கோர்ட் செய்தி

தமிழ்நாடு

வாடகை வழக்கு, 'அப்பீல்' புதிய தீர்ப்பாயம்?

Added : மே 19, 2019
Advertisement

- நமது நிருபர் -தமிழகத்தில், வாடகை தொடர்பான வழக்கு களுக்கு, தனி தீர்ப்பாயம் அமைப்பதற்கான வழிமுறைகள் குறித்து, வீட்டு வசதித்துறைஉயரதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
நில உரிமையாளர், வாடகைதாரர் உரிமைகள், பொறுப்புகளை உறுதி செய்வதற்கான புதிய சட்டம், 2017ல் இயற்றப்பட்டது. இதை அமல்படுத்துவதற்கான விதிகள், பிப்., 22ல் வெளியிடப்பட்டன.இச்சட்டப்படி, வாடகை தொடர்பான பிரச்னைகளை விசாரிக்க, வாடகை ஆணையங்களை அமைக்க, மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டு வருகின்றனர். கோட்ட வருவாய் அதிகாரிகள், இதற்கான பொறுப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.இதற்கு அடுத்தபடியாக, வாடகை வழக்குகளை விசாரிக்க, 32 வாடகை நீதிமன்றங்கள் அமைத்து, அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, இச்சட்டப்படி, வாடகை நீதிமன்ற உத்தரவுகளை எதிர்த்து, மேல்முறையீடு செய்ய, தனி தீர்ப்பாயம் அமைக்கப்பட வேண்டும்.இது குறித்து, வீட்டுவசதி துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், 'தனி தீர்ப்பாயம் அமைப்பதா அல்லது ஏற்கனவே உள்ள, மற்ற வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயத்தை, இதற்கு மாற்றுவதா என, ஆலோசித்து வருகிறோம்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X