பொது செய்தி

தமிழ்நாடு

மனை பிரிவுகளில், மின் வாரியத்திற்கு ஒதுக்க உத்தரவு

Added : மே 19, 2019
Advertisement

'பொது கட்டட விதிகளின் அடிப்படையில், புதிதாக உருவாக்கப்படும் மனைப் பிரிவுகளில், துணை மின் நிலையம், மின் மாற்றிகள் அமைக்க, 0.5 சதவீத நிலம் ஒதுக்க வேண்டும்' என, தமிழக மின்சார வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில், அனைத்து உள்ளாட்சி பகுதிகளிலும் அமல்படுத்தும் வகையில், பொது கட்டட விதிகள், பிப்., 4ல் அறிவிக்கப்பட்டன. இவற்றை அமல்படுத்தும் நடவடிக்கைகளை, சம்பந்தப்பட்ட துறைகள் எடுத்து வருகின்றன.நகராட்சி நிர்வாகத் துறை, இந்த விதிமுறைகளை பிறப்பித்தாலும், அதை அமல்படுத்துவதில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதில், புதிய மனைப்பிரிவுகளை ஏற்படுத்த, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.இதன்படி, புதிய மனைப் பிரிவுகளை உருவாக்குவோர், அதன் மொத்த பரப்பளவில், 0.5 சதவீத நிலத்தை, மின் வினியோக கட்டமைப்புகளுக்காக ஒதுக்க வேண்டும். இவ்வாறு ஒதுக்கப்படும் நிலங்களை, மனைப்பிரிவு உரிமையாளர்கள், மின்சார வாரியத்துக்கு, 'கிப்ட் டீட்' எனப்படும், கொடை ஆவணம் வாயிலாக ஒப்படைக்க வேண்டும்.பொது கட்டட விதிகளில் உள்ள, இந்த பிரிவுகளை அமல்படுத்துவதற்கான நிர்வாக உத்தரவை, மின்சார வாரிய தொழில்நுட்ப பிரிவு பிறப்பித்து உள்ளது.அதன்படி, புதிய மனைப்பிரிவு உருவாக்குவோர், மின்சார கட்டமைப்புகளுக்கான, 0.5 சதவீத நிலத்தை, அந்தந்த மின் பகிர்மான வட்ட கண்காணிப்பு பொறியாளர் பெயருக்கு, கொடை ஆவணம் வாயிலாக ஒப்படைக்க வேண்டும்.இவ்வாறு பெறப்படும் நிலத்தை, உரிய நோக்கத்துக்கு, மின்சார பகிர்மான கோட்ட அதிகாரிகள் பயன்படுத்த வேண்டும். உடனடி பயன்பாடு இல்லாத நிலையில், அந்த நிலங்களை பாதுகாப்பாக வைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X