பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
ராணுவம், ரயில்வேக்கு மாநிலங்கள் உதவணும்
பிரதமர் பொருளாதார ஆலோசனை குழு கோரிக்கை

புதுடில்லி:'மத்திய அரசின் கீழ் செயல்படும் ராணுவம், ரயில்வே, தேசிய நெடுஞ்சாலை துறைகளின் திட்டங்களுக்கு, மாநில அரசுகளும் நிதியுதவி வழங்க வேண்டும்' என, பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு தெரிவித்துள்ளது.

ராணுவம், ரயில்வே, மாநிலங்கள், பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு,கோரிக்கை


டில்லியில், இந்திய வர்த்தக தொழிலக கூட்டமைப்பான, 'அசோசெம்' ஏற்பாடு செய்த கருத்தரங்கில், பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு தலைவர், பிபேக் தெப்ராய் பங்கேற்றார். அப்போது, அவர் பேசியதாவது: ஆரோக்கிய பராமரிப்பு, மாநில அரசுகளின் அதிகாரத்திற்கு உட்பட்டது.


இருந்தபோதிலும், மத்திய அரசு, அனைத்து மக்களுக்கும் மருத்துவ வசதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், 'பிரதான் மந்திரி ஜன் ஆயுஷ்மான் யோஜனா' என்ற மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.


இதில், ஒரு குடும்பம், 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவ சிகிச்சைக்கான காப்பீடு பெறலாம். இதன் மூலம், 50 கோடி பேர் பயனடைவர் என,

மதிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் இத்திட்டம், மாநில அரசுகள் மூலம் நிறைவேற்றப்படுகிறது.


முக்கியம்அதுபோல, மத்திய அரசின் கீழ் செயல்படும் ராணுவம், ரயில்வே, தேசிய நெடுஞ்சாலை ஆகிய துறைகளில்,மாநில அரசுகளும் பங்கேற்க வேண்டும். இத்துறைகளுக்கு தேவையான நிதியுதவியை வழங்க வேண்டும். நாட்டின் பாதுகாப்புக்கு, ராணுவத்தின் பங்கு மகத்தானது. ரயில்வே, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பை வழங்குகிறது. தேசிய நெடுஞ்சாலை திட்டங்களும், நாட்டின் முன்னேற்றத்திற்கு இன்றியமையாதவையாக உள்ளன.


அதனால், இந்த மூன்று துறைகளிலும், மாநில அரசுகள் பங்கேற்க வேண்டும்.இந்தியாவில், அனைத்து துறைகளிலும், மத்திய அரசின் பங்கு, அளவிற்கு அதிகமாக உள்ளது. அதனால், மத்திய அரசு திட்டங்கள் மற்றும் மத்திய அரசின் நிதியுதவி மூலம் மாநில அரசுகள் மேற்கொள்ளும் திட்டங்கள் ஆகியவை குறித்து விவாதிக்க வேண்டிய தருணம்இது.


அனைத்து மக்களுக்கும் நிதிச் சேவை கிடைக்க வேண்டும் என்பது மிக முக்கியம்.அதேசமயம், பொது நிர்வாகத்தின் பார்வையில், எந்த துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கலாம் என்ப தை முடிவு செய்வதும் அவசியம். இந்தியாவின் மொத்த

Advertisement

உள்நாட்டு உற்பத்தி அடிப்படையிலான வரி வருவாய், 17 சதவீதம் என்ற அளவில், மிகக் குறைவாக உள்ளது. நாம் எவ்வளவு காலத்திற்கு வரி விலக்குகளை வழங்கு கிறோமோ, அதுவரை எளிமையான வரி விதிப்பு முறையை அமல்படுத்துவது சிரமம்.

இந்தியா போன்ற, மிகப் பெரிய நாட்டில், எந்த அளவிற்கு நிலம், தொழிலாளர் வளம், மூலதனம் ஆகியவற்றை பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்தே, வளர்ச்சியும், உற்பத்தி யும் இருக்கும்.பல மாநிலங்கள், இன்னும் அரதப்பழசான, நில உரிமை கணக்கெடுப்பு விபரங்களை வைத்துள்ளன. அவற்றை புதுப் பிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.


நவீன தொழில்நுட்ப வசதியை பயன்படுத்தி, நில உரிமம் தொடர்பான துல்லியமான புள்ளி விபரங்களை அறியாத வரை, நிலங்களை பயனுள்ள வகையில் பயன்படுத்துவது மிகவும் சிரமம்.இவ்வாறு, அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
19-மே-201920:06:08 IST Report Abuse

pradeesh parthasarathyரயில்வே இல் வேலை வாய்ப்பு வழங்கும்போது வேற்று மாநிலத்தவர்க்கு வழங்குவதை உடனே நிறுத்த வேண்டும் ...மீண்டும் பழையது போன்று பிராந்திய அடிப்படையில் அந்தந்த மாநிலத்தவர்க்கே வழங்க வேண்டும் ...

Rate this:
சுந்தரம் - Kuwait,குவைத்
19-மே-201910:00:59 IST Report Abuse

சுந்தரம் மத்திய அரசும் தன் வரி வருவாயில் மாநிலங்களுக்கு உள்ள பங்கை முறைப்படி உரிய நேரத்தில் தரவேண்டும். ரயில்வே திட்டங்களுக்கு மாநிலங்கள் உதவவேண்டும். திட்டங்கள் நிறைவேற்றப்பட்டபின் டிக்கட் வருவாய் முழுவதையும் மத்திய அரசே எடுத்துக்கொள்ளும். மாநிலங்களுக்கு அல்வா பார்சல்.

Rate this:
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
19-மே-201907:57:28 IST Report Abuse

ஆரூர் ரங்குடும்ப ஆட்சி மாநில அரசுகளின் அழுத்தத்திற்காக நேரடி வரிவருவாய் மற்றும் ஜி எஸ் டியில் அதிக பங்கு கொடுத்தது தவறு .அவர்கள் கூடுதல் நிதி கேட்டது வளர்ச்சித் திட்டங்களுக்காக அல்ல ஆட்டயப்போடவே .இதன் விளைவாக ராணுவம் போன்றவற்றுக்கு போதுமான அளவு ஓதுக்கீடு சாத்தியமில்லாமல் போய்விட்டது முப்பத்திரெண்டு ஆண்டுகளாக ஒரே ஒரு போர்விமானம்கூட வாங்கவில்லை .தேவையற்ற மானியங்கள் உதவித்தொகைகள் அநியாயமாகப் பெருகிவிட்டன .முக்கியமாக இமாம்கள் மவுல்விகள் பூசாரிகள் போன்றோருக்கு அரசு ஏன் உதவித்தொகை வழங்கவேண்டும்? ரம்ஜான் கஞ்சிக்கு அரிசி வாங்க வழியில்லாத அளவுக்கா இஸ்லாமியர்கள் ஏழைகளாக இருக்கிறார்கள்? இந்து அறநிலையத்துறை வழியாக கோவில் சொத்துக்களை சுரண்டி அரசு நடத்துவது பாவத்தைத்தான் சேர்க்கும்

Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X