அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஓட்டுக்கு பிரியாணி அ.தி.மு.க., புகார்

Added : மே 19, 2019 | கருத்துகள் (2)
Advertisement

சென்னை:'வாக்காளர்களுக்கு பிரியாணி ஏற்பாடு செய்த, தி.மு.க., வேட்பாளர்கள் மற்றும் ஏஜன்ட்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தலைமை தேர்தல் அதிகாரியிடம், அ.தி.மு.க., புகார் அளித்துள்ளது.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவிடம், அ.தி.மு.க., தரப்பில் அளிக்கப்பட்ட புகார்:இடைத்தேர்தல் நடக்கும் சூலுார், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய, நான்கு சட்டசபை தொகுதிகளில், தி.மு.க., வேட்பாளர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள், பிரியாணி தயாரித்துள்ளனர். தங்களுக்கு ஆதரவாக, ஓட்டளிக்கும் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக, இதை ஏற்பாடு செய்துள்ளனர்.இதற்காக, அதிகளவில் இறைச்சி மற்றும் காய்கறிகளை வாங்கியுள்ளனர். தொகுதிகளின் தலைநகர்களில், இவை தயாரிக்கப்பட்டு, பாக்கெட்டுகளில் அடைத்து, வினியோகம் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு தொகுதியிலும், 50 ஆயிரம் பாக்கெட்கள் வரை, வினியோகம் செய்யப்பட்டுள்ளன.இது, தேர்தல் நடத்தை விதிமீறல். இதுதொடர்பாக, தி.மு.க., வேட்பாளர்கள் மற்றும் அவர்களது ஏஜன்ட்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரவக்குறிச்சி மற்றும் வேலாயுதம் பாளையம் பகுதிகளில், வாக்காளர்களை, ஓட்டளிப்பதற்காக சட்டவிரோதமாக அடைத்து வைத்தனர். இதற்கு காரணமான, தி.மு.க., வேட்பாளர் செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தாமரை - பழநி,இந்தியா
20-மே-201921:13:17 IST Report Abuse
தாமரை ஜனநாயகத் தேர்தல் நடை முறைகளை தமிழக கழகங்கள் காசு கட்டிங் சோறு கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்கி கேலி செய்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
20-மே-201908:01:19 IST Report Abuse
Bhaskaran பிரியாணிக்கு விலைபோன தமிழக வாக்காளர்கள் நீடு வாழ்க
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X