பொது செய்தி

இந்தியா

கேபினட் செயலர் ஆகிறார் கிரிஜா?

Updated : மே 19, 2019 | Added : மே 19, 2019 | கருத்துகள் (56)
Advertisement
கேபினட் செயலர், கிரிஜா வைத்தியநாதன், தோவல், மோடி

புதுடில்லி: அடுத்து ஆட்சி அமைக்கப் போவது, மீண்டும், பா.ஜ., கூட்டணியா அல்லது காங்கிரஸ் கூட்டணியா என, அரசியல் வட்டாரங்கள் தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றன. ஆனால், டில்லி அதிகாரிகள் வட்டாரங்களில், எந்தெந்த அதிகாரிகளுக்கு முக்கிய பதவிகள் கிடைக்கும் என, பட்டிமன்றம் நடந்து வருகிறது.

மத்திய அரசு அதிகாரிகளில், சக்தி வாய்ந்தவர், கேபினட் செயலர். அனைத்து செயலர்களுக்கும், 'பாஸ்' இவர் தான்.இப்போது, பிரதீப் குமார் சின்ஹா, கேபினட் செயலராக உள்ளார். இவர் பதவி ஓய்வு பெற்றுவிட்டாலும், இவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த மாத இறுதியில், பதவி நீட்டிப்பு முடிவடைகிறது.இந்த பதவிக்கு நியமிக்கப்படும் அதிகாரி, மத்திய அரசின் இரண்டு முக்கிய துறைகளில் பணியாற்றியவராக இருக்க வேண்டும். அடுத்து அமைய இருக்கிற அரசு, முதலில், இந்த பதவிக்கு சிறந்த, மூத்த அதிகாரியை நியமிக்க வேண்டும். இப்போது, தேசிய அளவில், மூத்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக இருப்பவர், தமிழக தலைமைச் செயலர், கிரிஜா வைத்தியநாதன். இவருக்கு, கேபினட் செயலர் பதவி கிடைக்குமா என, டில்லி அதிகாரிகள் வட்டாரங்களில் பேசப்படுகிறது. ஆனால், இவர் மத்திய அரசுப் பதவிகளில், அதிகமாக பணியாற்றியதில்லை என, சொல்லப்படுகிறது.

இதைத் தவிர, உளவுத்துறை தலைவர், 'ரா' அமைப்பின் தலைவர் என, முக்கிய பதவிகளுக்கான அதிகாரிகளையும், புது அரசு நியமிக்க வேண்டும். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவி, மிகவும் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இப்போது, அஜித் தோவல், இந்த பதவியில் உள்ளார். மோடி, மீண்டும் பிரதமராக வந்தால், தோவல் மாற்றப்படலாம் என, அதிகாரிகள் கூறுகின்றனர்.





Advertisement




வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.n. Dhasarathan - chennai,இந்தியா
21-மே-201921:26:25 IST Report Abuse
K.n. Dhasarathan நீதி மன்ற உத்தரவை மதிக்காத கிரிஜா, எஸ் . வி. சேகரை போலீஸ் கைது பண்ணவிடாமல் தடுத்தவர். இவரெல்லாம் பொறுப்பான பதவிக்கு பரிந்துரைப்பதே தவறு. ஊழல் ஐ எ எஸ் அதிகாரிகள் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்காதவர். தமிழகம் ஊழலின் ஊற்றுக்கண் ஆக்கியதே இவர்களை போன்றவர்கள்தான். நல்ல, நேர்மையான அதிகாரிகளும் உண்டு , அவர்களை நியமிக்கட்டும் மத்திய அரசு.
Rate this:
Share this comment
எதிர்க்குரல் - சிங்கார சென்னை ,இந்தியா
25-மே-201911:01:42 IST Report Abuse
எதிர்க்குரல் ...
Rate this:
Share this comment
Cancel
Mohamed - Madurai,இந்தியா
21-மே-201914:10:51 IST Report Abuse
Mohamed இவர்கள் அந்த பொறுப்புக்கு வந்தால் ?????
Rate this:
Share this comment
Sathya Dhara - chennai,இந்தியா
27-மே-201906:43:32 IST Report Abuse
Sathya Dhara நண்பரே.....இவர்கள் அந்த பொறுப்புக்கு வந்தால் ?????...... ............... ............. தீவிரவாதிகள் ஒழிக்கப்படுவர். இந்த நாட்டின் கலாச்சாரம் பாதுகாக்கப்படும். இந்த நாட்டு மக்களை ஈவிரக்கமின்று கொத்து கொத்தாக கொலை செய்யும் கும்பலை சேர்ந்தவர்கள் ....நடுக்கம் கொள்வார்கள். நாடு நலமே பெறும்....
Rate this:
Share this comment
Cancel
Ram - ottawa,கனடா
21-மே-201902:40:20 IST Report Abuse
Ram இவர்கள் அந்த பொறுப்புக்கு வந்தால் தமிழகத்திற்கு மிகவும் நல்லது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X