மிதமான மழைக்கு வாய்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மிதமான மழைக்கு வாய்ப்பு

Added : மே 19, 2019
மிதமான மழை,தமிழகம், உள்மேற்கு மாவட்டங்கள்

சென்னை ; தமிழகத்தின் உள் மேற்கு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.அப்போது பலத்த காற்று வீச வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், நாமக்கல், ஈரோடு, சேலம்,உள்ளிட்ட உள்மேற்கு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும், அப்போது 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அனல் காற்று வீச வாய்ப்புள்ளாதாகவும், சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X