கடற்படை தளபதி நியமனத்திற்கு எதிரான புகார் நிராகரிப்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கடற்படை தளபதி நியமனத்திற்கு எதிரான புகார் நிராகரிப்பு

Added : மே 19, 2019 | கருத்துகள் (3)
கடற்படைதளபதி, மத்திய அரசு

புதுடில்லி: கடற்படை தளபதியாக கரம்பிர் சிங் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, துணை தளபதி விமர் வர்மா தாக்கல் செய்த மனுவை பாதுகாப்பு அமைச்சகம் நிராகரித்துவிட்டது.
இந்திய கடற்படையின் தற்போதைய தளபதி சுனில் லம்பா வரும் 31ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இதனையடுத்து, கிழக்கு கடற்படை துணை தளபதி கரம்பிர் சிங்கை, புதிய தளபதியாக மத்திய அரசு நியமித்தது. வழக்கமாக பணி மூப்பு அடிப்படையில் கடற்படை தளபதிகள் நியமிக்கப்படும்நிலையில், இந்த முறை தகுதி அடிப்படையில் நியமனம் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், கரம்பிர் சிங் நியமனத்திற்கு அதிருப்தி தெரிவித்து, அவரை விட மூத்த அதிகாரியா, அந்தமான் நிகோபார் மண்டல கடற்படை தளபதி விமல்வர்மா, கடந்த 10ம் தேதி பாதுகாப்பு அமைச்சகத்திற்கு கடிதம் எழுதினார். இதற்கு மத்திய அரசு பதிலளிக்காததை தொடர்ந்து, ராணுவ தீர்ப்பாயத்தில், விமல்வர்மா முறையிட்டார். இதனை பரிசீலனை செய்த தீர்ப்பாயம், விமல்வர்மாவின் மனுவை பரிசீலனை செய்யும்படி கூறியது.
இந்நிலையில், மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட விளக்கத்தில், பாதுகாப்பு படைகளின் உயர் பதவிக்கு பணி மூப்பின் அடிப்படையில் தான் அதிகாரிகள் நியமிக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. விதிகளுக்கு உட்பட்டு அனைத்து தகுதிகளையும் விரிவாக சீர்தூக்கி பார்த்த பிறகு, கடற்படை தளபதியாக கரம்வீர் சிங் நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த நியமனத்தில், எந்த தவறான பரிசீலனையும் மேற்கொள்ளப்படவில்லை எனக்கூறி, மனுவை தள்ளுபடி செய்வதாக கூறப்பட்டுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X