ஆத்தூரில் கள்ளத்துப்பாக்கி தயாரிப்பு: 3 பேர் எஸ்கேப்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆத்தூரில் கள்ளத்துப்பாக்கி தயாரிப்பு: 3 பேர் 'எஸ்கேப்'

Added : மே 19, 2019 | கருத்துகள் (2)
 ஆத்துார், கள்ளத்துப்பாக்கி, தயாரிப்பு, 3பேர், 'எஸ்கேப்'

ஆத்தூர் :சேலம் வாழப்பாடி அருகே வனப்பகுதியில் கள்ளத்துப்பாக்கி தயாரித்து தப்பிய பெண் உட்பட 3 பேரை வனத்துறையினர் தேடுகின்றனர்.
வாழப்பாடி அருகே அருநுாற்றுமலை பெரியகுட்டிமடுவு மலை கிராமத்தில்,வனப்பகுதி அருகே கள்ளத்துப்பாக்கி தயாரிப்பு இடத்தை வனத்துறையினர் கண்டுபிடித்தனர்.
சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய சென்றபோது பெண் உட்பட 3 பேர் தப்பினர். அங்கிருந்த இரண்டு துப்பாக்கிகள், 20 துப்பாக்கி கட்டைகள், உதிரி பாகங்கள் மற்றும் உபகரணங்களை வனத்துறையினர் கைப்பற்றினர். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த வரதன் மகன் ராமர், கரியான் மகன் ராமர் மற்றும் பெண் ஈடுபட்டது தெரிந்தது. மூன்று பேரையும் தேடுகின்றனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X