தமிழ்நாடு

அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை; ஆங்கில வழியில் சேர்க்க பெற்றோர் ஆர்வம்

Added : மே 19, 2019
Advertisement

உடுமலை: நடப்பாண்டில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் நடக்கும் மாணவர் சேர்க்கையில், ஆங்கிலவழிக் கல்விக்கு பெற்றோர் அதிக ஆர்வம் காட்டுவதாக, ஆசிரியர்கள் கூறினர்.

புதிய கல்வியாண்டு, துவங்கவிருப்பதையொட்டி, பள்ளிகளில் மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது. துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் மட்டுமின்றி, கடந்த இரண்டாண்டுகளாக, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளிலும், மாணவர் எண்ணிக்கை சரிவு ஏற்பட்டது. இதை கட்டுப்படுத்த, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

புதிய கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை அரசு பள்ளிகளில் தற்போது நடக்கிறது. மாணவர்கள், ஆங்கிலம் அறிந்திருப்பதோடு மட்டுமின்றி, அம்மொழியில் தேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என, தற்போதைய சூழலில் பெற்றோரின் விருப்பமாக உள்ளது. இதன் விளைவு பள்ளிகளிலும் எதிரொலித்துள்ளது.தனியார் பள்ளிகளிலிருந்து வெளியேறி, உயர்நிலைக்கு அரசு பள்ளிகளில், மாணவர்களை சேர்க்க விரும்பும் பெற்றோரின் எண்ணிக்கை, கடந்த இரண்டாண்டுகளாகவே அதிகரித்து வருகிறது.

அவ்வாறு, மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர்க்க விரும்பும் பெற்றோர், ஆங்கில வழிக் கல்வியைத்தான் தேர்ந்தெடுக்கின்றனர். கடந்தாண்டிலேயே, உடுமலை சுற்றுப்பகுதியில் உள்ள சில பள்ளிகளில், ஆங்கில வழிக்கல்வி மூன்று பிரிவாகவும், தமிழ்வழிக்கல்வி ஒரு பிரிவாகவும் வகுப்புகள் பிரிக்கும் வகையில் எண்ணிக்கை இருந்துள்ளது.புதிய கல்வியாண்டிலும், சேர்க்கையில் ஆங்கில வழிக் கல்வியை தேர்ந்தெடுப்பவர்கள்தான் அதிகம் வருவதாக, ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆங்கில வழி கல்விக்கு மவுசு ஏன்?அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், 'புதிய கல்வியாண்டு ஜூன் மாதம் முதல் துவங்குகிறது. இந்த கல்வியாண்டில், ஆங்கில வழிக்கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கைதான் அதிகம் இருப்பதற்கான சூழல் உள்ளது. ஜூன் மாதம் வரை சேர்க்கை நடைபெறும். தற்போது வரை, ஆங்கிலவழிக்குதான், அதிக மாணவர்கள் சேர்ந்துள்ளனர். ஒவ்வொரு பெற்றோரும், தங்கள் குழந்தைகளும், நுனி நாக்கு ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்ற விருப்பத்தால், ஆங்கில வழிக்கல்விக்கு மாறிவருகின்றனர்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X