கொலை, தற்கொலை, பலி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கொலை, தற்கொலை, பலி

Added : மே 19, 2019

மாநகராட்சி லாரி மோதி தொழிலாளி பலிகீழ்ப்பாக்கம்: புளியந்தோப்பு, திரு.வி.க.நகரைச் சேர்ந்தவர், சையது காதர், 42; கூலி தொழிலாளி. இவர், நேற்று காலை, ஓட்டேரி, குக்ஸ் சாலையை கடக்க முயன்றார். அப்போது, வேகமாக சென்ற மாநகராட்சி குப்பை லாரி, அவர் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே பலியானார். கீழ்ப்பாக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், மாநகராட்சி லாரி ஓட்டுனரான சுப்பிரமணி, 51 என்பவனை கைது செய்தனர்.
விபத்தில் வாலிபர் பலிதிருவான்மியூர்: மயிலாப்பூரைச் சேர்ந்தவர், ஆனந்த்பாபு, 31; பாலவாக்கத்தில், ரத்த பரிசோதனை மையத்தில் பணிபுரிந்தார். 15ம் தேதி இரவு, பணி முடித்து, இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றார். திருவான்மியூர், ஆர்.டி.ஓ., அலுவலகம் அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலை தடுப்பில் மோதியதில், படுகாயமடைந்த ஆனந்த்பாபு, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று பலியானார். அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.
டிராக்டர் மோதி வாலிபர் பலிமதுரவாயல்: போரூர் அடுத்த கெருகம்பாக்கத்தை சேர்ந்தவர், அப்துல்லா, 39; நேற்று காலை, ஆலப்பாக்கம், ராமதாஸ் சாலையில், இருசக்கர வாகனத்தில் சென்றபோது, தண்ணீர் ஏற்றி வந்த டிராக்டர் மோதியதில், நிலைதடுமாறி விழுந்த அப்துல்லா, சம்பவ இடத்திலேயே பலியானார். கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், தப்பி ஓடிய டிராக்டர் ஓட்டுனரை தேடி வருகின்றனர்.கழுத்தை நெரித்து சிறுமி பலிஐ.சி.எப்: கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர், வடிவேல், 38. இவரது மகள் அஸ்வதி, 11. அயனாவரம் ரயில்வே குடியிருப்பில் வசித்து வரும், மாமா வினோத்குமார் வீட்டிற்கு, பாட்டி ரமாவுடன் வந்தார். வினோத்குமாரின் குழந்தை யஷ்வந்திற்காக கட்டப்பட்ட தொட்டிலில், அஸ்வதி விளையாடி உள்ளார்.

அப்போது, எதிர்பாராத விதமாக, தொட்டில் சேலை கழுத்தை நெரித்து உயிரிழந்தார்.ஐ.சி.எப்., போலீசார் விசாரிக்கின்றனர்.மின் ஊழியர் தற்கொலைஎண்ணுார்: எர்ணாவூர், டி.கே.பி., நகரைச் சேர்ந்தவர், தியாகராஜன், 46; மின் வாரிய ஊழியர். குடிப்பழக்கம் இருந்ததால், உடல் நலம் பாதிக்கப்பட்ட தியாகராஜன், தீராத வயிற்று வலியால் நேற்று முன்தினம் மாலை, வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.எண்ணுார் போலீசார் விசாரிக்கின்றனர்.தீ விபத்தில் ஒப்பந்த ஊழியர் பலிபள்ளிக்கரணை: சித்தாலப்பாக்கம், எம்.ஜி.ஆர்., நகர் பிரதான சாலையைச் சேர்ந்தவர், தசரதன், 56; குடிநீர் வாரிய ஒப்பந்த ஊழியர். 11ம் தேதி, பெரும்பாக்கம், எழில் நகர், அடுக்குமாடி குடியிருப்பின், கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். தொட்டியில் எரிவாயு உள்ளதா என்பதை ஆராய, தீக்குச்சியை கொளுத்தி உள்ளே வீசினார். அப்போது, எதிர்பாரா விதமாக, தொட்டியில் இருந்து வெளியேறிய தீ, தசரதன் மீது பரவியது.பலத்த தீக்காயங்களுடன், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை இறந்தார். பள்ளிக்கரணை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X