பதிவு செய்த நாள் :
மத்திய அரசியல் ,காய் நகர்த்தல்,திருப்பம், சந்திரபாபு நாயுடு, ராகுல்

புதுடில்லி:லோக்சபா தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தேசிய அரசியல் காய்நகர்த்தலில் அடுத்த திருப்பமாக, காங்., தலைவர் ராகுல் மட்டுமின்றி, பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களையும், ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் தலைவருமான, சந்திரபாபு நாயுடு நேற்று சந்தித்தார். தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி குறித்து, அவர்களுடன் ஆலோசனை நடத்தினர். பா.ஜ., ஆட்சி மீண்டும் அமைவதை தடுக்கும், பகீரத பிரயத்தனத்தில்,அவர் ஈடுபட்டுள்ளார்.
லோக்சபாவுக்கான, ஏழாம் கட்டத் தேர்தல், எட்டு மாநிலங்களில் உள்ள, 59 தொகுதிகளில் இன்று நடக்கிறது.தேர்தல் முடிவுகள், வரும், 23ல் வெளியாக உள்ளன. இந்த நிலையில், தேர்தல் முடிவுகளுக்குப் பின் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைகளை, எதிர்க்கட்சிகள் துவக்கி உள்ளன.பா.ஜ., மற்றும் காங்கிரஸ் கட்சி அல்லாத, மூன்றாவது அணியை அமைக்கும் முயற்சியில், தெலுங்கானா முதல்வரும், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவருமான, சந்திரசேகர ராவ் ஈடுபட்டு உள்ளார்.மார்க்., கம்யூ.,வைச் சேர்ந்த, கேரள முதல்வர், பினராயி விஜயன், தி.மு.க., தலைவர், ஸ்டாலின் ஆகியோரை அவர் சந்தித்தார்.

புதிய அரசு

இந்த நிலையில், மூன்றாவது அணியை முறியடிக்கும் நோக்கிலும், காங்., ஆதரவுடன் புதிய அரசை ஏற்படுத்தும் நோக்கிலும், தேர்தலுக்குப் பின் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும், தெலுங்கு தேசத் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு, தீவிரமாக களமிறங்கியுள்ளார்.

கடந்த தேர்தலில், பா.ஜ., சார்பிலான, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த சந்திரபாபு நாயுடு, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் பிரச்னையில், கூட்டணியில் இருந்து வெளியேறினார்.மீண்டும், பா.ஜ., அரசு அமையக் கூடாது என்பதற்கான, பகீரதபிரயத்தனத்தில், அவர் ஈடுபட்டுள்ளார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவரான, காங்., மூத்த தலைவர், சோனியா, சமீபத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன்

தொலைபேசியில் ஆலோசனை செய்தார்.மற்ற எதிர்க்கட்சித் தலைவர்களுடனும்,
அவர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

பா.ஜ., தலைமையிலான, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குபெரும்பான்மை கிடைக்காத நிலையில், புதிய ஆட்சி அமைப்பது குறித்து, இந்தத் தலைவர்களுடன், சோனியா ஆலோசித்தார்.
தேர்தல் முடிவுகள் வெளியாகும், 23ம் தேதி, டில்லியில், அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் கூடி, ஆலோசனை நடத்த, அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

ஆலோசனை
இந்த நிலையில், காங்., தலைவர், ராகுலை, டில்லி யில் நேற்று சந்தித்தார், சந்திரபாபு நாயுடு.ஒரு மணி நேரம் நடந்த இந்த ஆலோசனையின் போது, புதிய அரசு அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து, இருவரும் பேசியதாக தெரிகிறது.மேலும், தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையிலும் ஆட்சி அமைப்பதற்கு, பா.ஜ., முயற்சி செய்தால், அதை முறியடிப்பது குறித்தும், ஆலோசித்ததாக தெரிகிறது.

அதற்கு முன், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர், ஜி.சுதாகர் ரெட்டி, டி.ராஜா ஆகியோரை, சந்திரபாபு நாயுடு சந்தித்தார். தேசியவாத, காங்., தலைவர், சரத் பவார், லோக்தந்த்ரிக் ஜனதா தளத் தலைவர், சரத் யாதவ் ஆகியோரையும் சந்தித்து, ஆலோசனை நடத்தினார்.

தேர்தலுக்குப் பிந்தைய, எதிர்க்கட்சிகளின் கூட்டணி குறித்து, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல், காங்., தலைவருமான, மம்தா பானர்ஜி; டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான, அரவிந்த் கெஜ்ரிவால்; மார்க்., கம்யூ., பொதுச் செயலர், சீதாராம் யெச்சூரி ஆகியோருடன்,

சந்திரபாபு நாயுடு ஏற்கனவே பேசியுள்ளார்.
கூட்டணி

இந்த நிலையில், உத்தர பிரதேசத்தில், தனியாக கூட்டணி அமைத்து போட்டியிட்ட, பகுஜன் சமாஜ் தலைவர், மாயாவதி, சமாஜ்வாதி தலைவர், அகிலேஷ் யாதவ் ஆகியோருடனும், தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி அமைப்பது குறித்து, சந்திரபாபு நாயுடு, நேற்று ஆலோசனை நடத்தினார்.

டில்லியில் இருந்து, உ.பி., மாநிலம் லக்னோவுக்கு சென்ற சந்திரபாபு, கூட்டணிக்கு ஆதரவு தரும்படி அவர்களிடம் கேட்டுக் கொண்டார். வரும், 23ல் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களை, சந்திரபாபு நாயுடு சந்தித்துள்ளது, தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒதுக்க முடியாத, பிறர்
கடந்த, 1984க்குப் பின், 2014ல் நடந்த தேர்தலில் தான், ஒரே கட்சி, தனிப் பெரும்பான்மையுடன், ஆட்சி அமைத்தது. அப்போது, இனி, 'பிற கட்சிகள்' எனப்படும், மாநிலக் கட்சிகளின் தயவு இல்லாத ஆட்சி முறை தொடரும் என, பரவலாக பேசப்பட்டது. ஆனால், ஐந்து ஆண்டுகளில், நிலைமை மாறியுள்ளது.

இந்தத் தேர்தலில், மாநிலக் கட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் ஏற்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியான பின், இந்த முக்கியத்துவம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தற்போதைய சூழ்நிலையில், நான்கு சாத்தியக்கூறுகள் உள்ளன.
* பா.ஜ., தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி, பெரும்பான்மைக்கு தேவையான, 272 தொகுதிகளை விட அதிக இடங்களில் வெற்றி பெறலாம்
* காங்கிரஸ்

தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி, பெரும்பான்மையை பெறலாம்
* இந்த இரு கூட்டணியில் இல்லாத மற்ற கட்சிகள் இணைந்து, மூன்றாவது அணியாக, ஆட்சி அமைக்கலாம்
* தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பா.ஜ., அல்லது காங்., கூட்டணிக்கு, சில மாநில கட்சிகள் ஆதரவுதந்து, ஆட்சி அமையலாம்.ஆக எப்படி இருந்தாலும், இந்த தேர்தல் முடிவுகளில், மாநிலக் கட்சிகளுக்கான முக்கியத்துவம் அதிகரித்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் புள்ளி விபரங்களின்படி, 2014 லோக்சபா தேர்தலில், பா.ஜ., மற்றும் காங்., இடையேயான ஓட்டுசதவீதம் தான் மாறியுள்ளது. பிற கட்சிகளுக்கான ஓட்டு சதவீதம், 1998 முதல், நிலையாக உள்ளது. பிற கட்சிகள், சராசரியாக, 40 சதவீத ஓட்டுகளை பெற்றுள்ளன. 2009 தேர்தலை விட, 2014 தேர்தலில், பிற கட்சிகளுக்கான ஓட்டு சதவீதம், சற்று உயர்ந்துள்ளது.

ராகுலுக்குதேவகவுடாஆதரவு

எதிர்க் கட்சிகளின் மெகா கூட்டணி ஆட்சி அமைக்க நேரிட்டால், யார்பிரதமர் என்பது குறித்து, இழுபறி நிலவி வருகிறது.இந்த நிலையில், காங்., தலைவர், ராகுல் பிரதமராக, ஆதரவு அளிப்பதாக முன்னாள் பிரதமரும், மத சார்பற்ற ஜனதா தளத் தலைவருமான, தேவ கவுடா தெரிவித்து உள்ளார்.ஆந்திர மாநிலம், திருப்பதியில், தேவ கவுடா கூறியதாவது:

எதிர்க்கட்சிகள் கூட்டணி அரசு அமைந்தால், ராகுல் பிரதமராக முழு ஆதரவு தருகிறோம். இதில் எந்த சந்தேகமும் இல்லை. வரும், 23ல், இது உறுதி செய்யப்படும்.இவ்வாறு, அவர் கூறினார். ''பிரதமர் பதவி தொடர்பாக, காங்., கட்சிக்கு எங்களுடைய ஆதரவை ஏற்கனவே தெரிவித்து உள்ளோம்; அதில் எந்த மாற்றமும் இல்லை,'' என, கவுடாவின் மகனும், கர்நாடக முதல்வருமான, குமாரசாமி கூறியுள்ளார்.

ராகுல் பிரதமர் பதவிக்கு, தி.மு.க.,தலைவர் ஸ்டாலின் ஏற்கனவே வழிமொழிந்து உள்ளார். இந்த நிலையில், முன்னாள், பிரதமரான, தேவ கவுடாவும் அதற்கு ஆதரவு தெரிவித்து உள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
22-மே-201904:15:35 IST Report Abuse

J.V. Iyerஆக அடுத்த பிரதமர் ஸ்டாலின் அண்ணன் அவர்கள். துணை பிரதமர் நாயுடு, மம்தா, அகிலேஷ், கைப்புள்ளை,மாயாவதி, சத்ருகன் சின்ஹா, கனிமொழி, லல்லு, புல்லு, பல்லு, எல்லோரும்.

Rate this:
Sukumar Talpady - Mangalore ,இந்தியா
21-மே-201908:41:18 IST Report Abuse

Sukumar Talpadyகருத்து கணிப்பு பிரகாரம் ஆந்திர பிரதேசத்தில் சந்திரபாபு நாய்டு தோற்க போகிறார் என்று அறிய வந்துள்ளது .முதலில் இவர் இவருடைய ஆட்சி , மாநிலம் இரண்டையும் காப்பாற்றி கொள்ளட்டும் .பிறகு பா ஜ க ஆட்சி வருவதை தடுக்க முயல்வது பற்றி பிறகு யோசிக்கலாம் .

Rate this:
TamilArasan - Nellai,இந்தியா
20-மே-201916:25:02 IST Report Abuse

TamilArasanநாய்டு குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று திரிகிறார்.... BJP கூட்டணியை விட்டு சென்று இன்று மாநிலத்தில் ஆட்சியை இழந்து செல்லாக்காசாக போகிறார்...

Rate this:
மேலும் 25 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X