சோனியா - சந்திரபாபு சந்திப்பு : அரசியல் பரபரப்பு| Dinamalar

சோனியா - சந்திரபாபு சந்திப்பு : அரசியல் பரபரப்பு

Updated : மே 19, 2019 | Added : மே 19, 2019 | கருத்துகள் (13)

புதுடில்லி : இன்று(மே,19) புதுடில்லியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார் தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு. இது தலைநகர் அரசியலில் பரபரப்பை பற்றவைத்துள்ளது.







தலைவர்கள் சந்திப்பு :


பா.ஜ., அல்லாத ஆட்சி அமைக்கும் நோக்கில் சந்திரபாபு நாயுடு தொடர்ந்து அரசியல் கட்சித் தலைவர்களை கடந்த 2 தினங்களாக சந்தித்து வந்தார். காங்கிரஸ் தலைவர் ராகுலை 2 முறை கடந்த 2 நாளில் சந்தித்துள்ளார். அவர் தவிர டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மா.கம்யூ., பொதுச்செயலாளர் சீத்தாரம் யெச்சூரியை ஏற்கனவே சந்தித்து ஆலோசனை நடத்தியிருந்தார்.






மாயாவதி : அகிலேஷ்


பின்னர், லக்னோ நகரில் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில், இன்று காலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை சந்தித்து ஆலோசித்தார் நாயுடு. ஏற்கனவே கடந்த வாரத்தில் மே.வங்கம் சென்று மம்தா பானர்ஜியுடனும் பேசியிருந்தார்.
சோனியா சந்திப்பு
இன்று இறுதிகட்ட லோக்சபா தேர்தல் முடிவுக்கு வரும் நிலையில், மாலை 4.30 மணி முதல் 5.10 மணி வரையில் புதுடில்லி, 10, ஜன்பத்தில் உள்ள இல்லத்தில், காங்., முன்னாள் தலைவர் சோனியாவை சந்தித்து ஆலோசித்துள்ளார், சந்திரபாபு நாயுடு.






உச்சகட்ட பரபரப்பு :


ஏறத்தாழ தேர்தல் முடிவுகள் வரும் முன்னரே பா.ஜ., அல்லாத பல்வேறு கட்சிகளை சந்திரபாபு நாயுடு சந்தித்து ஆலோசித்து வருவது, தலைநகர் டில்லி அரசியலில் உச்சகட்ட பரபரப்பை பற்றவைத்துள்ளது.

இந்த சந்திப்புகளின் விளைவுகள், மே 23 தேர்தல் முடிவுகள் வெளிவரும் நாளில், சோனியா கூட்டியுள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் தெரியவரும் என்கின்றனர், அரசியல் நோக்கர்கள்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X