பொது செய்தி

இந்தியா

சாப்பாடு விஷயத்தில் இவர் இப்படி!

Added : மே 19, 2019 | கருத்துகள் (34)
Share
Advertisement
புதுடில்லி: இரண்டு மாதங்களாக நடந்த தேர்தல் பிரசாரம், ஒரு வழியாக முடிந்தது. இன்று, கடைசி கட்ட ஓட்டுப்பதிவு நடக்கிறது.வறுத்தெடுக்கும் வெயிலில் பிரசாரம் செய்து, நிறம் மாறிப் போயினர், அரசியல் தலைவர்கள். பிரசாரத்தின் போது, ஒவ்வொரு தலைவரும், அவர்களுடைய உடல்நிலையையும் கவனித்துக் கொள்ள வேண்டும். இதற்காக, கட்சியினர் சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். குறிப்பாக, பிரசாரத்தில்
மோடி, ராகுல், மம்தா, தேர்தல் பிரசாரம்

புதுடில்லி: இரண்டு மாதங்களாக நடந்த தேர்தல் பிரசாரம், ஒரு வழியாக முடிந்தது. இன்று, கடைசி கட்ட ஓட்டுப்பதிவு நடக்கிறது.வறுத்தெடுக்கும் வெயிலில் பிரசாரம் செய்து, நிறம் மாறிப் போயினர், அரசியல் தலைவர்கள். பிரசாரத்தின் போது, ஒவ்வொரு தலைவரும், அவர்களுடைய உடல்நிலையையும் கவனித்துக் கொள்ள வேண்டும். இதற்காக, கட்சியினர் சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். குறிப்பாக, பிரசாரத்தில் இருந்த போது, சாப்பாட்டு விஷயத்தில், தலைவர்கள் கண்டிப்புடன் இருந்தனராம்.

பிரதமர் மோடி, பிரசாரத்தின் போது, திரவ உணவைதான் எடுத்துக் கொள்வார். எலுமிச்சை அல்லது ஆரஞ்சு பழரசம் குடிப்பாராம். தவிர, அடிக்கடி விரதம் அனுசரிப்பதால், சாப்பாடு விஷயத்தில், கட்சியினருக்கு சிக்கலே வந்ததில்லையாம்.
காங்., தலைவர் ராகுலுக்கு, சமோசா ரொம்ப பிடிக்கும். இதை அறிந்து, கட்சியினர் அவ்வப்போது, அவருக்கு சமோசா சப்ளை செய்வது வழக்கம். ஹெலிகாப்டரில் பயணம் செய்யும் போது கூட, கட்சியினர் கொடுத்து அனுப்பிய சமோசாவை ருசித்து சாப்பிடுவாராம். ஆனால், ராகுலும், உணவு விஷயத்தில் கறார்; அளவோடு தான் சாப்பிடுவாராம்.

மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான, மம்தா பானர்ஜி, அடிக்கடி வெள்ளரிக்காய் சாப்பிடுவார். இவருக்கு, நடப்பது மிகவும் பிடிக்கும். தினமும், 20 கி.மீ., நடப்பாராம். இதனால் தான், தேர்தல் பிரசாரத்தில், காரிலிருந்து இறங்கி, நடந்தே பிரசாரம் செய்வது, இவரது பாணியாகி விட்டது. இவரது வாகனத்தில், வெள்ளரிக்காய், இருப்பு வைக்கப்பட்டிருக்குமாம்.பா.ஜ., தலைவர், அமித் ஷாவும், சாப்பாட்டு விஷயத்தில் மிகவும் கவனமாக இருப்பார். இவருக்கு சர்க்கரை வியாதி என்பதால், உணவு விஷயத்தில் ஏகப்பட்ட கட்டுப்பாடு. பிரத்யேக உணவு வகைகள் தான், இவருக்கு பரிமாறப்படும்.

காங்., பொதுச் செயலர், பிரியங்கா, பிரசாரத்தின் போது, பாதாம் பருப்புகளை, கொறிப்பது வழக்கம். ஆனாலும், மிதமாகத் தான் சாப்பிடுவாராம்.

Advertisement
வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indhuindian - Chennai,இந்தியா
28-மே-201916:49:30 IST Report Abuse
Indhuindian Some one has commented that the Nehru family made sacrifices lost personal wealth during freedom struggle. True. But now it appears that they made investments that way to loot the country for the next seventy years. Whether one likes it or not it is undeniable fact that Post Nehru era, the family drenched itself in neck deep corruption - remember Indira Gandhi's Nagarwala fame -Rajiv Gandhi's Bofors- Sonia's Agusta westland, National Hearald et al - Rober Vadra's penchant for land grabbing all over India. Shame on people who continue to support these looters
Rate this:
Cancel
Sivagiri - chennai,இந்தியா
22-மே-201912:52:37 IST Report Abuse
Sivagiri அடிக்கடி எங்கே காணாமல் போகும் ரகசியத்தை - சொல்லாமல் கொள்ளாமல் லீவு போட்டு விட்டு எங்கே எஸ்கேப் என்று மட்டும் யாரும் கண்டுபிடிக்க முடியவில்லையே
Rate this:
Swaroopa Metha - Gopalapuram,இந்தியா
22-மே-201919:05:12 IST Report Abuse
Swaroopa Methaஅது வெளிய சொல்லற விஷயம் இல்லையே...
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
22-மே-201903:54:11 IST Report Abuse
J.V. Iyer சுடலையும் அவர் சகாக்களும் பணம் கொடுக்காமல் மிரட்டி சாப்பிடுவது சிக்கன் பிரியாணி.
Rate this:
Swaroopa Metha - Gopalapuram,இந்தியா
22-மே-201919:05:45 IST Report Abuse
Swaroopa Methaயு மீன் பாக்ஸிங் பாய்ஸ்...?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X