சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாகன விபத்து: 10 பேர் காயம்

Added : மே 19, 2019
Advertisement
 வாகன விபத்து: 10 பேர் காயம்

கூடலுார் : கூடலுாரிலிருந்து, கேரளா மாநிலம் வடுவஞ்சால் செல்லும் ஜீப், கோழிகோடு சாலை, வழியாக நாடுகாணி நோக்கி சென்றது. இரும்புபாலம் அருகே, காலை, 9:30 மணிக்கு எதிரே வந்த காரில் மோதி விபத்துக்கு உள்ளானது.விபத்தில், பாலக்காட்டை சேர்ந்த கார் டிரைவர் அனீஸ், 36, மோயிஸ், 34, வினிதா, 31, சீதல், 25, உத்ரா, 4, ஆறு மாத குழந்தைகள் ருத்ராதேவி, நைனிகா; கூடலுார் பெரியசோலையை சேர்ந்த ஜீப் டிரைவர் தாமஸ்ஜோசப், 58, நந்தட்டி தங்கச்சன், 53 ஆகியோர் காயமடைந்தனர்.

இதில், தாமஸ், அனிஸ் ஆகியோர் சிகிச்சைக்காக கூடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள் தனியார் மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து காரணமாக அப்பகுதியை கனரக வாகனங்கள் கடந்து செல்ல சிரமம் ஏற்பட்டன. தேவாலா போலீசார், வாகனங்களை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X