சோனியா - சந்திரபாபு சந்திப்பு : அரசியல் பரபரப்பு

Updated : மே 19, 2019 | Added : மே 19, 2019 | கருத்துகள் (13)
Share
Advertisement

புதுடில்லி : இன்று(மே,19) புதுடில்லியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார் தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு. இது தலைநகர் அரசியலில் பரபரப்பை பற்றவைத்துள்ளது.



latest tamil news




தலைவர்கள் சந்திப்பு :


பா.ஜ., அல்லாத ஆட்சி அமைக்கும் நோக்கில் சந்திரபாபு நாயுடு தொடர்ந்து அரசியல் கட்சித் தலைவர்களை கடந்த 2 தினங்களாக சந்தித்து வந்தார். காங்கிரஸ் தலைவர் ராகுலை 2 முறை கடந்த 2 நாளில் சந்தித்துள்ளார். அவர் தவிர டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மா.கம்யூ., பொதுச்செயலாளர் சீத்தாரம் யெச்சூரியை ஏற்கனவே சந்தித்து ஆலோசனை நடத்தியிருந்தார்.


latest tamil news




மாயாவதி : அகிலேஷ்


பின்னர், லக்னோ நகரில் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில், இன்று காலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை சந்தித்து ஆலோசித்தார் நாயுடு. ஏற்கனவே கடந்த வாரத்தில் மே.வங்கம் சென்று மம்தா பானர்ஜியுடனும் பேசியிருந்தார்.
சோனியா சந்திப்பு
இன்று இறுதிகட்ட லோக்சபா தேர்தல் முடிவுக்கு வரும் நிலையில், மாலை 4.30 மணி முதல் 5.10 மணி வரையில் புதுடில்லி, 10, ஜன்பத்தில் உள்ள இல்லத்தில், காங்., முன்னாள் தலைவர் சோனியாவை சந்தித்து ஆலோசித்துள்ளார், சந்திரபாபு நாயுடு.


latest tamil news




உச்சகட்ட பரபரப்பு :


ஏறத்தாழ தேர்தல் முடிவுகள் வரும் முன்னரே பா.ஜ., அல்லாத பல்வேறு கட்சிகளை சந்திரபாபு நாயுடு சந்தித்து ஆலோசித்து வருவது, தலைநகர் டில்லி அரசியலில் உச்சகட்ட பரபரப்பை பற்றவைத்துள்ளது.

இந்த சந்திப்புகளின் விளைவுகள், மே 23 தேர்தல் முடிவுகள் வெளிவரும் நாளில், சோனியா கூட்டியுள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் தெரியவரும் என்கின்றனர், அரசியல் நோக்கர்கள்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
uthappa - san jose,யூ.எஸ்.ஏ
19-மே-201919:19:53 IST Report Abuse
uthappa எக்ஸிட் போல் ப ஜா க வுக்குத்தான் ஆதரவாக இருக்கு.மெஷினை குறை சொல்ல முடியாது.பரம்பரை ஊழல்வாதிகள் ஓரங்கட்ட படவேண்டும்.நல்லவர் வேறு யாரவது தெரிந்தால் அவரை பிரதமர் ஆக்க இவர்கள் ஒன்று கூடுவார்களா ?
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
19-மே-201919:11:53 IST Report Abuse
அசோக்ராஜ் அனைத்து EXIT POLL- களும் (தேசவிரோத டிவி உள்பட) நாயுடுகாரு தோல்வி என்று காட்டுகின்றன. கேடு நினைப்பவன் கெடுவான்.
Rate this:
Cancel
Ramalingam Krishnaswamy - Puducherry,இந்தியா
19-மே-201919:08:18 IST Report Abuse
Ramalingam Krishnaswamy ஆமாம். இந்த எதிர்க்கட்சிகள் 23 .05 .2019 எத்தனை மணிக்குக் கூட இருக்கிறார்கள் என்பதை இன்னும் சொல்லவே இல்லையே. மதியம் 2.00 மணிக்கு மேல் என்றால், கூடத்திற்குத் தேவையே இருக்காது. அவரவர்கள் வீட்டிலேயே தத்தம் முகத்தில் கரியைப்பூசிக் கொள்ளலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X