சீனாவுக்கு உளவு பார்த்த அமெரிக்க அதிகாரிக்கு சிறை

Added : மே 18, 2019
Advertisement

வாஷிங்டன், சீனாவுக்கு உளவு பார்த்ததாகவும் ராணுவ ரகசியங்களை விற்றதாகவும் சி.ஐ.ஏ. எனப்படும் அமெரிக்காவின் உளவு அமைப்பின் முன்னாள் அதிகாரிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் சி.ஐ.ஏ. உளவு அமைப்பைச் சேர்ந்த முன்னாள் அதிகாரி கெவின் மல்லோரி 62 சீனாவுக்கு உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அந்த நாட்டு நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்தது.தீர்ப்பில் கூறியுள்ளதாவது:
சி.ஐ.ஏ. அதிகாரியாக பணியாற்றியபோது கெவில் மல்லோரி சீனாவைச் சேர்ந்த ஒருவரை சந்தித்துள்ளார்.
பாதுகாப்பு துறை நிபுணர் என்று கூறிக் கொண்ட அந்த நபருடன் நெருக்கமாக பழகி உள்ளார்.
அப்போது அமெரிக்க ராணுவம் தொடர்பான தகவல்களை அளித்துள்ளார்; மேலும் சில ஆவணங்களை அளிப்பதற்கு முயற்சி செய்துள்ளார்.
இதைத் தவிர சில ஆவணங்களை விற்றுள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தொடர்பு வைத்திருந்த அந்த நபர் சீனாவின் உளவு அமைப்பைச் சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.சமீபத்தில் இதுபோன்ற மேலும் சில வழக்கு
களும் பல்வேறு நீதி
மன்றங்களில் விசாரிக்கப்பட்டுள்ளன. இதில் இருந்து நமது நாட்டைச் சேர்ந்த உளவு அதிகாரிகளை குறி வைத்து நமது நாட்டு ரகசியங்களைப் பெறுவதற்கு சீன உளவு அமைப்பு முயன்றுள்ளது தெரியவருகிறது. இதில் கவனம் செலுத்த வேண்டும்.
நமது உளவு அமைப்பில் பணியாற்றி வேறொரு நாட்டுக்கு தகவல்கள் பகிர்ந்துள்ளதால் மல்லோரிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X