பொது செய்தி

இந்தியா

தனித்தனியாக ஓட்டளித்த ஒட்டிப் பிறந்த சகோதரிகள்

Added : மே 19, 2019
Advertisement
 தனித்தனியாக ஓட்டளித்த ஒட்டிப் பிறந்த சகோதரிகள்

பாட்னா:பீஹார் மாநிலத்தை சேர்ந்த, தலை ஒட்டி பிறந்த இரட்டை சகோதரிகள், தனித் தனி வாக்காளர்களாக கருதி, நேற்று ஓட்டளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
இந்திய தேர்தல் வரலாற்றில், இது போன்ற நிகழ்வு நடந்தது, இதுவே முதல் முறை.பீஹார் மாநிலம், பாட்னாவில் வசிக்கும் ஏழைக் குடும்பத்தை சேர்ந்த இரட்டை சகோதரிகள், சபா மற்றும் பாரா. இவர்களுக்கு, 23 வயதாகிறது. பிறக்கும்போதே, இவர்கள், தலை ஒட்டி பிறந்தனர்.இருவரையும் தனித்தனியாக பிரிப்பதற்கு, டில்லி, 'எய்ம்ஸ்' மருத்துவனை டாக்டர்கள் முயற்சித்தனர். ஆனால், உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால், அந்த முடிவை கைவிட்டனர்.இவர்கள், 2015ல், பீஹார் சட்டசபை தேர்தலில் ஓட்டளிக்க அனுமதிக்கப்பட்டனர். ஆனால், ஒரே வாக்காளர் என்ற அடிப்படையில், ஒரு ஓட்டு மட்டுமே அளிக்க, இவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஒரு வாக்காளர் அடையாளர் அட்டை மட்டுமே, இவர்களுக்கு வழங்கப்பட்டது. ஒருவர் ஓட்டளிக்கும்போது, அவர் யாருக்கு ஓட்டளித்தார் என்பதை, மற்ற யாரும் தெரிந்து கொள்ள கூடாது. தேர்தல் நடைமுறையில் அது, முக்கியமான விதிமுறை என்பதால், அவர்கள், ஒரே வாக்காளர்களாக கருதப்பட்டனர்.இந்நிலையில், இந்த சகோதரிகள், தங்களை தனித் தனி வாக்காளர்களாக கருதும்படி, வாக்காளர் அடையாள அட்டை கேட்டு விண்ணப்பித்திருந்தனர்.இருவரது தலையும், எதிரெதிர் திசையில் இருப்பதால், ஒருவர் ஓட்டளிப்பதை, மற்றவர் பார்ப்பதற்கு வாய்ப்பு இல்லை என்ற முடிவுக்கு தேர்தல் அதிகாரிகள் வந்தனர். எனவே, அவர்களை தனித் தனி வாக்காளர்களாக அங்கீகரித்து, தனித் தனி வாக்காளர் அடையாள அட்டைகளை வழங்கினர்.பீஹாரில் உள்ள பாட்னா சாகிப் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட ஓட்டுச் சாவடிக்கு நேற்று வந்த சகோதரிகள், தனித்தனியாக, தங்கள் ஓட்டுகளை அளித்தனர். ஓட்டுச் சாவடிக்கு வெளியில் வந்த சகோதரிகள், இது, தங்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்ததாக, மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டனர்.நம் நாட்டின் தேர்தல் வரலாற்றில், இதுபோன்ற நிகழ்வு நடப்பது, இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X