சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டூவீலர்கள் மோதலில் இருவர் பலி

Added : மே 18, 2019
Share
Advertisement
கூடலுார், தேனி மாவட்டம் கூடலுாரில் டூவீலர்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஆனந்தகுமார் 25, நாகேந்தின் 17, பலியாயினர்.கூடலுார் கிருஷ்ணசாமி கவுண்டர் தெருவைச் சேர்ந்த ராஜா மகன் ஆனந்தகுமார். இவர் நண்பர் தங்கம் 21, என்பவரை தனது டூவீலரில் ஏற்றிக்கொண்டு நேற்றுமுன்தினம் இரவு 9:15 மணிக்கு கம்பத்தில் இருந்து கூடலுார் நோக்கி வந்தார். இருவரும் 'ெஹல்மெட்' அணியவில்லை. தேசிய
டூவீலர்கள் மோதலில் இருவர் பலி

கூடலுார், தேனி மாவட்டம் கூடலுாரில் டூவீலர்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஆனந்தகுமார் 25, நாகேந்தின் 17, பலியாயினர்.
கூடலுார் கிருஷ்ணசாமி கவுண்டர் தெருவைச் சேர்ந்த ராஜா மகன் ஆனந்தகுமார். இவர் நண்பர் தங்கம் 21, என்பவரை தனது டூவீலரில் ஏற்றிக்கொண்டு நேற்றுமுன்தினம் இரவு 9:15 மணிக்கு கம்பத்தில் இருந்து கூடலுார் நோக்கி வந்தார். இருவரும் 'ெஹல்மெட்' அணியவில்லை. தேசிய நெடுஞ்சாலையில் துர்க்கையம்மன் கோயில் அருகே வந்தபோது எதிரே காஞ்சிமரத்துறையைச் சேர்ந்த வீரணன் மகன் நாகேந்தின் , நண்பர் ஆவேஷ் 14, ஆகிய இருவரும் 'ெஹல்மெட்' அணியாமல் வந்த மற்றொரு டூவீலர் நேருக்கு நேர் மோதியது. இதில் ஆனந்தகுமார் சம்பவ இடத்திலேயே பலியானார். நாகேந்திரன் கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். தங்கம், ஆவேஷ் பலத்த காயத்துடன் தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கூடலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X