சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : மே 19, 2019 | கருத்துகள் (1)
Advertisement
'டவுட்' தனபாலு

காந்திய மக்கள் இயக்க தலைவர், தமிழருவிமணியன்: அ.தி.மு.க., ஆட்சி முடிவுக்கு வரும் போது, ரஜினி அரசியலுக்கு வருவார்.

டவுட் தனபாலு: மே, 23க்குப் பின், ரஜினி முக்கிய அறிவிப்பை வெளியிடுவார்னு, அவரது சகோதரர் புதிர் போட்டு வர்றாரு... நீங்களோ, இப்படிச் சொல்றீங்க... அ.தி.மு.க., ஆட்சி முடிவுக்கு வந்ததும், ரஜினி அரசியலுக்கு வருவாரா... இல்லை, சினிமா வாய்ப்பு முடிவுக்கு வந்ததும், அரசியலுக்கு வருவாரா என்பது தான், 'டவுட்'டாக இருக்கு...!

காங்., பொதுச் செயலர் பிரியங்கா: என் குழந்தைகளை, நான், அரசியலுக்கு அழைத்து வர மாட்டேன். அவர்களை, வேறு துறைக்கு செல்ல அறிவுறுத்தி வருகிறேன்.

டவுட் தனபாலு: நேற்று வரைக்கும், நீங்களும் இப்படித்தான் சொல்லி வந்தீங்க... திடீர்னு, கட்சிப் பொறுப்புக்கு வந்துட்டீங்க... உங்க குழந்தைகள், இப்போது தான் பள்ளிப் படிப்பு படிக்குறாங்க... ஓட்டு போடும் வயதைத் தொட்டதும், பாரம்பரிய முறைப்படி, காங்.,கைக் கட்டியாள, களத்தில் குதிக்க மாட்டாங்க என்பதற்கு, என்ன உத்தரவாதம்... அப்புறம், வேறு துறையில் இருக்கும், உங்க கணவர் ராபர்ட் வாத்ராவுக்கு, அரசியல் ஆசை துளிர்விட்டிருக்கே... அவருக்கும், ஏதும் அறிவுரை சொல்வீங்களா என்பது தான், மக்களின், 'டவுட்!'

ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர், லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜ் பிரதாப்: என் தந்தை அருகில் இல்லாதது, மிக வருத்தமாக இருக்கிறது.

டவுட் தனபாலு: இப்போ விசனப்பட்டு என்ன பிரயோஜனம்... 'தப்பான வழியில் பொருள் ஈட்டாதீங்க'ன்னு, ஆரம்பித்திலேயே அழுது புலம்பி இருந்தால், அவரும், ஊழல் வழக்குல, சிறைக்குச் சென்றிருக்க மாட்டாரு... நீங்களும் இப்படித் தனியாக நின்று புலம்ப வேண்டியது இருக்காது... தந்தையின் செயல்பாட்டின் மூலம், இப்போதாவது பாடம் படித்தீங்களா என்பது தான், மக்கள் கேட்க விரும்பும், 'டவுட்'டாக இருக்கு...!

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
20-மே-201905:48:01 IST Report Abuse
D.Ambujavalli அன்று ராஜீவ் கொலை செய்யப்பட்டபோது உங்கள் தாயார் ‘போதும், இந்த அரசியலும், மரணங்களும் என் குழந்தைகள் அரசியல் பக்கம் வரவே வேண்டாம்’ என்றார். இப்போது ஒன்றுக்கு இரண்டு. சும்மா குழந்தைகள் பெரியவர்களாகு முன்பே நீங்களே தீர்மானிக்க வேண்டாம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X