பதிவு செய்த நாள் :
கேதார்நாத்தில் மோடி; சோம்நாத்தில் ஷா

கேதார்நாத்: தேர்தல் பிரசாரம் முடிந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, கேதார்நாத் கோவிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்தார். இன்று, பத்ரிநாத் கோவிலுக்கு செல்கிறார்.

 கேதார்நாத்த, மோடி,சோம்நாத்,ஷா


உத்தரகண்ட் மாநிலம், ருத்ரபிரயாக் மாவட்டம், கேதார்நாத்தில், பழைமையான சிவன் கோவில்உள்ளது.ஆலோசனைஇமயமலை

அடிவாரத்தில், கடல் மட்டத்தில் இருந்து, 11 ஆயிரத்து, 755 அடி உயரத்தில்இந்தக் கோவில் அமைந்து உள்ளது.

குளிர்காலத்தில் இந்த கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை. மற்ற மாதங்களில் கோவில் நடை திறக்கப்படும். இந்த ஆண்டு, கடந்த, 9ம் தேதி, நடை திறக்கப்பட்டது.லோக்சபா தேர்தல் பிரசாரம், நேற்று முன்தினம் நிறைவடைந்தது.இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி, ஹெலிகாப்டர் மூலம் நேற்று காலை, கேதார்நாத் சிவன்கோவிலுக்கு வந்தார்.இடுப்பில் காவி துண்டு கட்டி, கையில் தடியுடன் வந்தார் மோடி. சிறப்பு பூஜை செய்து, சுவாமிதரிசனம் செய்தார்.பின், ,

Advertisement

கோவிலில் செய்ய வேண்டிய சீரமைப்பு பணிகள் குறித்துகோவில்நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.பத்ரிநாத் விஷ்ணு கோவிலுக்கு, பிரதமர் மோடி இன்று செல்கிறார்.


சிறப்பு பூஜை


பா.ஜ., தலைவர், அமித் ஷா, குஜராத் மாநிலத்தில் உள்ள, சோம்நாத் கோவிலில் நேற்று வழிபாடு நடத்தினார். அவருடன், மனைவி, மகன், மருமகள், பேத்தி ஆகியோரும் வந்திருந்தனர். சிவலிங்கத்துக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடத்தி, சுவாமி தரிசனம் செய்தனர். சோம்நாத் கோவில் அறங்காவலராகவும், அமித் ஷா பதவி வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganapati sb - coimbatore,இந்தியா
22-மே-201915:30:33 IST Report Abuse

ganapati sbராஜராஜ சோழன், சத்திரபதி சிவாஜிக்கு பின் நரேந்திரமோடி தான் அயராது மக்கள் பனி ஆற்றுவதோடு அவ்வவ்போது கோயிலுக்கும் செல்லும் இந்துமத ஆட்சியாளர் தொரட்டும் அவரின் தேசமே தெய்வம் எனும் பணி

Rate this:
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
22-மே-201914:34:00 IST Report Abuse

Swaminathan Chandramouliபிரியங்கா காந்தி மகா காளேஸ்வரர் கோயிலுக்கு போய் சாமி கும்பிடலாம் . மசூதிக்குப்போய் தொழுகை நடத்தலாம் அது தேர்தல் விதிமீறல் இல்லையா , இவனுங்களுக்கு ஊரான் முதுகை சொரிவதே வேலை

Rate this:
Raman - Chennai,இந்தியா
19-மே-201922:02:07 IST Report Abuse

RamanOn Nama Shivaya, Shivaya Namaohm...god bless PM Modi...

Rate this:
மேலும் 48 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X