புகார் சொல்ல எதிர்க்கட்சியினர் தயார்

Updated : மே 19, 2019 | Added : மே 19, 2019 | கருத்துகள் (27)
Share
Advertisement

புதுடில்லி: தேர்தல் ஆணைய அலுவலகம், இந்த முறை படு பரபரப்பாக செயல்பட்டது. பா.ஜ.,வுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுவதாக, அநேகமாக, எல்லா எதிர்க்கட்சிகளும் குற்றம் சாட்டியுள்ளன. இது மட்டுமல்லாமல், தினமும், காலை, மதியம், மாலை என, ஏதாவது ஒரு எதிர்க்கட்சி, தேர்தல் ஆணையர்களைச் சந்தித்து, பா.ஜ.,வுக்கு எதிராக புகார் அளிப்பது, வழக்கமாக மாறிப்போனது.



latest tamil news



இதில், தெலுங்கு தேச கட்சி தலைவரும், ஆந்திர முதல்வருமான, சந்திரபாபு நாயுடு தான் முன்னிலை வகித்தார். ஆந்திராவிலிருந்து, இதற்காகவே, அடிக்கடி டில்லி பறந்து வந்தார், சந்திரபாபு.'ஓட்டுப்பதிவு இயந்திரம் சரியில்லை; ஒப்புகைச் சீட்டு எண்ணிக்கையைக் கூட்ட வேண்டும்' என, தினந்தோறும், ஏதாவது ஒரு கட்சி சார்பில், புகார் அளிக்கப்பட்டது.


latest tamil news




'ஓட்டுப் பதிவு இயந்திரத்தை, யாரும், எதுவும் செய்ய முடியாது; அதில் தவறு நடக்க வாய்ப்பே இல்லை' என, தேர்தல் ஆணையம் திரும்ப திரும்ப சொல்லி வந்தாலும், சில எதிர்க்கட்சிகள் அதை நம்ப மறுக்கின்றன. உச்ச நீதிமன்றமும், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்திற்கு ஆதரவாகவே தீர்ப்பளித்துள்ளது.

பா.ஜ., மீண்டும் வெற்றி பெற்று, மோடி பிரதமரானால், 'ஓட்டுப்பதிவு இயந்திரம் தில்லுமுல்லு தான் காரணம்' என, சாக்கு சொல்ல, எதிர்க்கட்சிகள் தயாராகிவிட்டன. '300 சீட்களுக்கு மேல் ஜெயிப்போம்' என, அமித் ஷாவும், மோடியும் திட்டவட்டமாக சொல்கின்றனர்.


latest tamil news




'எப்படி இவ்வளவு தீர்மானமாக சொல்ல முடிகிறது. அப்படியென்றால், ஏதாவது உள்குத்து நடக்கிறதா; ஓட்டு இயந்திரங்களில் கைவைத்து விட்டார்களா' என, இப்போதே, எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்ப துவங்கிஉள்ளனர். 'வழக்கம் போல, தேர்தல் முடிவுகளுக்குப் பின் ஓட்டு இயந்திரங்கள் மீது பழிபோட தயாராகிவிட்டனர்' என, பா.ஜ.,வும் பதிலடி கொடுக்கத் துவங்கிவிட்டது.

Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
19-மே-201921:49:41 IST Report Abuse
Aarkay மஹா கட்பந்தன் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் கூடி வட்டமாக நின்றுகொண்டு, உன்னாலே நான் கெட்டேன் என்னாலே நீ கெட்டே எனக்கூவி ஒப்பாரி வைக்கவும் இருக்கவே இருக்கு, EVM மேல் பழி போடவேண்டியதுதானே மிஞ்சி போனால், நீங்கள் நியமித்தவர்கள், எந்த கேஸ் போட்டாலும் உங்களுக்கு சாதகமாக அல்லது, பாஜக அரசுக்கு பாதகமாக, வழ, வழா, கொழ, கொழா என ஒரு தீர்ப்பை அல்லது, வாய்தா மேல் வாய்தா வழங்கப்போகிறார்கள்.
Rate this:
Cancel
amitsha -  ( Posted via: Dinamalar Android App )
19-மே-201921:05:00 IST Report Abuse
amitsha
Rate this:
Cancel
amith -  ( Posted via: Dinamalar Android App )
19-மே-201921:04:07 IST Report Abuse
amith
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X