மது குடிப்பதால் 200 வகை நோய்கள்!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'மது குடிப்பதால் 200 வகை நோய்கள்!'

Added : மே 19, 2019

சென்னை:'மது அருந்துவதால், 200 வகையான நோய்கள் தாக்குகின்றன' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:மருத்துவ உலகின், புனித இதழாக போற்றப்படும், 'லான்செட்' ஆங்கில இதழில், உலக அளவில், மது நுகர்வு ஆராய்ச்சி கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. ஜெர்மனியில் உள்ள, டி.யூ.டிரெஸ்டன் பல்கலை கழகம் வாயிலாக நடத்தப்பட்ட, அந்த ஆய்வில், இந்தியாவில், மது நுகர்வு, ஏழு ஆண்டுகளில், 38 சதவீதம் அதிகரித்துள்ளது என, தெரிவிக்கப்பட்டுள்ளது.மது குடிப்பதால், சிறிது நேரம் கிடைக்கும் போதை மட்டும் தான் குடிகாரர்களுக்கு பெரிதாக தெரிகிறது. ஆனால், மது அருந்துவதால், 200 வகையான நோய்கள் தாக்குகின்றன; குடிகாரர்களை நம்பியிருக்கும் குடும்பங்கள் சீரழிகின்றன.களவு முதல் பாலியல் வன்கொடுமை வரை, அனைத்து வகையான குற்றங்களும் நிகழ்கின்றன. வருவாய்க்கு ஆசைப்பட்டு, மக்களின் வாழ்க்கையை, அரசுகள் பறிக்கக் கூடாது.தமிழகத்தில், மதுவிலக்குக்காக போராடி வரும் நிலைமை மாறி, நாடு முழுவதும், மது விலக்குக்காக, போராட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. நாடு முழுவதும், படிப்படியாக, மதுவிலக்கை அமல்படுத்துவதை தவிர, வேறு வழியில்லை என்ற நிலை, இப்போது ஏற்பட்டிருக்கிறது. எனவே, மத்திய, மாநில அரசுகள், மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.இவ்வாறு, ராமதாஸ் கூறியுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X