தி.மு.க., ரூ. 2 ஆயிரம் டோக்கன் ; அமைச்சர்

Added : மே 19, 2019 | கருத்துகள் (3)
Advertisement
தி.மு.க., 2 ஆயிரம் ரூபா டோக்கன், ஜெராக்ஸ்

கரூர் : அரவக்குறிச்சி தொகுதியில், ஓட்டுப்போடுவதற்காக மக்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் ஜெராக்ஸ் டோக்கன் மற்றும் பல பகுதிகளில் வாக்காளர்களை தி.மு.க.,வினர் அடைத்து வைத்திருப்பதாக போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றம்சாட்டினார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர்; '' ஆர்.கே.,நகரில் இதுபோல அ.ம.மு.க.,வில் இருந்தபோது டோக்கன் கொடுத்து பழகியவர் செந்தில் பாலாஜி. இப்போது அரவக்குறிச்சியிலும், தி.மு.க., ஒன்றிய பொருளாளர் ஜெகநாதன் என்பவர் மூலம், 2 ஆயிரம் ரூபாய் நோட்டை ஜெராக்ஸ் எடுத்து டோக்கன் தருகின்றனர்.
மாலை 3 மணிக்கு டோக்கனுக்கு பணம் தருவதாகவும், தேர்தல் முடிந்த பிறகு பணம் தருவதாகவும் பல இடங்களில் பலமாதிரி சொல்கின்றனர். மேலும், புகளூர் நால்ரோடு, காந்திநகர் மற்றும் முல்லை நகர் உள்ளிட்ட இடங்களில், வாக்காளர்களை இதுவரை ஓட்டுப்போட விடாமல் தடுத்து வைத்துள்ளனர்.
தோல்வி பயத்தால், வேலாயுதம்பாளையம் மற்றும் தோட்டக்குறிச்சி உள்ளிட்ட பல பகுதிகளிலும் வாக்காளர்களை மிரட்டி தடுத்து வைத்து, மாலையில் ஓட்டுப்போடுங்கள் ; 2 ஆயிரம் ரூபாய் தருகிறோம் என்று கூறுகின்றனர். தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்கவேண்டும்,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நீதிபதி கவுண்டர் - Dharapuram,இந்தியா
19-மே-201915:59:00 IST Report Abuse
நீதிபதி கவுண்டர் ஊழல் பணத்தில் சல்லிகாசுகூட கொடைக்கக்கூடாது என மருமகன் கட்டளையாம்...... மொகலாயர்கள் ஆட்சியில் மருமகன் சொல்லை மீற முடியாதே......என்ன செய்ய
Rate this:
Share this comment
Cancel
sundarsvpr - chennai,இந்தியா
19-மே-201914:53:28 IST Report Abuse
sundarsvpr திருக்கோயில்கள் வியாபாரம் (பரிவட்டம்) விளையாட்டில் (சூதாட்டம்) மாணவர் சேர்க்கை (நன்கொடை)அரசு அமைக்க (குதிரை பேரம்) இவைகள் சட்டவிரோதம். தடுக்க முடியவில்லை. அதுபோன்று வாக்குக்கு பணம். இந்த செய்கைகள் நம் வாழ்க்கையில் இரண்டற கலந்துவிட்டன. எனவே இவைகளை சட்டவடிவு பரிவர்த்தனை ஆக்கலாம். கருப்பு பணம் வெள்ளையாகும். இந்த பரிவர்த்தனைகளுக்கு வரி விதித்தால் அரசுக்கு வருமானம் வரும்
Rate this:
Share this comment
Cancel
Sridhar Rengarajan - Trichy,இந்தியா
19-மே-201913:42:08 IST Report Abuse
Sridhar Rengarajan டிடிவியாவது 20 ரூபாய் டோக்கன் கொடுத்தார். ஒரு டீயாவது குடிக்கலாம். இவிங்க செல்லாத நோட்டு கூட கிடையாது ஃபோட்டோகாப்பி, ஜெராக்ஸ் டோக்கன் கொடுத்து ஒட்டு வாங்க பார்க்கிறார்கள். கரன்சியை ஜெராக்ஸ் எடுப்பது சட்டவிரோதம். கள்ள நோட்டு கேசில் உள்ள தூக்கி போடணும். அடுத்து இனி வரும் தேர்தலிகளில் டாலர் ஜெராக்ஸ், யூரோ ஜெராக்ஸ், ரியால் ஜெராக்ஸ் எல்லாம் கொடுத்தாலும் கொடுப்பாய்ங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X