ஒப்பந்தம் உள்ளது. 'மத்தியில், மோடி தலைமையிலான, பா.ஜ., அரசை தோற்கடிக்க வேண்டும்' என்பது தான், அந்த ஒப்பந்தம். ஆனால், இந்த ஒப்பந்தத்துக்கு உலை வைத்து விட்டார், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்.சமீபத்தில், கேரளாவுக்கு வந்த இவர், பினராயி விஜயனை சந்தித்து, காங்., - பா.ஜ., அல்லாத கட்சிகளுடன் இணைந்து, மூன்றாவது அணி அமைப்பது குறித்து பேச்சுநடத்தினார்.இந்த விவகாரம், காங்கிரஸ் மேலிடத்துக்கு தெரிய வந்ததும், டென்ஷனாகி விட்டனர். மார்க்சிஸ்ட் மூத்த தலைவர்களிடம், இது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளனர்.மார்க்சிஸ்ட் தலைவர்களும், பினராயி விஜயனிடம், 'கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தலாமா' என, வருத்தப்பட்டுள்ளனர்.இதனால், நொந்து போன பினராயி, 'சந்திரசேகர ராவ், என் துாக்கத்தை கெடுத்து விட்டாரே' என,கவலையில் ஆழ்ந்துள்ளார்.



'ஓட்டு எண்ணும்போது தெரியும்!'

'தேர்தல் முடிவுகளே இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான, சந்திரபாபு நாயுடு செய்யும் அலட்டல், தாங்க முடியவில்லை' என, எரிச்சலுடன் கூறுகின்றனர், சக அரசியல்வாதிகள்.'இந்த தேர்தலில், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், காங்கிரஸ் தலைமையில், மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து, நாங்கள் தான் ஆட்சி அமைப்போம்' என, கூறி வருகிறார், சந்திரபாபு நாயுடு.பேசியதுடன் நிற்காமல், மாநில கட்சிகளின் தலைவர்களுடன், திரைமறைவில் ரகசிய பேச்சு நடத்தி வருகிறார். சில நேரங்களில் இவரது நடவடிக்கை, சற்று ஓவராகவே இருப்பதாக குமுறுகின்றனர், காங்., கட்சியினர்.'இப்போதே, பிரதமராகி விட்டது போல், ஓவராக, 'சீன்' போடுகிறார். இது, எங்கு போய் முடியும் என தெரியவில்லை. தெலுங்கானா முதல்வரும், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவருமான, சந்திரசேகர ராவுக்கு போட்டியாக, இவரும் கிளம்பி விட்டார் போலிருக்கிறது' என, புலம்புகின்றனர், ஆந்திர மக்கள்.தெலுங்கு தேசம் கட்சியினரிடம், இது குறித்து கேட்டால், 'இந்த முறை, எங்கள் தலைவர், 'கிங் மேக்கர்' இல்லை; கண்டிப்பாக, 'கிங்' தான்' என, பெருமையுடன் கூறுகின்றனர்.ஆந்திராவில் உள்ள எதிர்க்கட்சியினரோ, 'லோக்சபா தேர்தலில், ஒற்றை இலக்கத்தில் கூட, தெலுங்கு தேசம் ஜெயிக்கப் போவது இல்லை. ஓட்டு எண்ணும்போது, சந்திரபாபுவின் அலட்டல், தானாக அடங்கி விடும்' என, கிண்டலடிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - bengalooru,இந்தியா
19-மே-201903:00:00 IST Report Abuse
 nicolethomson ரெண்டு கோல்டியும் சேர்ந்து பண்ணும் அலப்பறை என்று விஷால் ஒரு படம் எடுத்திட போறார்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X