பதிவு செய்த நாள் :
புதிய உத்தியில் பா.ஜ., - காங்., பிரசாரம்
அதிக கூட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்பு

புதுடில்லி: இன்றுடன் நிறைவு பெறும், ஏழு கட்ட லோக்சபா தேர்தலில், ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு பத்தை பெறுவதற்காக, பா.ஜ., மற்றும் காங்., புதிய உத்தியில் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டன.

புதிய உத்தி, பா.ஜ.,  காங்., பிரசாரம், பிரதமர் மோடி,பங்கேற்பு


பிரதமர் மோடி, 144 பொதுக் கூட்டங்களிலும், காங்., தலைவர் ராகுல், 125 கூட்டங்களிலும் உரையாற்றி உள்ளனர்.உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், ஒடிசா ஆகிய மூன்று மாநிலங்களில், 143 லோக்சபா தொகுதிகள் உள்ளன.அதனால், இம்மாநிலங்களின் தேர்தல் பிரசாரத்திற்கு, பா.ஜ., அதிக முன்னுரிமை அளித்துள்ளது.


பிரதமர் மோடி, கடந்த ஒன்றரை மாதங்களில், நாடு முழுவதும், 144 தேர்தல் பொதுக் கூட்டங்கள் மற்றும் சாலைப் பேரணிகளில் பங்கேற்றுள்ளார்.அவற்றில், இந்த மூன்று மாநிலங்களில் மட்டும், 58 கூட்டங்களில், மோடி உரையாற்றியுள்ளார். இழப்புஅவர், தன் பிரசாரத்தில், 40 சதவீத பங்கை, இம்மாநிலங்களுக்கு ஒதுக்கிஉள்ளார்.



குறிப்பாக, உ.பி.,யில் மட்டும், மோடி, 36 கூட்டங்களில் பேசியுள்ளார். இங்கு அதிக இடங்களை கைப்பற்றுவதன் மூலம், வடக்கு மற்றும் தென் மாநிலங்களில் இழப்பு ஏற்பட்டால், அதை சரி செய்து கொள்ளலாம் என்பது, பா.ஜ.,வின் வியூகம்.கடந்த, 2014 தேர்தலில்,உ.பி.,யின், 80 லோக்சபா தொகுதி களில், பா.ஜ., 73 இடங்களை கைப்பற்றியது.

மேலும், 2017ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலிலும் வென்று, ஆட்சி அமைத்தது.இந்த தேர்தலில், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய லோக் தளம் ஆகியவை கூட்டு சேர்ந்து, 'மெகா' கூட்டணி அமைத்து உள்ளதால், உ.பி.,யில் போட்டி கடுமையாகி உள்ளது.


இதையொட்டி, மோடி, தன் பிரசாரத்தில், உ.பி.,க்கு முதலிடம் அளித்துள்ளார்.மேற்கு வங்கத்தில், 42 தொகுதிகளில், தற்போது, பா.ஜ., வசம், இரண்டு இடங்கள் மட்டுமே உள்ளன. ஒடிசாவில், 21 லோக்சபா தொகுதிகளில், ஒன்று மட்டுமே, பா.ஜ., வசம் உள்ளது. இங்கு, அதிக இடங்களை கைப்பற்ற பா.ஜ., வியூகம் வகுத்தது.


இதன் அடிப்படையிலேயே, இந்த இரண்டு மாநிலங்களிலும், மூன்று லோக்சபா தொகுதி களுக்கு ஒன்று என்ற வீதத்தில், மேற்கு வங்கத்தில், 17 பொதுக் கூட்டங்களிலும், ஒடிசாவில், எட்டு இடங்களிலும், மோடி உரையாற்றியுள்ளார்.

காங்கிரஸ்

இந்த தேர்தலில், உ.பி., ராஜஸ்தான், மத்திய பிரதேசம், கேரளா ஆகிய நான்கு மாநிலங்களுக்கு, காங்., முன்னுரிமை அளித்துள்ளது. காங்., தலைவர், ராகுல், 125 கூட்டங்களில் பேசியுள்ளார்.

அதில், இந்த நான்கு மாநிலங்களில் மட்டும், 52 கூட்டங்களில் பிரசாரம் செய்துள்ளார்.உ.பி.,யில், கடந்த தேர்தலில், ரேபரேலியில், சோனியா; அமேதியில்,ராகுல் ஆகியோர் மட்டுமே வெற்றி பெற்றனர். அதனால், இம்முறை, அதிக இடங்களை கைப்பற்ற, ஐந்து தொகுதிகளுக்கு, ஒன்று என்ற வீதத்தில், 18 கூட்டங்களில், ராகுல் பேசியுள்ளார்.



கிழக்கு, உ.பி.,யின் காங்., பொதுச் செயலராக,

Advertisement

பிரியங்கா நியமிக்கப்பட்டுள்ளதால், இம் மாநிலத்தில், அதிக இடங்களை கைப்பற்றுவது, காங்.,குக்கு கவுரவ பிரச்னையாக மாறி உள்ளது.ராஜஸ்தானில், 25 லோக்சபா தொகுதிகளில், காங்கிரசுக்கு ஒரு இடம் மட்டுமே உள்ளது. எனினும், அக்கட்சி, 2018, சட்டசபை தேர்தலில் வென்று, மாயாவதி துணையுடன் ஆட்சி அமைத்துள்ளது.



இம்மாநிலத்தில், இரண்டு தொகுதிக்கு ஒன்று என்ற வீதத்தில், 12 கூட்டங்களில், ராகுல் பிரசாரம் செய்துள்ளார்.வடக்கு, கிழக்கு பகுதிகளில் இழப்பு ஏற்பட்டாலும், அதை, தென் மாநிலங்கள் மூலம் ஈடு செய்ய, காங்., முடிவெடுத்ததால், ராகுல், கேரளாவில், 12 கூட்டங்களில் உரையாற்றி உள்ளார். அத்துடன், வயநாடு லோக்சபா தொகுதியிலும் போட்டியிடுகிறார்.



கேரளாவின், 20 தொகுதிகளில், ஏழு, காங்., வசம் உள்ளது.மத்திய பிரதேசத்தின், 29 தொகுதிகளில், கடந்த தேர்தலில், காங்., மூன்றில் வென்றது. இம்முறை, மாநில அரசும், அக்கட்சி வசம் உள்ளதால், அதிக இடங்களை கைப்பற்றும் நோக்கில், ராகுல், 10 கூட்டங் களில் பேசியுள்ளார். பா.ஜ., மற்றும் காங்., கட்சிகளின் புதிய உத்தி, எந்த அளவு பயன் அளித்துள்ளது என்பது, வரும், 23ம் தேதி, ஓட்டு எண்ணிக்கையில் தெரிந்து விடும்.


Advertisement

வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நீதிபதி கவுண்டர் - Dharapuram,இந்தியா
19-மே-201916:05:09 IST Report Abuse

நீதிபதி கவுண்டர்சரி

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
19-மே-201915:17:00 IST Report Abuse

Endrum Indianபிரதமர் மோடி, 144 பொதுக் கூட்டங்களிலும், உரையாற்றினார். காங்., தலைவர் ராகுல், 125 கூட்டங்களிலும் உளறினார். இவ்வளவு தான் வித்தியாசம்.

Rate this:
N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா
19-மே-201907:34:47 IST Report Abuse

 N.Purushothamanஇப்போவே எல்லா இடத்திலேயும் துண்டு போட்டு வச்சிட்டானுங்க ..ஆட்சிக்கு வந்து கொள்ளையடிக்க அந்த அளவிற்கு கை அரிப்பு ...

Rate this:
மேலும் 16 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X