தேர்தல் கமிஷனுக்கு மோடி நன்றி | Dinamalar

தேர்தல் கமிஷனுக்கு மோடி நன்றி

Updated : மே 19, 2019 | Added : மே 19, 2019 | கருத்துகள் (72)
Share
கேதார்நாத்; நாம் எதையும் எடுப்பதற்காக பிறக்கவில்லை. கொடுப்பதற்காவே பிறந்துள்ளோம் என பிரதமர் மோடி கேதார்நாத்தில் தியானம் முடிந்த பின் நிருபர்களிடம் பேசுகையில் கூறினார். லோக்சபா தேர்தல் முடிந்து 2 நாள் கேதார்நாத், பத்ரிநாத் கோயிலுக்கு பிரதமர் மோடி சென்றுள்ளார். அங்கு நேற்று இரவு முழுவதும் தியானம் செய்தார். இன்று ( 19 ம் தேதி ) குகையில் இருந்து வெளியே வந்த மோடி

கேதார்நாத்; நாம் எதையும் எடுப்பதற்காக பிறக்கவில்லை. கொடுப்பதற்காவே பிறந்துள்ளோம் என பிரதமர் மோடி கேதார்நாத்தில் தியானம் முடிந்த பின் நிருபர்களிடம் பேசுகையில் கூறினார்.



latest tamil news



லோக்சபா தேர்தல் முடிந்து 2 நாள் கேதார்நாத், பத்ரிநாத் கோயிலுக்கு பிரதமர் மோடி சென்றுள்ளார். அங்கு நேற்று இரவு முழுவதும் தியானம் செய்தார். இன்று ( 19 ம் தேதி ) குகையில் இருந்து வெளியே வந்த மோடி நிருபர்களிடம் பேசுகையில்;


latest tamil news





கொடுக்கவே பிறந்துள்ளோம்



கேதார்நாத்தில் வழிபட்டதை அதிர்ஷ்டமாக கருதுகிறேன். கேதார்நாத்துக்கும், எனக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. கேதார்நாத் வளர்ச்சிக்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறேன். நான் இறைவனிடம் யாருக்காகவும், எதையும் கேட்கவில்லை.


latest tamil news




இந்தியாவுக்காக மட்டுமல்ல, மனித நேயத்திற்காக பிரார்த்தனை செய்தேன். நாட்டு மக்களுக்காக நான் பிரார்த்தனை செய்தேன். கொடுப்பதற்காக நாம் படைக்கப்பட்டுள்ளோம். எடுப்பதற்காக அல்ல. இவ்வாறு மோடி கூறினார்.


latest tamil news





தேர்தல் கமிஷனுக்கு நன்றி

தேர்தல் நடைமுறை விதிகள் அமலில் உள்ளபோதும் கேதார்நாத் பயணத்திற்கு அனுமதி அளித்த தேர்தல் கமிஷனுக்கு நன்றி தெரிவித்து கொண்டார், மோடி.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X