பதிவு செய்த நாள் :
குகைக்குள் 17 மணி நேரம் மோடி தியானம்

கேதார்நாத்:''கேதார்நாத் கோவிலில்,நாட்டு மக்களின் நலனுக்காக கடவுளிடம் வேண்டினேன். ''தேர்தல் நடத்தை விதிமுறை கள் அமலில் உள்ள நிலையில், கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் கோவில்களில் வழிபாடு நடத்த, அனுமதி அளித்த, தேர்தல் ஆணையத் துக்கு நன்றி,'' என, பிரதமர் நரேந்திர மோடி, நெகிழ்ச்சியுடன் கூறினார். பரபரப்பு

லோக்சபா தேர்தலுக்கான பிரசாரம் முடிவடைந்த நிலையில், கடைசி கட்ட ஓட்டுப் பதிவு, நேற்று நடந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம், உத்தரகண்ட் மாநிலம், கேதார்நாத்தில் உள்ள பழமையான சிவன் கோவிலுக்கு, பிரதமர் மோடி வந்தார். இமயமலை அடிவாரத்தில், கடல் மட்டத்தில் இருந்து, 11 ஆயிரத்து, 755 அடி உயரத்தில் உள்ள இந்த கோவிலுக்கு, கோடை காலத்தில் மட்டுமே,பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுவர்.

இந்தாண்டு, சமீபத்தில், கோவில் நடை திறக்கப்பட்டதை அடுத்து, பிரதமர் மோடி வருகை தந்தது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.கேதார்நாத் கோவிலில் வழிபாடு நடத்திய மோடி, காவி

உடையணிந்து, அங்குள்ள குகையில், நேற்று முன் தினம் தியானத்தில் அமர்ந்தார். 17 மணி நேரம், இந்த குகையில், அவர் தியானம் செய்தார்.

பக்தர்கள் தியானம் செய்வதற்காக, இது போன்ற குகைகள் கேதார்நாத்தில் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த குகையில், ஒருவர், அதிகபட்சமாக, மூன்று நாட்கள் தங்கலாம். ஒரு நாளைக்கு, 990 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இங்கு, மூன்று வேளை உணவு, படுக்கை, உதவியாளர் உள்ளிட்ட வசதி செய்து தரப்படும்.
குகையில் தியானத்தை முடித்த பிரதமர், நேற்று, கோவில் அதிகாரிகளை சந்தித்து, அங்கு நடந்து வரும் சீரமைப்பு பணிகள், வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். பின், கோவிலுக்கு வெளியில் நின்றிருந்த பொதுமக்களை பார்த்து, கையசைத்தார்.இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம், அவர் கூறியதாவது: கேதார் நாத்துக்கு, நான் வருவது, இது முதல் முறையல்ல; பல முறை வந்துள்ளேன். இங்கு வந்தது, எனக்கு கிடைத்த வரம். இதை, பேரதிர்ஷ்டமாக கருதுகிறேன்.
நன்றி

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், கோவிலில் வழிபாடு நடத்த அனுமதி

Advertisement

அளித்த, தேர்தல் ஆணையத்துக்கு நன்றி. தேர்தல் வெற்றிக்கு பிரார்த்தனை செய்வதற் காக, இங்கு வரவில்லை. கடவுளி டம் எதுவும் கேட்கவில்லை. மக்கள் நலனுக்காகவே பிரார்த்தனை செய்தேன். கேதார்நாத்தில் நடந்து வரும் வளர்ச்சி பணிகள், திருப்தி அளிக்கின்றன.இவ்வாறு, அவர் கூறினார். இதைத் தொடர்ந்து, பத்ரிநாத் கோவிலிலும், பிரதமர் மோடி, நேற்று தரிசனம்செய்தார்.

தேர்தல் நடத்தை விதிமீறல்:


எதிர்க்கட்சிகள் ஆவேசம்லோக்சபா தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், பிரதமர் மோடி, கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் கோவிலுக்கு சென்றது மற்றும் அங்கு செய்தியாளர்களை சந்தித்தது குறித்து, எதிர்க் கட்சிகள், தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளன.

திரிணமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் டெரக் ஓ பிரெயின் கூறியதாவது:தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், பிரதமர் மோடி, கேதார்நாத்தில் செயல்படுத்த உள்ள திட்டங்கள் குறித்து பேட்டி அளித்தது, அப்பட்டமான விதிமீறல்; இது, சரியான நடைமுறை அல்ல.


கடைசி கட்ட ஓட்டுப் பதிவு நடந்து வரும் நிலையில், பிரதமர் மோடியின் இரண்டு நாள் பயணமும், மீடியாக்களில் நேரடியாக ஒளி பரப்பாயின. இது குறித்து, தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.


மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ், எம்.பி., பிரதீப் பட்டாச்சார்யா கூறுகையில், ''பிரதமர் மோடியின் இரண்டு நாள் பயணம் முழுவதும், 'டிவி' சேனல்களில் ஒளிபரப்பப் பட்டன; இது, வாக்காளர்களை மறைமுகமாக, பா.ஜ.,வுக்கு ஓட்டளிக்க துாண்டும் செயலா கவே கருத வேண்டும். தேர்தல் நடத்தை விதி முறைகளை மீறிய, பிரதமர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.


Advertisement

வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sridhar - Chennai,இந்தியா
20-மே-201920:10:19 IST Report Abuse

sridharஒரு ஹிந்து என்ற வகையில் த்யானம் செய்ய அவருக்கு உரிமை இல்லையா ? அப்போ நீங்க தொப்பி போட்டுண்டு கஞ்சி குடிக்க போகக்கூடாது, சரியா.

Rate this:
Rajan - Alloliya,இந்தியா
20-மே-201917:43:47 IST Report Abuse

Rajan, ஆப்பு சூப்பர், சும்மா அதிருதில்ல 🤣🤣🤣🤣

Rate this:
இந்தியன் kumar - chennai,இந்தியா
20-மே-201914:56:36 IST Report Abuse

இந்தியன் kumarமோடிஜி திட்டுபவர்கள் யாரும் நல்லவனாக இருக்க முடியாது இது அவரவர் மன சாட்சிக்கு மட்டும் தான் தெரியும்.

Rate this:
மேலும் 23 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X