சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலைகந்து வட்டி கொடுமை தொடர்கிறது

Added : மே 18, 2019 | கருத்துகள் (1)
Advertisement
ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலைகந்து வட்டி கொடுமை தொடர்கிறது

நாகர்கோவில், -கந்துவட்டி கொடுமையால் நாகர்கோவிலில் சுப்பிரமணியன் 52, மனைவி ஹேமா 48. மகள் ஷிவானி 20, தாய் ருக்மணி 72, தற்கொலை செய்து கொண்டனர்.
நாகர்கோவில் அருகே வஞ்சி மார்த்தாண்டன் புது தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். ஏஜன்சி நடத்தி வந்தார். மகள் ஷிவானி ஹோமியோ டாக்டர் இறுதி ஆண்டு படித்து வந்தார்.
அண்மையில் வங்கி கடன் மூலம் புதிதாக வீடு கட்டி குடியேறினார்.
நேற்று காலை கடை திறப்பதற்காக ஊழியர்கள் சாவி வாங்க வந்த
போது வீடு திறக்கவில்லை. அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஹேமாவின் தந்தைக்கு தகவல் கொடுத்தனர்.
அவர் வந்த பின் ஜன்னல் கம்பியை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது சுப்பிரமணியன், ேஹமா, ருக்மணி இறந்து கிடந்தனர். ஷிவானிக்கு மட்டும் நாடி துடிப்பு இருப்பதாக தெரிந்தது. அவரை உடனடியாக தனியார் மருத்துவமனைககு எடுத்து சென்றனர்.ஆனால், அங்கு
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரும் இறந்து
விட்டதாக தெரிவித்தனர்.தொழில் நஷ்டம் காரணமாக சுப்பிரமணியன், கந்து வட்டிக்கு கடன் வாங்கியதாகவும், பல மடங்கு வட்டி கட்டியும் கடன் குறையாததால் குளிர்பானத்தில் பூச்சிமருந்து கலந்து நான்கு பேரும் குடித்து இறந்துள்ளதாக உறவினர்கள் கூறினர்.
இருப்பினும் தற்கொலைக்கு வேறு காரணம் உண்டா என
வடசேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Milirvan - AKL,நியூ சிலாந்து
21-மே-201905:46:45 IST Report Abuse
Milirvan கந்துவட்டிக்காரர்களை ஏன் குண்டாசில் போட ஏற்பாடு செய்யக்கூடாது,,?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X