ஏழாம் கட்டத் தேர்தல் துளிகள்...

Added : மே 19, 2019
Advertisement

சபாநாயகர் ஓட்டளித்தார்லோக்சபா சபாநாயகர், சுமித்ரா மகாஜன், மத்திய பிரதேசத்தின் இந்துார் நகரில் ஓட்டளித்தார். இந்தத் தொகுதியில் இருந்து, எட்டு முறை, எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை. அவருடன், இந்துார் தொகுதியின், பா.ஜ., வேட்பாளர், சங்கர் லால்வானியும் ஓட்டளித்தார்.
சர்ச்சையில் லாலு மகன்
பீஹார் முன்னாள் முதல்வரான, ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர், லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன், தேஜ் பிரதாப் யாதவ், சர்ச்சையில் சிக்கியுள்ளார். பாடலிபுத்ரா தொகுதியில் ஓட்டளிக்க சென்ற போது, அவருடைய பாதுகாவலர்கள், பத்திரிகையாளர் ஒருவரை தாக்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோ வெளியானது. ''ஓட்டளித்து திரும்பிய போது, நிருபர்கள் என்னை சூழ்ந்து கொண்டனர். அப்போது, அங்கிருந்த புகைப்படக்காரர், ரஞ்சன் என்பவர், என்னுடைய கார் கண்ணாடியை உடைத்துள்ளார்; இதில் டிரைவர் காயமடைந்தார். இது, என்னைக் கொல்வதற்கு நடந்துள்ளது சதி,'' என, தேஜ் பிரதாப் கூறினார்.கட்சியின் பொறுப்பை ஏற்றுள்ள, தம்பி தேஜஸ்வியுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, தன் ஆதரவாளர்களை, சுயேச்சையாக தேர்தலில் களம் இறக்கியுள்ளார், தேஜ் பிரதாப்.
உயரமான சாவடி
ஹிமாச்சல பிரதேச மாநிலம், மண்டி லோக்சபா தொகுதிக்குட்பட்ட, தாஷிகனாக்கில் உள்ள ஓட்டுச் சாவடியே, உலகின் மிகவும் உயரமான ஓட்டுச் சாவடியாக உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து, 15 ஆயிரத்து, 256 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்தச் சாவடி, 49 வாக்காளர்களுக்காக அமைக்கப்பட்டு உள்ளது. மொத்தம், 19 பேர் வேட்பாளராக உள்ளனர்.கடும் குளிர் நிலவும் இந்தப் பகுதியில், காலை, 7:00 மணிக்கு ஓட்டுப் பதிவு துவங்கியது. காலை, 9:00 மணிக்கே, பாதிக்கும் மேற்பட்டோர் ஓட்டளித்தனர்.
முதல் வாக்காளர் ஓட்டுப் பதிவு
நாட்டின் முதல் வாக்காளர் என்ற பெருமையை பெற்றுள்ள, ஷியாம் சரண் நேகி, 102, ஹிமாச்சல பிரதேச மாநிலம், கின்னார் மாவட்டத்தில் உள்ள ஓட்டுச் சாவடியில், தன் ஓட்டை பதிவு செய்தார். வயதானதால், கண் பார்வை பாதிப்பு மற்றும் மூட்டு வலி இருந்தபோதும், தன் ஜனநாயகக் கடமையை அவர் நிறைவேற்றினார்.கடந்த, 1952ல் நடந்த முதல் லோக்சபா தேர்தலில், நாட்டின் முதல் ஓட்டை பதிவு செய்தார் நேகி. பருவநிலையைக் கருத்தில் கொண்டு, ஹிமாச்சலில், ஐந்து மாதங்களுக்கு முன்னதாகவே தேர்தல் நடந்தது. அப்போது, ஆசிரியராக பணியாற்றிய நேகி, தன் ஓட்டைப் பதிவு செய்து, தேர்தல் பணியாற்றினார். அதனால், நாட்டின் முதல் ஓட்டைப் பதிவு செய்த வாக்காளர் என்ற பெருமை, அவருக்கு கிடைத்தது. இதுவரை நடந்துள்ள அனைத்து, லோக்சபா, சட்டசபை, உள்ளாட்சித் தேர்தல்களிலும், அவர் ஓட்டளித்து உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X