மே.வங்க தேர்தலில் வன்முறை

Updated : மே 19, 2019 | Added : மே 19, 2019 | கருத்துகள் (31)
Advertisement

கோல்கட்டா : மேற்கு வங்க மாநிலத்தில் கடைசி கட்ட தேர்தலிலும் வன்முறை அரங்கேறி வருகிறது. பல இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ., தொண்டர்களிடையே மோதல்கள் அரங்கேறி வருகின்றன.







நாட்டு வெடிகுண்டு :


லோக்சபா தேர்தல் நாடு முழுவதிலும் 7 கட்டங்களாக நடக்கின்றன. மே.வங்க மாநிலத்திலும் 7 கட்டத்தேர்தல்களிலும் ஓட்டுப்பதிவு நடக்கிறது. இறுதி கட்டத் தேர்தலில் இன்று (மே.19) 9 தொகுதிகளுக்கு தேர்தல்கள் நடக்கின்றன.

மதுராபூரில் பா.ஜ., வேட்பாளர் பாபுல் சுப்ரியோ திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்களால் சுற்றி வளைத்து தாக்கப்பட்டார். அவருடன் சென்ற வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. அப்பகுதி ஓட்டுச்சாவடிகளில் நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டுள்ளன.






கார்கள் உடைப்பு :


அதேபோல அருகிலுள்ள பரசராத் என்னுமிடத்தில் பா.ஜ., அலுவலகம் கல்வீசி தாக்கப்பட்டது. பா.ஜ., வேட்பாளர்கள் அனுபவ் ஹசாரா, நிரஞ்சன் ராய் கார்களும் தாக்கப்பட்டன. தேர்தல் நடக்கும் பகுதிகளில் ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நடக்கின்றன.

இந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக, பா.ஜ., திரிணாமுல் கட்சியை சேர்ந்தவர்கள் பரஸ்பரம் குற்றம்சாட்டியுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
19-மே-201918:17:28 IST Report Abuse
அசோக்ராஜ் மே வ மாநிலம் மாவோமாத்தா அராஜகத்தில் இரண்டாம் கஷ்மிராக மாறிவிட்டது. உடன் கலைக்கப் படாவிட்டால் இன்னொரு நவகாளி அரங்கேறும்.
Rate this:
Share this comment
Milirvan - AKL,நியூ சிலாந்து
20-மே-201901:35:24 IST Report Abuse
Milirvanமாவோமாத்தா எல்லாம் இல்லை சார்.. சீனத்துல மதம்'ன்னு சொல்லி சிலுப்புற 'உய்கூர்' ஆளுங்களை காயடிச்சி வச்சிருக்காங்க.. ஆனா இங்க பெரும்பான்மையை எவ்வளவு முடியுமோ அவ்வளவு கேவலப்படுத்தி அடக்கி வச்சி சிறுப்பாண்மையை தடவி தடவி வளக்குறாங்க.. இதுக்கு பின்னணியில் இருக்கும் அந்நிய சக்திகள், அதுக்கு துணைபோகுமளவுக்கு மனமாற்றம் செய்யப்பட்டதுகளால்தான் இவ்வளவு அவலமும்.. இது'களின் நோக்கம் மிகவும் தீர்க்கமானது.. அதை புரிந்த மோடிஜியும் பிஜேபியும் இது'களுக்கு கேட் போட்டார்கள்.. அதன் எதிர்வினைதான் இது.....
Rate this:
Share this comment
Cancel
Kalam - Salem,இந்தியா
19-மே-201917:51:14 IST Report Abuse
Kalam தீதி எவ்வளோ நாளைக்கு தொல்லை கொடுப்பாய் ? பீதி ஏற்படுத்தி வன்முறை செய் காதி உடுத்தி ஏமாத்து, உனக்கு ஜால்ரா அடிக்க நீதி மைய்ய கமல் மாதிரி ஆட்கள் வேற
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
19-மே-201917:40:14 IST Report Abuse
Pugazh V பொதுவாக தென்னிந்திய மக்கள் கொஞ்சம் உஷார்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X