பொது செய்தி

தமிழ்நாடு

இளம் வீரர்களை கண்டறிய தேர்வு போட்டி

Added : மே 19, 2019
Share
Advertisement
 இளம் வீரர்களை கண்டறிய தேர்வு போட்டி

கோவை : சென்னை தமிழன் கால்பந்து கிளப் சார்பில், மாநிலம் முழுவதும் இளம் கால்பந்து வீரர்களை கண்டறியும் தேர்வு போட்டி, கோவை நேரு ஸ்டேடியத்தில் நடந்தது.சென்னை, நெய்வேலியை தலைமையிடமாக கொண்ட, 'தமிழன் கால்பந்து கிளப்', மாநில முழுவதும் இளம் வீரர்களை கண்டறிந்து, பயிற்சி அளிக்கிறது.கிளப் உரிமையாளர் இம்ரான்கான் கூறுகையில், ''சென்னை, கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நெய்வேலி ஆகிய இடங்களில் தேர்வு போட்டி நடக்கிறது.

இதில், 13, 15, 18 வயது இளைஞர்களை தேர்ந்தெடுத்து, உண்டு உறைவிடம் அளித்து பயிற்சியளிக்க திட்டமிட்டுள்ளது.தமிழன் கால்பந்து கிளப் பயிற்சியாளர் மயில்வாகனன் கூறுகையில், ''மாநில முழுவதும் ஆறு இடங்களில் நடக்கும் தேர்வு போட்டி மூலம் தேர்வு பெறுவோருக்கு சிறந்த கல்வியுடன், பயிற்சி, உணவு, தங்குமிடம் இலவசம். எதிர்காலத்தில் இந்தியாவில் சிறந்த அணி உருவாவது மட்டுமல்ல.

சர்வதேச தரத்துக்கு கால்பந்து விளையாட்டின் தரம் உயர்ந்தோங்கும் என்ற எண்ணத்தில் முயற்சி எடுத்துள்ளோம்,'' என்றார்.மாவட்ட விளையாட்டு அலுவலர் ரவிச்சந்திரன், தமிழன் கிளப் அணி மேலாளர் மரியோ, சென்னை சிட்டி புட்பால் கிளப் ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் ஆகியோர் உடனிருந்தனர். கோவையில் நடந்த தேர்வு போட்டியில், கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த, 170 இளம் வீரர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X