பதிவு செய்த நாள் :
மேற்கு வங்க தேர்தலில் நேற்றும் வன்முறை

கோல்கட்டா:மேற்கு வங்கத்தில், கடந்த ஆறு கட்ட ஓட்டுப் பதிவின் போதும், சில இடங்களில் வன்முறை வெடித்தது. தற்போது, ஏழாவது கட்ட ஓட்டுப் பதிவின் போதும், பல இடங்களில் வன்முறை வெடித்தது.

 மேற்கு வங்கம், தேர்தல்,   வன்முறை


கோல்கட்டாவில் நடந்த, பா.ஜ., தலைவர், அமித் ஷாவின் தேர்தல் பிரசார பேரணியின் போது, வன்முறை வெடித்தது. அதனால், அங்கு, ஒரு நாளைக்கு முன்பாகவே, பிரசாரம் நிறுத்தப்பட்டது.


இந்த நிலையில், நேற்று ஓட்டுப் பதிவு நடந்த, ஒன்பது தொகுதிகளிலும், வன்முறை

சம்பவங்கள் நடந்ததாக தகவல்கள் வந்து உள்ளன. ஜாதவ்புரில், திரிணமுல் காங்கிரசார், கள்ள ஓட்டு போட்டதாக, அந்தத் தொகுதி, பா.ஜ., - எம்.பி., அனுபவம் ஹாஸ்ரா புகார் கூறியுள்ளார்.

''தன்னை ஓட்டுச் சாவடிக்குள் நுழைவதற்கு அனுமதிக்கவில்லை,'' என, பாட்பராதொகுதியின், திரிணமுல், காங்., - எம்.பி., மதன் மித்ரா கூறினார்.வடக்கு கோல்கட்டா தொகுதியின் இரண்டு ஓட்டுச் சாவடிகளில், கையெறி குண்டுகள் வீசப்பட்டதாக கூறப்படுகிறது. பா.ஜ., வேட்பாளர் ராகுல் சின்ஹா மீது, கல் வீசி தாக்குதல் நடந்ததாகவும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், பா.ஜ., மூத்த தலைவரும், ராணுவ அமைச்சருமான, நிர்மலா சீதாராமன் கூறியதாவது: மேற்கு வங்கத்தில், கடந்த ஆறு கட்டங்களில் நடந்த ஓட்டுப் பதிவின் போது நடந்த வன்முறைகளைப் போலவே,7 வது கட்டத்திலும் நடந்துள்ளது. கடைசி கட்டத்தில் தேர்தல் நடந்த, ஒன்பது தொகுதிகளில், ஆறு தொகுதிகளில், பா.ஜ., வேட்பாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.

மாநிலத்தில் தொடர்ந்து வன்முறை நடந்து

Advertisement

வருகிறது. அதனால், தேர்தல் நடத்தை விதி முறைகள் அமலில் இருக்கும், வரும், 27ம் தேதி வரை, துணை ராணுவ படைகள் மாநிலத் தில் இருக்க வேண்டும். பழி வாங்குவோம் என, முதல்வரும்,திரிணமுல், காங்., தலைவரு மான, மம்தா பானர்ஜி, வெளிப்படையாக கூறியுள்ளார்.


அதனால், திரிணமுல், காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டளிக்காத மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், துணை ராணுவப் படை, மேற்கு வங்கத்தில் தொடர வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-மே-201912:43:46 IST Report Abuse

சேரன் செங்குட்டுவன்மேற்கு வங்கத்தில் சட்டவிரோதமாக குடியிருக்கும் வேற்று நாட்டவர்களை முதலில் பிடித்து வெளியேற்றவும். அவர்களுக்குத் துணைபோகும் மம்தா பானர்ஜியை சிறையில் தள்ளவும் அல்லது அவர்களுடன் சேர்த்து வங்காள தேசத்துக்கு அனுப்பவும்.

Rate this:
ganapati sb - coimbatore,இந்தியா
20-மே-201911:38:18 IST Report Abuse

ganapati sbபலகட்ட தேர்தல் நடத்தியும் வங்கத்தில் நடக்கும் வன்முறை ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல ஜெயலலிதா போல சட்ட ஒழுங்கை சரியாக பராமரிக்க கற்றுக்கொண்டபின் மம்தா மோடியா லேடியா என கேட்கலாம்

Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
20-மே-201908:03:49 IST Report Abuse

Bhaskaranமுப்பது ஆண்டுகளாக கம்யூனிசத்தின் பிடியில் இருந்து வளர்ச்சியே இல்லாமல் போன வங்கம்

Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X