அரசியல் செய்தி

தமிழ்நாடு

வரலாற்று ஆசிரியரான கமல் ஜெயகுமார் கிண்டல்

Added : மே 18, 2019 | கருத்துகள் (8)
Advertisement
 வரலாற்று ஆசிரியரான கமல் ஜெயகுமார் கிண்டல்

சென்னை''கணக்கு வாத்தியாராக, ஸ்டாலின் உள்ள நிலையில், கமல் வரலாற்று ஆசிரியராக கிடைத்திருக்கிறார்,'' என, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் கிண்டல் அடித்துள்ளார்.சென்னை, மெரினா டூமிங் குப்பத்தில், தீ விபத்தால் பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறிய, அமைச்சர் ஜெயகுமார் கூறியதாவது:தேர்தல் ஆணையர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு, தேர்தல் ஆணையத்தின் உள் விவகாரம். இதுகுறித்து, கருத்து கூற முடியாது. மூன்று தேர்தல் ஆணையர்களுக்கான அதிகாரத்திற்குள், அரசியல் கட்சிகள் தலையிட முடியாது. இதை, அவர்களே தீர்த்துக் கொள்வர்.எந்த அரசியல்வாதியும், மக்களை தான் நம்பியிருக்க வேண்டும்; மதத்தை நம்பியிருக்கக் கூடாது. மக்களுக்கு நிறைய செய்ய வேண்டியுள்ளது.

இதுகுறித்து, ஆக்கப்பூர்வமான கருத்துக்களை கூறுவதை விட்டு, மதத்தை வைத்து அரசியல் செய்வதை விட, மோசமான விஷயம் வேறு எதுவும் இருக்க முடியாது.ஏற்கனவே, கணக்கு வாத்தியார், ஸ்டாலின் இருக்கிறார். தப்பு தப்பாக, கணக்கை கூட்டல் செய்வார். அந்த வரிசையில், வரலாற்று ஆசிரியர் கமல், நமக்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சி. ஸ்டாலினுக்கு பதவி மேனியாவும், தினகரனுக்கு பதவி மேனியாவுடன், பண மேனியா நோயும் தாக்கியுள்ளது.தமிழகத்தில் பருவ மழை பொய்த்ததால், ஆங்காங்கே குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
குடிநீர் பிரச்னையை தீர்க்க, அரசு சாதுரியமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தின் மின் தடையில்லை. சில இடங்களில் பிரச்னை ஏற்படலாம்; அதை, மின் துறையினர், உடனடியாக சரி செய்து கொடுக்கின்றனர்.மழை வேண்டி கோவில்களில் யாகம் நடத்துவது, ஒரு நம்பிக்கை. மழை வர அதிக மரங்களை நட வேண்டும். ஆளுக்கு ஒரு மரம் வைத்தால், தமிழகத்தில், ஐந்து கோடி மரங்கள் உருவாகும். தமிழகம் சோலைவனமாக மாறுவதுடன், தேவையான மழை கிடைக்கும்.இவ்வாறு, ஜெயகுமார் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivas - Chennai,இந்தியா
19-மே-201914:09:57 IST Report Abuse
Srinivas கொமாரு....பதவியில் இருந்துகொண்டு மற்றவர்களைப் பற்றி நக்கல்..? வேலை தேடி வந்த அபலை அப்பாவிப்பெண்ணை சூறையாடி தாயாக்கி கைவிட்ட கதை மறந்துவிட்டதா? மக்கள் மறக்கவில்லை. ஊடகங்கள் மைக்கை நீட்டினால் அடிமை வாயிலிருந்து அபத்தமாக வரும் என்பதை ஒவ்வொரு நாளும் ஒரு அடிமை நிரூபித்துக் கொண்டுள்ளார். இந்த அடிமை கோமாளிகளை பேசவிடாமல் அடக்கி வைத்திருந்த அம்மாஜி இந்த விஷயத்தில் பாராட்டப்பட வேண்டியவர்.
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
19-மே-201908:01:09 IST Report Abuse
blocked user கமல் தான் எடுத்த படத்தில் கதை மயக்கத்தில் இருப்பது ஓரளவுக்கு உண்மைதான்.
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
19-மே-201905:37:34 IST Report Abuse
J.V. Iyer அமெரிக்காவில் பெயரை தப்பாக புரிந்துகொண்டு கமாலை கைது செஞ்சபோது, "நான் ஹிந்து .. நான் ஹிந்து .. " என்று கதறியவர் தான் இந்த கமல் ஹாசன். இவர் இப்போது IS கைப்பிடியில் சிக்கி இருப்பதாக தகவல். அதனால்தான் இப்போது இந்தியாவில் கலகம் செய்கிறார். கேட்கும் முறையில் இவரை கேட்டால் உண்மை வெளிவரும்.
Rate this:
Share this comment
சந்தோசு கோபு - Vellore,இந்தியா
19-மே-201907:59:32 IST Report Abuse
சந்தோசு கோபுஓஹோ.. அப்போ அமெரிக்காவில் இந்த மாதிரி பேர் இருந்தா கைது செஞ்சுடுறாங்களா? நெசமாவா?....
Rate this:
Share this comment
சந்தோசு கோபு - Vellore,இந்தியா
19-மே-201908:03:17 IST Report Abuse
சந்தோசு கோபு//..IS கைப்பிடியில் சிக்கி இருப்பதாக தகவல்..// ராஜேந்திர பாலாஜியை பின்பற்றி நடக்கிற பரிதாப நிலைமை....
Rate this:
Share this comment
சந்தோசு கோபு - Vellore,இந்தியா
19-மே-201908:08:50 IST Report Abuse
சந்தோசு கோபுஜெயகுமார்.. சிரிப்பு காமெடி கும்மாளம் தான் அரசியல். மே.23க்கு பிறகு உங்களை பாத்து சிரிப்பா சிரிக்க போகுது இந்த உலகம். அதுவரைக்கும் நீங்க கொஞ்சம் சிரிச்சுக்குங்க....
Rate this:
Share this comment
Sridhar - Jakarta,இந்தோனேசியா
19-மே-201909:53:11 IST Report Abuse
Sridharஅய்யய்ய..அவுரு கிறிஸ்துவருயா.... ஒருவேள ரெண்டுதிலேயும் சிக்கி கிட்டுருக்காரா?...
Rate this:
Share this comment
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
19-மே-201911:41:34 IST Report Abuse
கல்யாணராமன் சு.சந்தோசு கோபுவுக்கு அந்த கதையே தெரியாதா? அவருடைய அருமை நாயகன் தசாவதாரம் சினிமாவை கனடாவில் கொஞ்சம் எடுத்துவிட்டு, மேக்கப்புக்காக லாஸ் ஏஞ்செல்ஸ் செல்வதற்காக வான் கூவர் விமான நிலையத்தில் பிளேனில் ஏறுவதற்கு முன் அமெரிக்க குடியேற்ற அதிகாரிகள் கேட்டதற்கு இவர் சொன்ன பதில்கள் பின் வருமாறு:......... கேள்வி: உங்கள் பெயர் பதில்: கமால் ஹசன்.......... கேள்வி: கனடாவில் என்ன செய்துகொண்டிருந்தீர்கள்? பதில்: shooting ........... கேள்வி: எங்கே போகிறீர்கள்? பதில்: லாஸ் ஏஞ்செல்ஸ்................. கேள்வி: அங்கே என்ன செய்யப்போகிறீர்கள்? பதில்: முகமூடி (மாஸ்க்) தயார் செய்து போட்டுகொள்ளப்போகிறேன் ......... கேள்வி: அதற்கு பிறகு? பதில்: கனடாவில் வந்து ஷூட்டிங்கை திரும்பத் தொடங்கவேண்டும். அதற்கான ஏற்பாடுகளை எனது ஆட்கள் செய்துகொண்டிருக்கிறார்கள் ...... இந்த பதில்களை கேட்டவுடன் அமெரிக்கர்கள் அரண்டு பொய் அவருக்கு அனுமதி கொடுக்க மறுத்துவிட்டார்கள் .....சந்தேகமென்றால் பழைய செய்திகளை புரட்டிப் பார்க்கவும் ........ இன்னொன்று, ஷாருக் கான் அம்பானியின் மனைவியுடன் அமெரிக்காவில் வார்ட்டன் பல்கலைக்கழகத்துக்கு சென்றபோதும், இதே மாதிரி நிறுத்திவைத்து கேள்விகேட்டதும் ஒரு பெரிய செய்தியாக நான்கு வருடங்களுக்கு முன் வந்தது ...........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X