எமனேஸ்வரத்தில் வைகாசி திருவிழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

எமனேஸ்வரத்தில் வைகாசி திருவிழா

Added : மே 19, 2019

ராமநாதபுரம்: ராமநாதபுரம் வெளிப்பட்டினம் பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி வசந்த உற்ஸவ விழா நடந்தது. நேற்று காலை வெளிப்பட்டினம் லெட்சுமிபுரம் விநாயகர் கோயிலில் இருந்து பால்குடம், காவடி உள்ளிட்ட நேர்த்திக்கடன் பூஜைகளை நகரின் முக்கிய வீதிகளின் வழியாக எடுத்து வந்தனர். மூலவர் பாலசுப்பிரமணியசுவாமிக்கு 11 வகையான அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தார். அன்னதானம் நடந்தது. மாலையில் உற்ஸவ மூர்த்தி புறப்பாடு நடந்தது. ஏற்பாடுகளை வைகாசி விசாக குழு விழாக்கமிட்டியினர் செய்திருந்தனர்.பரமக்குடி: வைகாசி வசந்தோற்ஸவ விழாவையொட்டிஎமனேஸ்வரம்வரதராஜப் பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில்வைகை ஆற்றில் எழுந்தருளினார். இதையடுத்து நேற்று முன்தினம் காலை கும்பத்திருமஞ்சனம் நடந்தது. நேற்றுஅதிகாலை 5:00 மணிக்குவரதராஜப் பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்துடன்பூப்பல்லக்கில் சேவை சாதித்தபடி வைகை ஆற்றில் எழுந்தருளினார். காலை 10:35 மணிக்கு குதிரை வாகனத்தில் அலங்காரமாகிநகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்தார். பின் மாலை 5:00 மணிக்குவைகை ஆற்றில் திருச்சப்பரத்தில் சேவை சாதித்த படி இரவு எமனேஸ்வரம்சவுராஷ்ட்ர நெசவாளர்கள் குடியிருப்புகளில் வீதிவலம் வந்தார்.இரவு 12:00 மணிக்குமேல் வண்டியூர் மண்டகப்படியை அடைந்தார். தொடர்ந்து சேஷவாகனம், கருடன், அனுமன் வாகனங்களில் அருள்பாலிக்கவுள்ளபெருமாள் மே 23 காலை 9:00 மணிக்கு கோயிலை அடைவார். ஏற்பாடுகளைஎமனேஸ்வரம் சவுராஷ்ட்ர சபையினர் செய்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X