பதிவு செய்த நாள் :
மோடிக்கு மக்கள் ஆசி உள்ளது
ஓட்டளித்த ஜோஷி நெகிழ்ச்சி

வாரணாசி:''பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்களின் ஆசி உள்ளது. நான் யார், அவருக்கு ஆசி வழங்க,'' என, பா.ஜ., நிறுவனர்களில் ஒருவரான, மூத்த தலைவர், முரளி மனோகர் ஜோஷி, 85, கூறினார்.

மோடி, மக்கள் ஆசி, ஜோஷி, நெகிழ்ச்சி


உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்து உள்ளது. இங்குள்ள, வாரணாசி லோக்சபா தொகுதியில், பிரதமர், மோடி

மீண்டும் போட்டியிடுகிறார். நேற்று நடந்த, ஏழாவது கட்டத் தேர்தலில், இந்தத் தொகுதிக்கும் ஓட்டுப் பதிவு நடந்தது.பா.ஜ., நிறுவனர்களில் ஒருவரான, முரளி மனோகர் ஜோஷி, ஓட்டளித்தார்.அப்போது, 'பிரதமர் மோடிக்கு உங்களுடைய ஆசி உள்ளதா' என, நிருபர்கள் கேட்டனர். ''அவருக்கு, மக்களின் ஆசி உள்ளது. நான் யார், ஆசி வழங்க,'' என்று, ஜோஷி, நெகிழ்ச்சியாக பதிலளித்தார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய், மூத்த தலைவர்கள் அத்வானி, ஜோஷி ஆகியோர் இணைந்து, பா.ஜ.,வை துவக்கினர். நான்கு முறை, லோக்சபாவுக்கும், இரண்டுமுறை, ராஜ்யசபாவுக்கும், எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். கட்சியின் தேசியத் தலைவராகவும், மத்திய அமைச்சராகவும், ஜோஷி பணியாற்றியுள்ளார்.


கடந்த, 2009ல், வாரணாசி தொகுதியில் அவர்

Advertisement

வெற்றி பெற்றார். நரேந்திர மோடி போட்டியிடு வதற்காக, 2014ல், கான்பூர் தொகுதிக்கு மாறினார். மோடி பிரதமரான பின், கட்சியில், 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பதவி இல்லை என்ற நடைமுறை அமலுக்கு வந்தது. அதனால், அத்வானி, ஜோஷி போன்றவர் களுக்கு, இந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரப்படவில்லை.


Advertisement

வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnamurthy Ramaswamy - Bangaluru,இந்தியா
20-மே-201919:17:36 IST Report Abuse

Krishnamurthy Ramaswamyசுடாலினுக்கு வாழ் பிடிக்கும் திருமா விற்கு ஒரு கேள்வி " இதுவரை தமிழகத்தில் எந்த பட்டியல் இனத்தவர் முதல்வர் ஆகியிருக்கிறார்கள் .ஒருவரும் இல்லை . மாற்றி மாற்றி இரண்டு திராவிட கட்சிகளும் ஆட்சிக்கு வருவதற்கு முக்கிய காரணம் பட்டியல் இனத்தவர்கள் வோட்டு தான் . ஆனால் அவர்களுக்கு கிடைப்பது எல்லாம் எள்ளி நகை செய்யும்படியான போஸ்டுகள் தான் . ஒரு திருமாவிற்க்கோ , முந்தய மத்திய அமைச்சர் ராஜாவுக்கோ ஏன் முதலவர் போஸ்ட்டு கொடுக்கலாமே இவர்களில் பெயரை முன் நிறுத்தி அடுத்த தமிழக தேர்தலில் சுடாலின் வாக்கு கேட்கலாமே .முற்படுத்தப்பட்ட கணிசமான அளவு இருக்கும் உத்தர பிரதேசத்தில் மாயாவதி முதல்வர் ஆனார் .

Rate this:
Suresh - chennai,இந்தியா
20-மே-201907:43:40 IST Report Abuse

Sureshமோடியின் தொகுதி காசி. ஆனா மோடிக்கு கிடைக்காது மக்களின் ஆசி. ஏன்னா, நீயே உக்காந்து யோசி. மோடி மேல படர்ந்திருக்கு ஊழல் பாசி.

Rate this:
Srinivas - Chennai,இந்தியா
20-மே-201911:14:31 IST Report Abuse

Srinivasமோடிக்கு மக்களின் ஆசி என்பது பொய். EVM இல் செய்த சூட்சுமம்தான் காரணம். மக்களுக்கு நன்றாக தெரியும் இவர்களுக்கு வாக்களிக்கவில்லை என்பது. ஜெயிப்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்ய தயங்காதவர்கள். ...

Rate this:
sriram - Chennai,இந்தியா
20-மே-201914:07:47 IST Report Abuse

sriramதிரு ஸ்ரீனிவாஸ் அவர்களே, நீங்கள் இங்கு கருத்து எழுதுவதிலிருந்து படிப்பறிவு உள்ளவர் என்று தெரிகிறது. அனால் நீங்கள் போடும் கருத்து அதை பொய்ப்பிக்கிறதே. ஆள் வெச்சு கருத்து போடறீங்களோ? VVPAT முறை வந்து பின்னும் பேக்குத்தனமா எதோ சொல்றீங்களே ...

Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
20-மே-201914:23:07 IST Report Abuse

Malick Rajaகாலம் வெல்லும் காலன் மூலமாக என்பது தெளிவு .. ஏமாற்றுவது எல்லை மீறினால் இறுதியை சந்திப்பது திண்ணம் .. ஒரு உதாரணம் 100. யூனிட் மின்சாரம் இலவசம் என்று ஜெயா ஒட்டுக்கேட்டு ஜெயித்தது நிலைத்திருக்கவில்லை .100.யூனிட் இலவசம் ஆனால் வருமானம் 200.யூனிட் நடுத்தறவர்கத்தினமிருந்து மறைமுக வழியில் பிடுங்கியது . பிடுங்கிக் கொண்டிருப்பது உலகறிந்த உண்மை ..ஆக மோடிக்கும் அதே நிலை ..ஏன் ஒவ்வொரு மனிதனும் தப்பவே முடியாது .. தர்மம் ஒன்றே நிலைக்கும் .. அதர்மம் நிலைப்பதில்லை ...

Rate this:
blocked user - blocked,மயோட்
20-மே-201914:50:35 IST Report Abuse

blocked user"அதர்மம் நிலைப்பதில்லை" - அதைத்தான் நாங்கள் சொல்லுகிறோம் பாய். 60 ஆண்டுகள் ஆண்டவர்கள் ஏழைகளின் எண்ணிக்கையை வளர்த்தார்கள். மதக்கலவரத்தை தூண்டி அதில் குளிர் காய்ந்தார்கள். மத மாற்றம் செய்பவர்களை தாராளமாக அனுமதித்தார்கள் - அரபிகளும் கிறிஸ்தவர்களும் NGO க்கள் என்ற பெயரில் பல லட்சம் கோடிகளை கொண்டு வந்து கொட்டினார்கள். ஊழல் தவிர காங்கிரஸ் சிறப்பாக சொல்லிக்கொள்ளும் அளவில் ஒன்றும் செய்யவில்லை. ஒடுக்கப்பட்டவர்களுக்கு முன்னேற்றம் என்பது கிடையவே கிடையாது. இன்று அதிக அளவில் தலித்துக்கள் பாராளுமன்றத்தில் இருக்கிறார்கள். தலித்துக்கள் தொழில் தொண்டாக மாநாடு கூட ஏற்பாடு செய்தார் மோடி. இஸ்லாம் சொல்லுவது வரியவர்களுக்கு கொடுக்கவேண்டும் என்று... ஆனால் நீங்கள் 100 யூனிட் மின்சாரத்துக்கு மூக்கால் அழுகிறீர்கள். என்ன பாய். அரேபியானாவுடன் இஸ்லாமின் அடிப்படை மறந்து விடுகிறதா? பணம் கண்ணை மறைக்கக்கூடாது. ...

Rate this:
VENKATESAN - chennai,இந்தியா
20-மே-201918:45:30 IST Report Abuse

VENKATESANஸ்ரீனிவாஸ், அப்போ MP rajasthan சட்டிஸ்கர் அசெம்பிளி எலெக்ஷன்ல காங்கிரஸ் வெற்றிக்கு காரணம் EVM மெஷின்ல செய்த சூழ்ச்சி தான் காரணமா ?? ...

Rate this:
TamilArasan - Nellai,இந்தியா
20-மே-201920:32:15 IST Report Abuse

TamilArasanஅட வெட்கம்கெட்ட பயலுவலா....(பஞ்சாப், ராஜஸ்த்தான், MP , சடிஸ்க்கர்) நீங்க வெற்றிபெற்றால் EVM வாழ்க தோத்தால் EVM ஒழிக.... வெட்கமாக இல்லையா தோத்தான்கலி காங்கிரஸ் பாய்ஸ்.... ...

Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
20-மே-201907:39:23 IST Report Abuse

Bhaskaranஇப்படி சொன்னால் ஏதேனும் ஆளுநர்ப்பதவி கிடைக்கலாம் என்னும் நப்பாசை தான் காரணம்

Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X