பதிவு செய்த நாள் :
தேர்தல் ஆணையத்தில் மோடிக்கு சலுகையா?
ஆணையர் அசோக் கடிதத்தால் சர்ச்சை

புதுடில்லி:''பிரதமர் மோடி, பா.ஜ., தலைவர் அமித் ஷா ஆகியோர் மீதான புகார்களில், நற்சான்றிதழ் வழங்கப்பட்டதை ஏற்றுக் கொள்ள மாட்டேன். விசாரணையில் என் கருத்து ஏற்றுக்கொள்ளப்படவில்லை,'' என, தேர்தல் ஆணையர்,அசோக் லவாஸா கூறியுள்ளார்.

'கருத்து முரண்பாடு ஏற்படுவது இயல்பு தான்; ஆனால், பெரும்பான்மை அடிப்படையில் தான் முடிவு எடுக்கப்படும்,'' என, தலைமை தேர்தல் ஆணையர், சுனில் அரோரா பதிலளித்துள்ளார்.


நடவடிக்கை

தேர்தல் ஆணையத்தில், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் இரு ஆணையர்கள் நியமிக்கப்படுகின்றனர். மூன்று பேரும் சேர்ந்தே, எந்த முடிவையும் எடுக்க வேண்டும். புகார்களின் மீதான நடவடிக்கையிலும், மூவரின் ஒருமித்த கருத்து இருந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும்; மூவரில் இருவர் என்ற பெரும்பான்மையின் கருத்துக்கு ஏற்பவும் நடவடிக்கை எடுக்கலாம்.
இருப்பினும், மூவரின் கருத்தும் பதிவு செய்யப்பட வேண்டும் என்பது விதிமுறை. தலைமை தேர்தல் ஆணையராக, 2018, டிச., 2 முதல், சுனில் அரோரா பதவி வகிக்கிறார்.

ஆணையர்களாக, அசோக் லவாஸா, 2018 ஜனவரி, 23ம் தேதியும், சுசில் சந்திரா, 2019, பிப்., 15ம் தேதியிலும் நியமிக்கப்பட்டனர். லோக்சபாவுக்கு, ஏழு கட்டங்களாக அறிவிக்கப்பட்ட தேர்தல், இறுதிக்கட்டமாக, 59 தொகுதிகளில் இன்று முடிவடைய உள்ளது.

விதிமுறை அமல்

தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்தே, நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதுவரை ஆயிரக்கணக்கான நடத்தை விதிமுறை மீறல் புகார்கள் வந்துள்ளன.அதில்,பிரதமர் மோடி மற்றும் பா.ஜ., தலைவர் அமித் ஷா ஆகியோர் மீது, 11 புகார்கள் வந்தன. அவற்றில், ஆறு புகார்கள் மீது, மோடி மற்றும் அமித் ஷா ஆகியோருக்கு சாதகமாக, தேர்தல் ஆணையம் தீர்ப்பு வழங்கியது.


ஆணையத்தின் இந்த தீர்ப்புக்கு, முதல்நிலை ஆணையரான, அசோக் லவாஸா, கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனால், அவரது கருத்து ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பது, தற்போது வெளியாகி உள்ள, அவரது கடிதத்தின் மூலம் தெரியவந்துள்ளது.


தேர்தல் ஆணையர் அசோக் லவாஸா, கடந்த, 4ம் தேதி, தலைமை தேர்தல் ஆணையருக்கு அனுப்பிய கடிதம்:பிரதமர் மோடி, பா.ஜ., தலைவர் அமித் ஷா ஆகியோர், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியுள்ளனர். ஆனால், இருவரும் நடத்தை விதிமுறையை மீறவில்லை என, ஆணையம்

Advertisement

அறிவித்தது. இருவர் மீதான, ஆறு புகார்களில், என் கருத்து ஏற்கப்படாதது மட்டுமின்றி, அதை பதிவும் செய்யவில்லை.



அதில், ஐந்து புகார்களில், நடத்தை விதிமுறை மீறவில்லை என, நற்சான்றிதழ் அளித்துள்ளதை நான் ஏற்க வில்லை. அதனால், இனி, தேர்தல் ஆணைய கூட்டங்களில் பங்கேற்பது பிரயோஜனம் இல்லை. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


பெரும் சர்ச்சை


தலைமை தேர்தல் ஆணையத்தில், அதிகாரிகளுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பது, அரசியல் வட்டாரத்தில் மட்டுமின்றி, நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.''தற்போது, தேர்தல் ஆணையர்களிடம் பிளவு ஏற்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் மாண்பை காப்பாற்ற, அசோக் லவாஸாவின் கருத்துகள் பதிவு செய்யப்பட வேண்டும,'' என, காங்., செய்தித் தொடர்பாளர், ரந்தீப் சூரஜ்வாலா கூறினார். இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையர், சுனில் அரோரா, டில்லியில் நேற்று, நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:



கடந்த, 14-ம் தேதி, தேர்தல் ஆணையத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. மொத்தம், 13 விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க முடிவு செய்யப்பட்டு இருந்தது. அதில், தேர்தல் நடத்தை விதிமீறல் குறித்தும், விவாதிக்க முடிவு செய்திருந்தோம்.மூன்று தேர்தல் ஆணையாளர்களுமே, மற்றவரின் நகல் போல இருக்க முடியாது. ஒவ்வொருக்கும் ஒரு கருத்து இருக்கும்.


கடந்த காலங்களிலும், தேர்தல் ஆணையாளர்களுக்குள் மாறுபட்ட கருத்துகள் இருந்துள்ளன. முரண்பாடு ஏற்படுவது இயல்பு தான். மாறுபட்ட கருத்தும் தேவை தான்; ஆனால், எல்லா கருத்துமே, தேர்தல் ஆணைய விதிமுறைக்கு உட்பட்டுதான் இருக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
19-மே-201920:20:33 IST Report Abuse

Darmavanகாங்கிரஸ் எப்படி தன்4 உச்ச நீதிகளை தெருவுக்கு கொண்டு வந்து கேவலப்படுத்தியதோ அதே முறையில் தேர்தல் கமிஷனில் தன் ஆளை தகராறு செய்ய விட்டிருக்கிறது.கோர்ட் நீதிகளில் கூட 2க்கு ஒன்று என்ற வகையில் தீர்ப்பு வருகிறது.அதற்காக அந்த ஒரு நீதி இஇப்படி தெருவுக்கு வந்து அமர்க்களம் செய்வாரா. இதன் பின்னணியில் காங்கிரஸின் சூழ்ச்சி இருக்கிறது.

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
19-மே-201917:56:41 IST Report Abuse

Pugazh V

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
19-மே-201917:55:24 IST Report Abuse

Pugazh Vஉ.நீதிமன்றம் விளக்கம் கேட்டு வாங்கி.. படிச்சு தீர்ப்பு சொல்றதுக்குள்ள.நாலைந்து எலக்ஷன் முடிஞ்சுடும். மெஷின் ல.டகால்டி பண்டாம இருந்தா..நோட்டா வுக்கு கீள தான் .

Rate this:
மேலும் 23 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X