அரசியல் செய்தி

தமிழ்நாடு

'அன்று சொன்னதும்; இன்று சொல்வதும்!'

Added : மே 19, 2019 | கருத்துகள் (1)
Advertisement

சென்னை:'இலங்கையில், 45 பேரை கொன்றவர்கள், எந்த மதத்தை சார்ந்தவர்கள் என்பதை, கமல் பட்டியலிட்டு பேச முடியுமா' என, த.மா.கா., மூத்த துணைத் தலைவர், ஞானதேசிகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரது அறிக்கை:சுதந்திர இந்தியாவின், முதல் பயங்கரவாதி, ஹிந்து என, நடிகர் கமல் பேசியது, மிகப்பெரிய சர்ச்சையையும், விவாதங்களையும் உருவாக்கி இருக்கிறது. இந்திராவை சுட்டவர்கள், எந்த மதத்தை சார்ந்தவர்கள்; மும்பையில், 100க்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை சுட்டுக் கொன்ற கசாபும், அவனது கூட்டாளிகளும், எந்த மதத்தை சாந்தவர்கள்?இலங்கையில், சர்ச் மற்றும் விடுதியில் வெடிகுண்டு வைத்து, 45 பேரை கொன்ற வர்கள், எந்த மதத்தை சார்ந்தவர்கள்; ராஜிவை வெடிகுண்டு வைத்து சாகடித்தவர்கள், எந்த இனத்தை சேர்ந்தவர்கள்?கமலின் அகராதியில், இவர்கள், எந்த வரிசையில் வருவர் என்பதை பட்டியலிட்டு, பேச முடியுமா?'காந்தியை சுட்டவன், ஒரு ஹிந்து' என, அன்று வானொலியில் அறிவிக்கப்பட்டது. அதற்கு காரணம், பாகிஸ்தான் பிரிவினை நடந்தவுடன், ஹிந்து, முஸ்லிம் கலவரம் வெடித்தது. அன்று, இந்த தேசம் காக்க வெளியிடப்பட்ட அறிவிப்பு அது. இதற்கும், முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் பள்ளப்பட்டியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில், கமல் பேசியதற்கும் வேறுபாடு உள்ளது.அதாவது, அன்று சொன்னது, கலவரத்தை தடுக்க; இன்று சொல்வது, ஓட்டுக்காக. இந்த பிரச்னையை, எல்லாரும் இத்துடன் கைவிட்டு, கமலுக்கு எதிராக கொடுக்கப்பட்டுள்ள புகார்களையும், திரும்ப பெற வேண்டும்.இவ்வாறு, ஞானதேசிகன் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
20-மே-201907:53:15 IST Report Abuse
Bhaskaran கமல் எஸ்ரா சற்குணத்தின் ஆசிபெற்றுள்ளவர்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X