பொது செய்தி

தமிழ்நாடு

வீடுதோறும் இருக்கிறது கிணறு: குடிநீர் பஞ்சம் இவர்களுக்கு இல்லை

Added : மே 19, 2019 | கருத்துகள் (2)
Advertisement

அரியலூர்: அரியலூர் அருகே உள்ள இரண்டு கிராமங்களைச் சேர்ந்த மக்கள், வீட்டுக்கு வீடு கிணறு அமைத்து, வறட்சி நிலவும் இந்த நேரத்திலும், பஞ்சமில்லாமல் குடிநீர் பருகுவதுடன், விவசாயமும் செய்து வருகின்றனர்.
அரியலூர், ஜெயங்கொண்டத்தில் இருந்து, 2 கி.மீ.,யில், தெற்குகரைமேடு கிராமம் உள்ளது.இக்கிராமத்தில், வீட்டுக்கு வீடு கிணறு அமைத்து, கிணற்று நீரையே, குடிநீராக பயன்படுத்துகின்றனர். குடிநீருக்கு பயன்படுத்தியது போக, விவசாயத்திற்கும், பம்ப் செட் மூலம் நீரைப் பாய்ச்சி, விவசாயம் செய்கின்றனர். 'மினரல் வாட்டரையோ, லாரி மற்றும் டிராக்டர்களில் விற்பனை செய்யப்படும் தண்ணீரையோ, ஒருநாளும் காசு கொடுத்து வாங்கும் அவசியம் எங்களுக்கு வந்தது கிடையாது' என்கின்றனர், இக்கிராம மக்கள். புதுக்குடி பஞ்சாயத்து நிர்வாகம் மூலம் வினியோகம் செய்யும் நீரை கூட, இவர்கள் குடிநீருக்கு பயன்படுத்துவது கிடையாது. மற்ற தேவைகளுக்கே பயன்படுத்துகின்றனர். இக்கிராமத்தில், 30 குடும்பங்கள் வசிக்கின்றன.இதில், 25 வீடுகளில் கிணறுகள் உள்ளன. எஞ்சியுள்ள, ஐந்து வீடுகளிலும் விரைவில் கிணறு அமைக்க உள்ளனர். வானம் பார்த்த பூமியான இக்கிராமத்தில், வானம் பொய்த்து, கடும் வறட்சி நிலவும் இப்போதும், ஊர் முழுக்க வாழை, எலுமிச்சை, கொய்யா, கேந்திப்பூக்கள், சம்பங்கி, பலா, மா, முந்திரி என, விவசாயம் நிறைந்து, பசுமையாக காட்சியளிக்கிறது. இதற்கு காரணம், வீடுதோறும் கிணறு அமைத்துள்ளது தான்.இதேபோல், இக்கிராமத்துக்கு அருகில் உள்ள புதுக்குடி கிராமத்தில், 500 குடும்பங்கள் வசிக்கின்றன.இந்த ஊரில் உள்ள வீடுகளில், 350க்கும் மேற்பட்ட கிணறுகள் உள்ளன. மீதியுள்ள வீடுகளிலும், கிணறுகள் அமைத்து வருகின்றனர்.

தெற்குகரைமேடு கிராம மக்கள் கூறியதாவது:எங்கள் ஊரில், தலைமுறை, தலைமுறையாக கிணறுகள் அமைத்து, பராமரித்து வருகிறோம். எங்கள் ஊரில் கிணறுகள் அதிகமாக இருப்பதால் தான், நிலத்தடி நீர் நன்றாக உள்ளது. அந்த காலத்தில் இருந்து, இன்று வரை கிணற்று நீரைத் தான் பருகுகிறோம். குடிநீரை காசு கொடுத்து வாங்கியது இல்லை.தண்ணீருக்காக போராட்டம் நடத்தியது இல்லை. எங்களுக்கு தண்ணீர் பஞ்சம் வந்ததில்லை.விவசாயத்திற்கும், கிணற்று நீரையே பயன்படுத்துகிறோம். தற்போது, கோடை காலம் என்பதால், சற்று குறைவாக பயன்படுத்துகிறோம்.தமிழர்களின் அடையாளங்களில் ஒன்றான கிணறுகளை, நாம் பாதுகாக்க வேண்டும். எங்கள் கிராமத்தைப் போன்று, மற்ற கிராமங்களிலும் கிணறு அமைக்க, அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
krishnamurthy - chennai,இந்தியா
04-ஜூன்-201912:11:55 IST Report Abuse
krishnamurthy பாராட்டவேண்டியதுதான் ஆனால் வீடுதோறும் இம்மாதிரி தண்ணி இருப்பது தெரிந்தால் லாரியுடன் கொள்ளையர்கள் வந்துவிட போகிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
21-மே-201910:44:23 IST Report Abuse
கல்யாணராமன் சு. படிப்பதுக்கே மிகவும் மகிழ்ச்சியா இருக்கிறது. இந்த கிராமங்களில் இருக்கும் மக்களுடைய பொது அறிவும், சமூக ஆர்வமும், ஏன் இந்த அரசியல் வாதிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் இல்லை? ......... ஏனென்றால், அந்த இரண்டு கூட்டங்களுக்கும், லஞ்சம் வாங்கி, ஊழல் செய்து, காசு அடிப்பதே குறியாக உள்ளது ........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X