அரசியல் செய்தி

தமிழ்நாடு

அரவக்குறிச்சியில் தி.மு.க., 2 ஆயிரம் ரூபா டோக்கன் விநியோகம்

Updated : மே 19, 2019 | Added : மே 19, 2019 | கருத்துகள் (46)
Share
Advertisement

பரமத்தி : கரூர் பரமத்தி ஒன்றியம், அரவக்குறிச்சி தொகுதியில், ஆர்.கே.நகர் 20 ரூபாய் டோக்கன்களைப் போலவே தி.மு.க.,வினர் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை ஜெராக்ஸ் எடுத்து விநியோகித்தனர். அதனை பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர்.



latest tamil news


அரவக்குறிச்சி தொகுதியில், கார்வழி ஊராட்சிக்குட்பட்ட சீலநாயக்கன்பட்டி, அண்ணாநகரில், தி.மு.க.,வினர், ஓட்டுக்கு பணம் தருவதற்காக, 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை ஜெராக்ஸ் எடுத்து, அவற்றை வாக்காளர்களுக்கு டோக்கன்களாக விநியோகித்து வந்துள்ளனர். வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், தி.மு.க., பரமத்தி ஒன்றிய பொருளாளர் ஜெகநாதன் தலைமையிலான திமுகவினர் வேட்பாளர் செந்தில்பாலாஜிக்காக இந்த டோக்கன்களை விநியோகித்துள்ளனர். ஓட்டுபோட்டுவிட்டு, 2 ஆயிரம் ரூபாய் டோக்கன்களை மாலையில் கொண்டு வந்து கொடுப்பவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் தரப்படும் என்று திமுகவினர் உறுதியளித்துள்ளனர். இதை அறிந்த அதிமுகவினர் தேர்தல் பறக்கும் படைக்கு தகவல் தெரிவித்ததுடன், டோக்கன் விநியோகிக்கும் இடத்திற்கு சென்றபோது, திமுகவினர் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். அவர்கள் விட்டுச்சென்ற 2 ஆயிரம் ரூபாய் டோகன்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். சம்பவ இடத்தில் துணை ராணுவம் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டனர். ஆர்.கே.நகர் தொகுதியில் அ.ம.மு.க.வினர் 20 ரூபாய் நோட்டுகளை டோக்கன்களாக அளித்த பார்முலாவை, அரவக்குறிச்சியில் தி.மு.க.,வினர் செந்தில்பாலாஜிக்காக கையாண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



ரூ.2 ஆயிரம் டோக்கன் :


அரவக்குறிச்சி தொகுதியில் உள்ளது கார்வழி பஞ்சாயத்து. இங்குள்ள சீலநாயக்கன்பட்டி அண்ணாநகரில், தி.மு.க.,வினர் ஓட்டுக்கு பணம் தருவதற்காக மக்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை ஜெராக்ஸ் எடுத்து, அவற்றை டோக்கன்களாக விநியோகித்து வந்தனர்.


latest tamil news




காலையில் ஓட்டு ; மாலையில் பணம் :


தி.மு.க., பரமத்தி ஒன்றிய பொருளாளர் ஜெகநாதன் தலைமையில் இன்று வாக்குப்பதிவு நேரத்தில் தி.மு.க.,வினர் வேட்பாளர் செந்தில்பாலாஜிக்காக இந்த டோக்கன்களை விநியோகித்துள்ளனர். ஓட்டுப்போட்டுவிட்டு 2 ஆயிரம் ரூபாய் டோக்கன்களை மாலையில் கொண்டு வந்து கொடுப்பவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் தரப்படும் என்று உறுதியளித்துள்ளனர். இதை அறிந்து அங்கு அதிமுகவினர் குழுமினர்.


latest tamil news




பறக்கும் படை :


அ.தி.மு.க., கார்வழி பஞ்சாயத்து கிளை செயலாளர் சிவக்குமார் தலைமையிலான சிலர் தேர்தல் பறக்கும்படைக்கு தகவல் கூறினர். பின்னர், டோக்கன் விநியோகித்த தி.மு.க.,வினரை முற்றுகையிட்டனர். இதனை அடுத்து அங்கு வந்த தேர்தல் பறக்கும் படையினர் டோக்கன்களை பறிமுதல் செய்தனர். ஆனால், தி.மு.க.,வினர் தப்பியோடி விட்டனர். இதுகுறித்து தேர்தல் பார்வையாளரிடம் அ.தி.மு.க., கார்வழி கிளைச்செயலாளர் சிவக்குமார் புகார் அளித்துள்ளார்.


தகுதி நீக்கம் செய்க ;


செய்தியாளர்களிடம் பேசிய சிவக்குமார், '' ஆர்.கே.நகரில் அ.ம.மு.க.வினர் 20 ரூபாய் நோட்டுகளை டோக்கன்களாக அளித்து புகழ்பெற்றனர். அரவக்குறிச்சியில் தி.மு.க.,வினர் செந்தில்பாலாஜிக்காக அதே பார்முலாவை கையாண்டுள்ளனர். தேர்தல் கமிஷன் முறையாக விசாரித்து, தி.மு.க., வேட்பாளர் செந்தில் பாலாஜியை தகுதிநீக்கம் செய்யவேண்டும்,'' என்றார்.


ஐ.ஜி., விசாரணை :


இந்நிலையில், கார்வழி அரசு உயர்நிலைப்பள்ளி ஓட்டுச்சாவடியில் திருச்சி மண்டல போலீஸ் ஐ.ஜி., லலிதா லட்சுமி விசாரணை நடத்தினார். அவரிடம், சுயேட்சை வேட்பாளர் ஜோதி சுதர்சனன் 2 ஆயிரம் ரூபாய் டோக்கன் குறித்து புகார் அளித்தார். அதுகுறித்து விசாரிக்கவே தான் வந்ததாக ஐ.ஜி., அப்போது தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JeevaKiran - COONOOR,இந்தியா
20-மே-201911:20:49 IST Report Abuse
JeevaKiran இதெல்லாம் சரி. ADMK பிரிந்தபோது இரட்டை இல்லை சின்னத்தை பெறுவதற்கு தினகரன் கோடிக்கணக்கில் டெல்லியில் தலைமை தேர்தல் அலுவலகத்தில் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக வழக்கு பதிவானதே? அது என்ன ஆனது?
Rate this:
Cancel
19-மே-201919:26:59 IST Report Abuse
Arunachalam கமல்ஹாசன் ஒன்றும் சொல்லவில்லை. ஏன்?
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
19-மே-201918:22:49 IST Report Abuse
J.V. Iyer என்னைக்குத்தான் நேர்மையாக வெற்றி பெற்றனர் இந்த கயவர்கள்? பொய், பித்தலாட்டம், வன்முறை, இப்படியே வளர்ந்த கட்சி. மக்கள் ஏன் புறக்கணிக்கவில்லை?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X